MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தேனி கனரா வங்கியில் நகை கடன் மோசடி: மேலாளர் மீது ரூ.11.5 கோடி புகார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தேனி கனரா வங்கியில் நகை கடன் மோசடி: மேலாளர் மீது ரூ.11.5 கோடி புகார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தேனி கனரா வங்கியில் நகை கடன் மோசடி: மேலாளர் மீது ரூ.11.5 கோடி புகார்

தமிழ்நாடு

தேனி கனரா வங்கியில் நகை கடன் மோசடி: மேலாளர் மீது ரூ.11.5 கோடி புகார்

Fernandez
Last updated: ஜூலை 22, 2026 8:02 காலை
Fernandez
Share
தேனி கனரா வங்கியில் நகை கடன் மோசடி தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட சம்பவம்
தேனி கனரா வங்கியில் நடந்த நகை கடன் மோசடி தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
SHARE

தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் உள்ள கனரா வங்கியில் நகைக்கடன் பெயரில் சுமார் 11.5 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டதாக வங்கி மேலாளர் கார்த்திக் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாகியுள்ள நிலையில், காவல்துறை விசாரணை தீவிரமடைந்துள்ளது.

ஓடைப்பட்டி கனரா வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்த கார்த்திக், கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கு அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார். மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் பெயர்களைப் பயன்படுத்தி, போலியான ஆவணங்களைத் தயாரித்து, அதன் மூலம் நகைக் கடன் கணக்குகளைத் தொடங்கி, பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளார். வங்கியின் நகை மதிப்பீட்டாளர் மற்றும் கிளார்க் ஆகியோரின் கடவுச்சொற்களைப் பயன்படுத்தி இந்த மோசடி சம்பவங்களை அவர் அரங்கேற்றியுள்ளார்.

குறிப்பாக, 113 பெண்களின் பெயரில் போலியான ஆவணங்களை உருவாக்கி, நகைக் கடன் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மேலும் பல புகார்கள் எழுந்த நிலையில், கார்த்திக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கூழையனூர் பகுதிக்கு மாற்றப்பட்டார். அங்கும் அவர் இதே பாணியில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகை கடன் மோசடியில் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், கூழையனூர் வங்கி கிளையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது, நகைக்கடன் பெயரில் பணம் வழங்கப்பட்டதும், ஆனால் அதற்கு ஈடாக எந்த நகையும் வங்கியில் இல்லாததும் கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இது குறித்து வங்கி மேலாளர் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ஓடைப்பட்டி மற்றும் கூழையனூர் ஆகிய இரு கிளைகளிலும் மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் பெயர்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த விசாரணையின்போது, வங்கி மேலாளர் கார்த்திக் திடீரென தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து, வங்கி அதிகாரிகள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து விரிவான புகார் அளித்துள்ளனர். பயனாளிகளின் பெயர்களைப் பயன்படுத்தி வங்கி மேலாளர் நடத்திய இந்த பிரம்மாண்ட மோசடி சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திக் இதுவரை சுமார் 11.5 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோசடி சம்பவம் தொடர்பாக வங்கி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகியுள்ள மேலாளரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Bank ManagerCanara BankJewel Loan Fraudகனரா வங்கிகார்த்திக்தேனிநகை கடன் மோசடிவங்கி மேலாளர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கர்நாடகாவில் விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்: முதல்வர் தகவல்
Next Article முன்னாள் காவல்துறை அதிகாரி மற்றும் தற்போதைய ஆசிரியை சீமா அகர்வால் தவறை தட்டிக் கேட்ட போலீஸ்; இன்று தவறை சுட்டிக்காட்டும் ஆசிரியை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சிக்கிம் சுரங்கப்பாதை விபத்து நடந்த இடம்

சிக்கிமில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு

சிக்கிம் மாநிலம் சாமர்டங் பகுதியில் 'டீஸ்டா ஸ்டேஜ் VI' நீர்மின் திட்டப் பணிகளின்…

ஜூலை 22, 2026

நீண்ட கொம்புகளுடன் காளையுடன் திருப்பதிக்கு பக்தர் நடைபயணம்

முன்னோர்களின் பாரம்பரியத்தை பின்பற்றி, நீண்ட கொம்புகளுடன் கூடிய…

ஜூலை 22, 2026

டெல்லியில் ஜாலியன் வாலாபாக் போன்ற கொடூர தாக்குதல் – சிஜேபி குற்றச்சாட்டு

நாடாளுமன்ற பேரணியின் போது டெல்லியில் ஜாலியன் வாலாபாக்…

ஜூலை 22, 2026

இணையம் இல்லாமலேயே UPI மூலம் பணம் அனுப்பலாம்: புதிய வசதி அறிமுகம்

இனி இன்டர்நெட் அல்லது மொபைல் சிக்னல் இல்லாமலேயே…

ஜூலை 22, 2026

பெங்களூருவில் ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல்: 17 பேர் கைது

பெங்களூரு கம்மனஹள்ளியில் ரூ.15 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள்…

ஜூலை 22, 2026

You Might Also Like

தமிழ்நாடு

குதிரை பேரம், யானை பேரம் எல்லாம் நடந்தது – ரகுபதி குற்றச்சாட்டு

முதல்வர் விஜய் கரூர் செல்வதற்கு முன்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.…

4 Min Read
தமிழ்நாடு

விழுப்புரம்: மரத்தில் கார் மோதிய விபத்தில் சென்னை டாக்டர் பலி

சென்னை மதுரவாயல் முகப்பேர் திருக்குறள் முனுசாமி தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 79), டாக்டர் ஆவார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.…

1 Min Read
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பாஸ்போர்ட் சேவை மையத்தை திறந்து வைக்கும் காட்சி
தமிழ்நாடு

சென்னையில் நாளை மறுநாள் திறக்கப்படுகிறது தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம்

சென்னை மண்டலத்தில் 14-வது தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம் நாளை மறுநாள் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அவர்களால் திறக்கப்படுகிறது. இது சென்னை மக்களுக்கு…

1 Min Read
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

விமான நிலைய விரிவாக்கம்: முதல்வர் தலையிட வேண்டும் – எஸ்.பி.வேலுமணி

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளால் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்றும், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?