MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சேலம் மாணவர் கொலை: போதைப் பொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – டிடிவி தினகரன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சேலம் மாணவர் கொலை: போதைப் பொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – டிடிவி தினகரன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சேலம் மாணவர் கொலை: போதைப் பொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – டிடிவி தினகரன்

தமிழ்நாடு

சேலம் மாணவர் கொலை: போதைப் பொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – டிடிவி தினகரன்

Admin
Last updated: மே 11, 2026 9:32 மணி
Admin
Share
SHARE

அமமுக பொதுச்செய்லாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சேலம் அருகே மதுபோதையால் ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் குத்திக் கொலை – கொலைக்கு அடிப்படைக் காரணமான போதைப் பொருட்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

சேலம் மாவட்டம் காட்டுவளவு பகுதியில் இரவுநேரத்தில் மது போதையிலிருந்த மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் அடித்துக் கொலை செய்து அதனை வீடியோவாக எடுத்து மகிழ்ந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

கடந்த ஐந்தாண்டுக் கால திமுக ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்கிறோம் என்ற பெயரில் 1.0, 2.0 என பெயர் வைத்தார்களே தவிர, அதனைக் கட்டுப்படுத்த எந்தவித ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காததால், தமிழ்நாட்டின் தலைநகரத்தில் தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை சர்வ சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் தாராளமயமாகி, அதனால் ஏற்படும் குற்றச்சம்பவங்களும் பன்மடங்கு பெருகின.

எனவே, தற்போது தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அரசு, இந்த கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்கப் பிரத்தியேக தடுப்புப் படையை அமைத்துள்ள நிலையில், காலம் தாழ்த்தாமல் அப்படையின் பணிகளை விரைவுபடுத்தி போதைப்பொருட்களின் நடமாட்டத்தை ஒழித்து மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தனது தோல்விகளுக்கான பொறுப்பை மக்கள் மீது சுமத்தும் பிரதமர் நாட்டை வழிநடத்த முடியாது – ராகுல்
Next Article முதல்வர் விஜய்க்கு திருஷ்டி கழித்த வைகோ வீட்டு பணிப்பெண்கள்! பதிலுக்கு விஜய் செய்த செயல்..!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சி தலைவர் உரையாற்றுகிறார்

இந்தியாவிற்கு வெளிநாட்டு முதலீடு தேவை: காங்கிரஸ்

இந்தியாவின் மூலதனச் சந்தைகளில் வெளிப்படைத்தன்மைக்கு பதிலாக வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடுகளுக்கு மத்திய அரசு…

நவம்பர் 22, 2026

ராஜஸ்தானில் பயங்கரம்: லாரி மீது மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த…

நவம்பர் 22, 2026

ராஜஸ்தானில் பயங்கர விபத்து: 9 பக்தர்கள் உயிரிழப்பு

ராஜஸ்தானில் பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் லாரி…

நவம்பர் 22, 2026

மணிப்பூரில் கள்ளச்சாராயம்: 11 பேர் பலி, 180 பேர் மருத்துவமனையில்

மணிப்பூர் மாநிலம் சந்தேல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில்…

நவம்பர் 21, 2026

40 ஆண்டுகள் தனிமை: சென்னைப் பெண் மரணம் – உருக்கமான பதிவு வைரல்

மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாகத் தனிமையில் வாழ்ந்து…

நவம்பர் 20, 2026

You Might Also Like

அண்ணா பல்கலைக்கழகத்தில் டெங்கு பாதிப்பு காரணமாக உயிரிழந்த மாணவர்கள் பற்றிய செய்தி
தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழகத்தில் டெங்கு: 3 மாணவர்கள் உயிரிழப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் டெங்கு காய்ச்சலால் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு. அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

2 Min Read
பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் விடுமுறையைக் கொண்டாடும் காட்சி
தமிழ்நாடு

செப்டம்பரில் 13 நாட்கள் விடுமுறை: மாணவர்கள் உற்சாகம்!

தமிழக பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் 13 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாட்கள் மற்றும் காலாண்டுத் தேர்வு விடுமுறைகள்…

2 Min Read
நாமக்கல் பண்ணைகளில் முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள காட்சி
தமிழ்நாடு

முட்டை விலை 5 காசுகள் உயர்வு: பண்ணையாளர்கள் மகிழ்ச்சி

நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சந்தையில் தேவை அதிகரித்ததால் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்
தமிழ்நாடு

நாஞ்சில் சம்பத் மீது நாற்காலி வீச்சு: தப்பியதால் பெரும் பரபரப்பு!

சென்னை முகப்பேரில் தனியார் ஊடக விவாத நிகழ்ச்சியில் த.வெ.க. நாஞ்சில் சம்பத் மீது நாற்காலியால் தாக்குதல். தலையில் காயம் ஏற்பட்டு மண்டை உடைந்ததாக தகவல். நூலிழையில் தப்பியதால்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?