MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்-அமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ – அரசாணை வெளியீடு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்-அமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ – அரசாணை வெளியீடு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்-அமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ – அரசாணை வெளியீடு

தமிழ்நாடு

முதல்-அமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ – அரசாணை வெளியீடு

Admin
Last updated: மே 11, 2026 10:54 காலை
Admin
Share
SHARE

தமிழக முதல்-அமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்துபோட்டார். 2-வது கையெழுத்து *பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தவும் “சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை” திட்டத்துக்கு கையெழுத்துபோட்டார்.

இந்த நிலையில், ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ முதல்-அமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கு என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,

பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு, தடுப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை முதன்மை மற்றும் ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்படக் கூடிய, ஒரு சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும். ஆபத்தில் உள்ள பெண்களுக்கு உதவிடும் வகையில், இப்படையினரின் இருப்பை வெளிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மூலம் பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், இந்த சிறப்புப் படையை, போதுமான ஆளிநர்கள்/பணியாளர்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும்

முதல்-அமைச்சரின் அறிவிப்பினைத் தொடர்ந்து காவல்துறை இயக்குநர்/ காவல் படை தலைவர் அவர்கள் பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு, தடுப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை முதன்மை மற்றும் ஒற்றை இலக்காகக் கொண்டு கூடிய, ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாடுகள்:-

* குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து கண்காணித்தல், பொது இடங்களில் கண்காணிப்பு மற்றும் தங்கள் இருப்பை மேம்படுத்தி, சுற்றுக்காவல் பணிகள் மேற்கொண்டு, குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து, பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குதல்.

* பேருந்து நிறுத்தங்கள், ரெயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிக அளவில் செல்லக்கூடிய மற்றும் நெருக்கடி மிகுந்த பகுதிகளில், தங்கள் இருப்பை அதிக அளவில் வெளிப்படுத்தி, சட்டவிரோத செயல்களை தடுத்தல்.

* புகார்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுத்தல்.

* பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு, அவர்களது பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதுடன், இதர ஆதரவுகள் கிடைத்திட வகை செய்வது உள்ளிட்ட உதவிகளை உரிய நேரத்தில் செய்தல்.

* சமூக நலத்துறை, கல்வித்துறை, அரசு சாரா தொண்டு நிறுனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட முகமைகளுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், சமூகத்தில் பலதரப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து, பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுதல்.

காவல்துறை தலைமை இயக்குனரின் கருத்துருவினை அரசு கவனமுடன் ஆய்வு செய்து, பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு, தடுப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை முதன்மை மற்றும் ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்படக் கூடிய, ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ உருவாக்கவும் முதற்கட்டமாக காவல்துறை தலைமையகத்தில் பின்வரும் பணியிடங்களுக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து அரசு ஆணையிடுகிறது. இந்த ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ முதல்-அமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதலமைச்சர் விஜயின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – அரசாணை வெளியீடு
Next Article TN Assembly | எம்.எல்.ஏ.ஆக பதவியேற்காத அமைச்சர் கீர்த்தனா
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு உத்தரவு குறித்த செய்தி

அதிகாரிகளுக்கு ஒரு அரசு கார் மட்டுமே: மத்திய அரசு அதிரடி

மத்திய அரசு அதிரடி உத்தரவு: பல்வேறு துறைகளை கூடுதலாக கவனித்தாலும் ஒரு அதிகாரிக்கு…

ஜூலை 29, 2026

போராட்டக்காரர்கள் மீதான தடுப்பு நடவடிக்கைகள் இயல்பானதே – நட்டா

டெல்லியில் போராடிய மாணவர்கள் காவல்துறை நடவடிக்கைகளை எதிர்கொள்ள…

ஜூலை 29, 2026

ஜந்தர் மந்தர் போராட்டம்: நாட்டுக்கு அவப்பெயர் – பாபா ராம்தேவ் விமர்சனம்

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியவர்கள் நாட்டுக்கு…

ஜூலை 29, 2026

மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி: நண்பகல் வரை ஒத்திவைப்பு

மக்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும்…

ஜூலை 29, 2026

மேகதாது அணை: மாநிலங்களவையில் காங்கிரஸ் நோட்டீஸ்

தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்க மேகதாது…

ஜூலை 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

எம். ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை… இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் தமிழ்நாடு அரசு எம். ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்(தமிழ்நாடு டாக்டர். ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்துடன்…

2 Min Read
மாடு மேய்க்கும் தொழிலாளியின் மகள் 'நீட்' தேர்வில் வெற்றி பெற்றார்
தமிழ்நாடு

‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்ற மாடு மேய்க்கும் தொழிலாளியின் மகள்

கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாடு மேய்க்கும் தொழிலாளியின் மகள், 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இவரது வெற்றி பல மாணவர்களுக்கு உத்வேகம்…

1 Min Read
தமிழ்நாடு

விரைவில் அனைவரும் பேசுவோம் – அண்ணாமலை அறிவிப்பு

தமிழக பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை 'இது நம்ம இயக்கம்' என்ற புதிய அமைப்பை தொடங்கி, 2029 தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். தற்போது 18.54 லட்சம்…

1 Min Read
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மனைவி சென்னம்மா அவர்களின் புகைப்படம்
தமிழ்நாடு

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மனைவி சென்னம்மா காலமானார்

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மனைவியும், 87 வயதான சென்னம்மா அவர்கள் இன்று (ஜூலை 18) காலமானார். சுவாசப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?