பொதுவாக நம் நாட்டில் 90 சதவிகித மக்கள் மூட்டுவலி, இடுப்புவலி, கை கால் வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். இத்தகைய வலிகளுக்கு ஒரு அருமையான வலி நிவாரணி பழமாக நார்த்தங்காய் விளங்குகிறது. குறிப்பாக, வாய் துர்நாற்றம் உள்ளவர்களுக்கு இது ஒரு முக்கியமான மருந்தாகும். மேலும், வாய் புண், குடல் புண், செரிமான கோளாறுகள் போன்றவற்றிற்கும் இந்த நார்த்தங்காய் ஒரு அற்புதமான பழமாகும். இந்த நார்த்தங்காய் மூலம் குணமாகும் நோய்கள் குறித்து விரிவாகக் காண்போம்.
சிலரது உடலில் அடிக்கடி உண்டாகும் மூட்டு வலி, இடுப்பு வலி, கை கால் வலி, தலை வலி போன்ற அனைத்து வலிகளையும் தீர்க்கும் சக்தி இந்த நார்த்தங்காய்க்கு உண்டு. குறிப்பாக, இந்த நார்த்தங்காய் தோலுக்கு மிகப்பெரிய மருத்துவ சக்தி உள்ளது.
உங்கள் உடலில் எங்கு வலி உள்ளதோ, அந்தப் பகுதியில் நார்த்தங்காய் பழத்தின் தோலை எடுத்து, ஆரஞ்சு தோலை பிழிவது போல் பிழிந்து, அந்த சாற்றை வலி உள்ள இடத்தில் தடவ வேண்டும். அந்த தோலைக் கொண்டே 2 முதல் 3 நிமிடங்கள் தொடர்ந்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் உடலில் உள்ள அனைத்து வலிகளையும் போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
முக்கியமாக, இந்த நார்த்தங்காய் தோல் மூட்டு வலியை உடனடியாக குணமாக்கும் தன்மை கொண்டது. அதுமட்டுமல்லாமல், நார்த்தங்காய் புற்றுநோய் வலியையும் போக்கக் கூடியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த நார்த்தங்காய் பழத்தை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தம் முழுவதுமாக குறையும். இந்த நார்த்தங்காய் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் வல்லது. இதன் மூலம் ஹார்ட் அட்டாக் வருவதைத் தடுக்கலாம், இதய அடைப்பு இருந்தால் சரியாகும்.
இந்த நார்த்தங்காய் மூலம் இதய இரத்தக் குழாய்களில் அடைந்துள்ள கொழுப்பும் கரையும். சைனஸ், சளி, மூக்கில் சதை வளர்ச்சி, தொண்டையில் சதை வளர்ச்சி, தலைவலி போன்ற பிரச்சனைகள் குணமாக, இந்த நார்த்தங்காய் தோலை தண்ணீரில் போட்டு, மீதமுள்ள தோலை கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் போதுமானது.
இந்த அற்புத நார்த்தங்காய் பழத்தின் மருத்துவ குணங்களை அறிந்து, பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.
