MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பிரதமர் மோடி, சோனியாவை சந்திக்க முதலமைச்சர் விஜய் திட்டம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பிரதமர் மோடி, சோனியாவை சந்திக்க முதலமைச்சர் விஜய் திட்டம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பிரதமர் மோடி, சோனியாவை சந்திக்க முதலமைச்சர் விஜய் திட்டம்

தமிழ்நாடு

பிரதமர் மோடி, சோனியாவை சந்திக்க முதலமைச்சர் விஜய் திட்டம்

Admin
Last updated: மே 11, 2026 2:50 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தில் ஆட்சி அமைக்க விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்துக்கு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவை ஆதரவு அளித்துள்ளன. ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற எண்ணிக்கைக்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்ததால் த.வெ.க. தலைவர் விஜய்யை, முதலமைச்சராக நியமித்து கவர்னர் அர்லேகர் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

அதன்படி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை, போதைப்பொருட்கள் தடுப்புப்படை ஆகிய 3 முக்கிய கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டார்.

இதைத்தொடர்ந்து, தலைமை செயலகத்துக்கு சென்று பல்வேறு கோப்புகளில் கையெழுத்திட்டு அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், மாலை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை செலுத்தினார். அப்போது முதலமைச்சர் விஜய்க்கு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெரியார் சிலையை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார்.

சட்டசபை கூடியதும் முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் கருப்பையா வாழ்த்து தெரிவித்தார். தமிழக மக்களுக்காக உழைக்க தன்னை இயந்திரமாய் மாற்றிக்கொண்ட முதல்வரை வணங்குகிறேன் என தற்காலிக சபாநாயகர் புகழாரம் சூட்டினார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன் பிறகு எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றதற்கான பதிவேட்டில் விஜய் கையெழுத்திட்டார்.

அவரை தொடர்ந்து அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து மற்ற கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழக முதலமைச்சர் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘ஒரே வழக்கு ஒரே தரவு’, ‘சு சஹாய்’ சாட்பாட்: நீதித் துறையில் புதிய டிஜிட்டல் திட்டங்கள்
Next Article “அரசின் தோல்விக்கு இதுவே சாட்சி” – பிரதமரின் 7 கோரிக்கைகளுக்கு ராகுல் கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் தீர்மானம் முன்மொழிதல்

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு: எஃப்சிஆர்ஏ மசோதா ஜேபிசி-க்கு பரிந்துரை

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எஃப்சிஆர்ஏ மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்ப மத்திய…

ஆகஸ்ட் 12, 2026

விவசாயிகளிடமிருந்து ரூ.10-க்கு பசு சிறுநீர் வாங்கும் உ.பி. அரசு

உத்தரப் பிரதேச அரசு, விவசாயிகளிடமிருந்து பசு சிறுநீரை…

ஆகஸ்ட் 12, 2026

குருவாயூர் கோவிலில் 377 திருமணங்கள்: முன்பதிவு அமோகம்!

கேரளாவின் குருவாயூர் கோவிலில் ஆகஸ்ட் 23 அன்று…

ஆகஸ்ட் 12, 2026

16 வயது சிறுவன் குளத்தில் தங்கியது ஏன்? உடலில் எரிச்சல் காரணம்!

மேற்குவங்கத்தில் 16 வயது சிறுவன் உடலில் எரிச்சல்…

ஆகஸ்ட் 12, 2026

பெங்களூரு சிறையில் திடீர் சோதனை: பிரஜ்வல் ரேவண்ணாவிடம் செல்போன் சிக்கியது

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவிடம் இருந்து…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

இன்று முதல் முக்கிய மாற்றங்கள்: ரயில் அபராதம் முதல் பாஸ்போர்ட் கட்டணம் வரை உயர்வு!

இன்று முதல் ரயில்வே அபராதம், பாஸ்போர்ட் கட்டணம், ஆதார் புதுப்பித்தல், கிரெடிட் கார்டு விதிகள் மற்றும் வங்கி தயாரிப்புகள் விற்பனை என பலவற்றில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு…

2 Min Read
தமிழ்நாடு

கோவில் நிதியில் கார் பார்க்கிங்: அமைச்சர் ரமேஷ் கேள்வி

குன்னூர் விநாயகர் கோவில் நிலத்தில் கார் பார்க்கிங் திட்டத்திற்கு கோவில் நிதியை பயன்படுத்தியதை கண்டித்து அமைச்சர் ரமேஷ் சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இது…

1 Min Read
அமைச்சர் நிர்மல்குமார் நீட் தேர்வு குறித்து பேசுகிறார்
தமிழ்நாடு

நீட் தேர்வு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை – நிர்மல்குமார்

நீட் தேர்வு குறித்து பேசுவதற்கு திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். திமுகவின் அரசியல் ஆதாய பேச்சுகளை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும்…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தின் நலன் கருதி திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?