MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்வர் விஜய் அரசை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்வர் விஜய் அரசை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்வர் விஜய் அரசை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்!

தமிழ்நாடு

முதல்வர் விஜய் அரசை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்!

Fernandez
Last updated: ஜூலை 18, 2026 8:23 காலை
Fernandez
Share
உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிடுகிறார்
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்
SHARE

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ள நிலையில், காவலர் தேர்வு ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டதை முதல்வர் விஜய் தலைமையிலான அரசை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதலே சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து, குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அபாயகரமாக அதிகரித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் முன்பை விடத் தற்போது கூடுதல் எண்ணிக்கையிலான காவலர்கள் துறைக்குத் தேவைப்படுகிறார்கள். ஆனால், அதற்கு நேர்மாறாகக் காவலர் காலிப்பணியிடங்களை நிரப்பும் தேர்வை இன்னும் ஓராண்டுக்குத் தள்ளிவைத்து, அடுத்த ஆண்டுதான் (2027) இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தவெக அரசு அறிவித்திருப்பது நிர்வாகச் சுணக்கத்தையே காட்டுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், 'பல்வேறு கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், வயது வரம்பு கடந்துவிடுமோ என்ற அச்சத்திலும் ஆயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்கள் கோச்சிங் சென்டர்களுக்குச் சென்றும், மைதானங்களில் பயிற்சிகளை மேற்கொண்டும் தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர். அரசின் இந்த திடீர் தள்ளிவைப்பு அறிவிப்பால் பல இளைஞர்களின் வயது வரம்பு முடிந்து, அவர்கள் காவலராகும் தகுதியையே இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்களின் வேலைவாய்ப்பையும், அரசுப் பணிகளையும் தங்களது முதல் முன்னுரிமையாகக் கையாள்வோம் எனத் தேர்தல் களத்தில் வாக்குறுதி அளித்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தற்போது இளைஞர்களின் வயிற்றிலடிப்பது ஏன்?' என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநிலத்தில் நிலவும் காவலர் பற்றாக்குறையைப் போக்கவும், வேலைவாய்ப்பற்ற வாலிபர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், இந்தத் தள்ளிவைப்பு உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நடப்பு ஆண்டிலேயே திட்டமிட்டபடி முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் காவலர் தேர்வுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டுத் தேர்வை நடத்த முதலமைச்சர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தவெக அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராக திமுக இளைஞரணி சார்பில் மாநிலம் தழுவிய பிரம்மாண்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அறிவிப்பால் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுகள் தகர்ந்துள்ளன. உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKTamil Nadu Police RecruitmentUdhayanidhi Stalinஉதயநிதி ஸ்டாலின்காவலர் தேர்வுதமிழக அரசுதவெக அரசுவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஊறவைத்த பாதாமை கையில் வைத்திருக்கும் நபர் பாதாம்: நோய் எதிர்ப்பு சக்திக்கு நீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
Next Article மதுரா ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் ஸ்ரீ கிருஷ்ணர் முஸ்லிம்: மவுலானா அன்சாரி பேச்சுக்கு எப்ஐஆர் பதிவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் சிறைத்தண்டனை விதிக்கும் புதிய மசோதா குறித்த அறிவிப்பு

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டு சிறை: மத்திய அரசு புதிய மசோதா

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம்…

ஜூலை 18, 2026

சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதி: உண்ணாவிரதம் தொடர்ந்த அபிஜித் தீப்கே

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக…

ஜூலை 18, 2026

ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்க கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாரிற்கும் இடையே உள்ள ராமர்…

ஜூலை 18, 2026

சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்: வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி

லடாக்கின் மாநில அந்தஸ்து கோரி 15 நாட்களாக…

ஜூலை 18, 2026

மேற்கு வங்கத்தில் ரயில்-பேருந்து மோதல்: 5 பேர் பலி

மேற்கு வங்க மாநிலம் முர்​ஷி​தா​பாத் பகுதியில் ரயில்வே…

ஜூலை 18, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஜோதிடத்தை அரசுமயமாக்க கூடாது: அரசியல் கட்சிகள் எதிர்ப்பு

தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசுக்கு எதிராக ம.ஜ.க., கொ.ம.தே.க., ம.ம.க. ஆகிய கட்சிகள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தன.…

1 Min Read
தமிழ்நாடு

கோவை பாஜக கூட்டத்தில் தேர்தல் தோல்வி பற்றி ஆலோசனை!

கோவை பாஜக மையக்குழு கூட்டம் நிறைவு. தமிழக சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநில மற்றும் மாவட்ட அளவிலான கூட்டங்கள் நடைபெறும் என அறிவிப்பு.

1 Min Read
தமிழ்நாடு

போதைப்பொருள் அல்ல, குழந்தைக்கான மாத்திரை – அமைச்சர் சரத்குமார் விளக்கம்

சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின்போது அமைச்சர் சரத்குமார் மாத்திரை தூளாக்கிய வீடியோ, போதைப்பொருள் பயன்பாடு என பரவிய நிலையில், அது குழந்தைக்கான மாத்திரை என விளக்கமளித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

செங்கல்பட்டு கதை தெரியும் – விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி

செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை தமிழ்நாட்டுக்கே தெரியும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளார். சட்டமன்றத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாக…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?