MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ராகுல் காந்தி கைது ஜனநாயக விரோதம் – முதலமைச்சர் விஜய் கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ராகுல் காந்தி கைது ஜனநாயக விரோதம் – முதலமைச்சர் விஜய் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ராகுல் காந்தி கைது ஜனநாயக விரோதம் – முதலமைச்சர் விஜய் கண்டனம்

தமிழ்நாடு

ராகுல் காந்தி கைது ஜனநாயக விரோதம் – முதலமைச்சர் விஜய் கண்டனம்

Fernandez
Last updated: ஜூலை 22, 2026 4:25 மணி
Fernandez
Share
முதலமைச்சர் விஜய் அறிக்கை வெளியிடுகிறார்
முதலமைச்சர் விஜய்
SHARE

நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் போராடிய ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், ஒன்றிய அரசின் இந்த செயல்பாடு கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று டெல்லியில் நடந்த விரும்பத்தகாத சம்பவத்தைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இன்று நடத்தவிருக்கும் போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவை அளிப்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையைக் கொண்டு வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் அளிக்க மாட்டோம் என்று அவர் கூறியுள்ளார். நீட் தேர்வு போன்றவற்றை ஒழிக்க வேண்டுமானால், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும், அதுவே ஒரே நிரந்தரத் தீர்வு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருவேளை, அதில் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை என்றும், இதை கட்சி தொடங்கியபோதே, கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும் என்றும், அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என்றும், இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும் முதலமைச்சர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKMK StalinNEET Examதமிழக வெற்றிக் கழகம்நீட் தேர்வுமுதலமைச்சர் விஜய்ராகுல் காந்திஜனநாயகம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு பழனி கோவில் நில மோசடி: அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
Next Article ஜனநாயகன் திரைப்படத்தின் போஸ்டர் ஜனநாயகன் புதுச்சேரியில் காலை சிறப்பு காட்சிக்கு அனுமதி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்

டெல்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு: டெல்லி மெட்ரோ அறிவிப்பு

டெல்லியில் போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளதாக டெல்லி…

ஜூலை 22, 2026

உண்ணாவிரதம்: சோனம் வாங்சுக் நிபந்தனை விதித்தார்

லடாக்கிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி உண்ணாவிரதம் இருக்கும்…

ஜூலை 22, 2026

நீட் தேர்வு ஒரு குற்றமா? மாணவர் போராட்டங்களுக்கு ராகுல் ஆதரவு

நீட் தேர்வு மாணவர்களின் உயிரைப் பறிப்பதாகவும், முறைகேடுகளில்…

ஜூலை 22, 2026

சிஜேபி போராட்டத்தில் வன்முறை: மத்திய அரசு, காவல்துறைக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்

டெல்லியில் ஜூலை 20 அன்று நடந்த சிஜேபி…

ஜூலை 22, 2026

10 ஆண்டுகளில் 152 தேர்வு வினாத்தாள் கசிவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கடந்த 10 ஆண்டுகளில் 152 முறை தேர்வு…

ஜூலை 22, 2026

You Might Also Like

தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளில் பாட்டில் திரும்பப் பெறும் இயந்திரங்கள்: புதிய திட்டம்

தமிழக டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெற இயந்திரங்கள் பொருத்தும் புதிய திட்டம் விரைவில் வரவுள்ளது. இது மறுசுழற்சிக்கு உதவும்.

1 Min Read
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தமிழ்நாடு

வாழ்க்கையில் 2 பெரும் தவறுகள் செய்தேன்: வைகோ பரபரப்பு அறிக்கை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது அரசியல் வாழ்க்கையில் அதிமுக மற்றும் பாஜக உடனான கூட்டணியை பெரும் தவறுகள் என குறிப்பிட்டு பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

தவெகவில் இணைந்தார் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சி.மகேந்திரன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தன்னை இணைத்துக் கொண்டார். சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில்,…

1 Min Read
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

கரூருக்கு ஒரு வருடம் கழித்து வந்தீர்களா? நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் நடைபெற்ற விழாவில் இந்து கடவுள்களைத் தவிர்த்தது கண்டிக்கத்தக்கது என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?