MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: IPL 2026: துவம்சம் செய்த ஸ்ரேயாஸ், பிரியான்ஷ்.. மிரண்டு போன டெல்லி கேப்பிடல்ஸ்.. 210 ரன் குவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: IPL 2026: துவம்சம் செய்த ஸ்ரேயாஸ், பிரியான்ஷ்.. மிரண்டு போன டெல்லி கேப்பிடல்ஸ்.. 210 ரன் குவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - IPL 2026: துவம்சம் செய்த ஸ்ரேயாஸ், பிரியான்ஷ்.. மிரண்டு போன டெல்லி கேப்பிடல்ஸ்.. 210 ரன் குவிப்பு

விளையாட்டு

IPL 2026: துவம்சம் செய்த ஸ்ரேயாஸ், பிரியான்ஷ்.. மிரண்டு போன டெல்லி கேப்பிடல்ஸ்.. 210 ரன் குவிப்பு

Admin
Last updated: மே 11, 2026 9:50 மணி
Admin
Share
SHARE

தரம்சாலா: டெல்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்து 210 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. குறிப்பாக உலகின் முன்னணி பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கின் ஓவர்களை பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் எவ்வித பயமும் இன்றி வெளுத்து வாங்கிய விதம் ரசிகர்களை ஈர்த்தது. இந்தப் போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு தொடக்க வீரர்களான பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் மிரட்டலான அடித்தளம் அமைத்தனர்.

பவர் பிளே ஓவர்களிலேயே இந்த ஜோடி 72 ரன்களைக் குவித்து டெல்லிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்த நிலையில் பிரப்சிம்ரன் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் சிக்ஸர் மழையாக பொழிந்த பிரியான்ஷ் ஆர்யா 33 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதன் பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கூப்பர் கோனோலி ஆகியோர் அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினர். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 83 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய கூப்பர் 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் கேப்டனுக்குரிய பொறுப்புடன் அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

கடைசி நேரத்தில் களமிறங்கிய சூர்யான்ஷ் ஷெட்ஜ் வெறும் 8 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 21 ரன்கள் விளாச, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எட்டியது. மறுபுறம் டெல்லி அணியின் பந்துவீச்சு படுமோசமாக இருந்தது.

நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 4 ஓவர்களில் 57 ரன்களை வாரி வழங்கி 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். மாதவ் திவாரி 4 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முகேஷ் குமார் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக வீசி 31 ரன்களுக்கு 1 விக்கெட்டை எடுத்தார். லுங்கி நெகிடி விக்கெட் ஏதுமின்றி 46 ரன்களை வாரி வழங்கினார். இதுமட்டுமின்றி, 11 வைடுகள் உட்பட 17 ரன்களை டெல்லி பந்துவீச்சாளர்கள் எக்ஸ்ட்ராவாக தாரை வார்த்தது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. டெல்லி அணிக்கு 211 ரன்கள் என்ற கடின இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதல் அமைச்சராக பொறுப்பேற்பு..விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தவர்கள் யார் யார்?
Next Article ‘ராமர், கிருஷ்ணரை பார்த்ததில்லை; மோடியைப் பார்த்தேன்’ – நடிகர் தனிகெல்லா பரணி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

விளையாட்டு

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி! மெதுவான ஓவர் வீச்சுக்கு தண்டனை, WTC பட்டியலில் சரிவு

மெதுவான ஓவர் வீச்சு காரணமாக அபராதம் விதிக்கப்பட்ட பாகிஸ்தான், WTC பட்டியலில் 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வங்கதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1 Min Read
விளையாட்டு

கால்பந்து போல தடுத்த ஆப்கான் வீரர்: குர்பாஸின் செயல் இணையத்தில் வைரல்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் ஒருநாள் போட்டியின் போது, ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் பந்தை கால்பந்து போல தடுத்த விசித்திரமான செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2 Min Read
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது
விளையாட்டு

ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணிக்கு பயிற்சியாளர்: லக்ஷ்மனுக்கு ரசிகர்கள் ஆதரவு

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. பயிற்சியாளர் லக்ஷ்மனின் தலைமையில் அணி சிறப்பாக செயல்பட்டதாக ரசிகர்கள் பாராட்டி, அவரை தொடர…

2 Min Read
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி
விளையாட்டு

இலங்கை டெஸ்ட்: இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி விலகல் – பிசிசிஐ தகவல்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 28 அன்று…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?