MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவிர்க்க முடியாத சூழலில்.. தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது குறித்து ஆதவ் அர்ஜுனா விளக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவிர்க்க முடியாத சூழலில்.. தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது குறித்து ஆதவ் அர்ஜுனா விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தவிர்க்க முடியாத சூழலில்.. தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது குறித்து ஆதவ் அர்ஜுனா விளக்கம்

தமிழ்நாடு

தவிர்க்க முடியாத சூழலில்.. தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது குறித்து ஆதவ் அர்ஜுனா விளக்கம்

Admin
Last updated: மே 10, 2026 10:47 மணி
Admin
Share
SHARE

விஜய் பதவியேற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டு, இரண்டாவதாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு, மூன்றாவும் கடைசியுமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இதுவரை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பின்பு தேசிய கீதம் இசைப்பது மரபாக இருந்தது. ஆனால் தற்போது அது மாற்றப்பட்டதும் வந்தே மாதரம் புகுத்தப்பட்டதும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்து எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ” நீராரும் கடலுடுத்த…’ எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் ‘உலகெங்கும் பரவ வேண்டும்…’ என்ற இலட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும்.

நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை.

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இப்படியான சூழலில், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது.

இந்தப் புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது. தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை.

இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது.

ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்!

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமும் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான்:” என்று தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழ்நாட்டின் கடன் நிர்ணயிக்கப்பட்ட அளவில்தான் உள்ளது – விஜய்க்கு திருமாவளவன் பதில்
Next Article நானும் களத்துக்கு வரேன்.! 7 & 5 சீட்டர்களை ஹைப்ரிட்டாக அப்க்ரேட் செய்யும் மஹிந்த்ரா-டாப் மைலேஜ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு

டெல்லி: ₹22,000 கோடி அரிசி ஊழல் – ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

டெல்லியில் ₹22,000 கோடி மதிப்பிலான மானிய அரிசி ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி…

ஆகஸ்ட் 9, 2026

கர்நாடகா-தமிழக எல்லையில் நாளை போராட்டம்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து துன்புறுத்தலை…

ஆகஸ்ட் 9, 2026

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ரூ.100 கோடி மோசடி: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் கைது

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.…

1 Min Read
தமிழ்நாடு

கடலூர் அருகே கடலில் 4 புதிய எண்ணெய் கிணறுகள்: அனுமதி கோரி விண்ணப்பம்

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் கடலுக்குள் 4 புதிய ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

0 Min Read
தமிழ்நாடு

சென்னை சொத்துவரி வசூல் முகாம்: இன்று முதல் 17ம் தேதி வரை சிறப்பு முகாம்

சென்னை மாநகராட்சி சொத்து வரி வசூல் சிறப்பு முகாம் இன்று முதல் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து மண்டல, வார்டு அலுவலகங்களில் காலை 8 முதல்…

1 Min Read
இடது பக்கமாக உறங்கும் நபர்
தமிழ்நாடு

இடது பக்கம் தூங்குவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்!

இடது பக்கம் சாய்ந்து உறங்குவது செரிமானம், இதய ஆரோக்கியம், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குறட்டையைக் குறைத்தல் போன்ற பல நன்மைகளைத் தருகிறது. தரமான தூக்கத்திற்கு இது ஒரு…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?