MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: “அரசின் தோல்விக்கு இதுவே சாட்சி” – பிரதமரின் 7 கோரிக்கைகளுக்கு ராகுல் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > “அரசின் தோல்விக்கு இதுவே சாட்சி” – பிரதமரின் 7 கோரிக்கைகளுக்கு ராகுல் கண்டனம்
இந்தியா

“அரசின் தோல்விக்கு இதுவே சாட்சி” – பிரதமரின் 7 கோரிக்கைகளுக்கு ராகுல் கண்டனம்

Admin
Last updated: May 11, 2026 2:50 pm
Admin
Share
SHARE

புதுடெல்லி: வளைகுடா போர் சூழலுக்கு மத்தியில், இந்தியர்கள் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும், வெளிநாட்டுப் பயணங்களைக் குறைக்க வேண்டும் என்பது உட்பட பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள 7 கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பெட்ரோல் மற்றும் உரங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இது குறித்தி தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ள ராகுல் காந்தி, “நேற்று பிரதமர் மோடி மக்களிடம் தியாகங்களைக் கோரியுள்ளார். தங்கம் வாங்காதீர்கள், வெளிநாடு செல்லாதீர்கள், பெட்ரோல் பயன்பாட்டைக் குறையுங்கள், உரம் மற்றும் சமையல் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுங்கள், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யுங்கள், வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள் என்று. இவை வெறும் உபதேசங்கள் அல்ல – இவை தோல்விக்கான ஆதாரங்கள்.

கடந்த 12 ஆண்டுகளில், எதை வாங்க வேண்டும், எதை வாங்கக்கூடாது, எங்கே செல்ல வேண்டும், எங்கே செல்லக்கூடாது என்று பொதுமக்களிடமே சொல்லும் அளவிற்கு நாட்டை அவர் ஒரு இக்கட்டான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். ஒவ்வொரு முறையும், அவர்கள் தங்கள் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிப்பதற்காக, பழியை மக்கள் மீது சுமத்துகிறார்கள். சமரசத்துக்கு உள்ளான ஒரு பிரதமரால் நாட்டை வழிநடத்துவது என்பது இனி அவரது எல்லைக்கு உட்பட்டதாக இருக்காது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இது குறித்துக் கூறுகையில், அமெரிக்கா – ஈரான் போர் தொடங்கி மூன்று மாதங்கள் ஆகியும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய முடியாமல் பிரதமர் திகைத்து நிற்பதாகக் குற்றம் சாட்டினார். தேர்தல்களும் அரசியலுமே பிரதமரின் முன்னுரிமையாக இருப்பதால், நாடு பொருளாதாரப் பேரழிவை நோக்கிச் செல்வதாக அவர் எச்சரித்தார்.

காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், பிரதமரின் இந்தத் திடீர் கட்டளைகளுக்கான உண்மையான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் பொருளாதார நிலை குறித்த உண்மையான நிலவரத்தை விளக்க உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் முன்வைத்துள்ள 7 கோரிக்கைகள்: நாட்டின் நலன் கருதி பொதுமக்கள் 7 கோரிக்கைகளை பின்பற்ற முன்வருமாறு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். அவை பின்வருமாறு: 1. வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான வாய்ப்புள்ள இடங்களில் அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். 2. ஓர் ஆண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். 3. பெட்ரோல் / டீசல் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். 4. சமயல் எண்ணை பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். 5. ரசாயன உர பயன்பாட்டை குறைத்துக்கொண்டு இயற்கை உரத்துக்கு மாற வேண்டும். 6. வெளிநாட்டு தயாரிப்புகளைக் குறைவாகப் பயன்படுத்துங்கள். 7. வெளிநாட்டுப் பயணங்களை ஓர் ஆண்டுக்கு தவிருங்கள். இவ்வாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் காலத்தைப் போல வீடியோ கான்பரன்சிங் மற்றும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் கூறியிருப்பது, நிலைமை மிகவும் தீவிரமாக இருப்பதை உணர்த்துவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிரதமர் மோடி, சோனியாவை சந்திக்க முதலமைச்சர் விஜய் திட்டம்
Next Article ஆசைக்கு இணங்க மறுத்த பெண் படுகொலை: தொழில் அதிபர் கைது
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அமுல் பால் விலை உயர்வு: லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு!

இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான அமுல், நாடு முழுவதும் பால் விலையை…

May 13, 2026

காரிஃப் பயிர்கள்: மத்திய அரசு அறிவித்த புதிய குறைந்தபட்ச ஆதார விலைகள்!

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, 2026-2027 சந்தைப்படுத்தல்…

May 13, 2026

சேலை சரியில்லை: மணமகள் மறுப்பு – திருமணமே நின்றது! குடும்பத்தில் மோதல்

உத்தர பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் உள்ள…

May 13, 2026

பிரிக்ஸ் மாநாடு: டெல்லி வந்தடைந்தார் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்!

புதுடெல்லி: பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும்…

May 13, 2026

திருமணத்தில் ஸ்விக்கி டெலிவரி: பூசாரிக்கு விறகு கொடுத்த நபர் வைரல்!

தென்னிந்திய திருமணங்கள் எப்போதும் பரபரப்புக்கும், எதிர்பாராத நிகழ்வுகளுக்கும்…

May 13, 2026

You Might Also Like

இந்தியா

PM Modi | அசாமில் என்.டி.ஏ. அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி

அசாமில் மூன்றாவது முறையாக பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி கவுகாத்தி வந்தடைந்தார். இங்குள்ள லோக்பிரியா…

1 Min Read
இந்தியா

மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக பாஜக வெற்றி பெற்றது. சுவேந்து அதிகாரி முதல்வர் பொறுப்பேற்றார். பதவியேற்றது…

2 Min Read
இந்தியா

புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ரங்கசாமி

புதுச்சேரியில் ஆட்சியை தக்க வைத்த நிலையில், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரங்கசாமி, ராஜினாமா கடிதத்தை துணை நிலை ஆளுநர் கைலாசநாதனிடம் வழங்கினார்.

0 Min Read
இந்தியா

மாணவர் தற்கொலை அதிகரிப்பு: 2024-ல் 14,488 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: இந்​தி​யா​வில் மாணவர்​களின் தற்​கொலை எண்​ணிக்கை முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் அதி​கரித்து வரு​கிறது. கடந்த 2024-ம் ஆண்​டில் மட்​டும் 14,488-பேர் உயி​ரிழந்​துள்​ளனர். இது முந்​தைய ஆண்டை

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?