MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நானும் களத்துக்கு வரேன்.! 7 & 5 சீட்டர்களை ஹைப்ரிட்டாக அப்க்ரேட் செய்யும் மஹிந்த்ரா-டாப் மைலேஜ்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நானும் களத்துக்கு வரேன்.! 7 & 5 சீட்டர்களை ஹைப்ரிட்டாக அப்க்ரேட் செய்யும் மஹிந்த்ரா-டாப் மைலேஜ்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - நானும் களத்துக்கு வரேன்.! 7 & 5 சீட்டர்களை ஹைப்ரிட்டாக அப்க்ரேட் செய்யும் மஹிந்த்ரா-டாப் மைலேஜ்

லைஃப் ஸ்டைல்

நானும் களத்துக்கு வரேன்.! 7 & 5 சீட்டர்களை ஹைப்ரிட்டாக அப்க்ரேட் செய்யும் மஹிந்த்ரா-டாப் மைலேஜ்

Admin
Last updated: மே 11, 2026 12:20 காலை
Admin
Share
SHARE

Mahindra Hybdrid SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தங்களது முதல் ஹைப்ரிட் கார் மாடல்களாக, XUV 7XO மற்றும் XEV 9e ஆகிய இரண்டு கார் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாம்.

இந்திய கார் சந்தையில் ஹைப்ரிட் நோக்கிய பயணமானது வேகமாக அதிகரித்து வருகிறது. வழக்கமான இன்ஜின் அடிப்படையிலான கார் மாடல்களுடன் ஒப்பிட்டால், வலுவான செயல்திறன் மற்றும் சிக்கனமான எரிபொருள் செலவு காரணமாக ஹைப்ரிட் மாடல்கள் மேம்பட்டதாக விளங்குகிறது. மின்சார வாகனங்களை போன்று ஹைப்ரிட் வாகனங்களுக்கு சார்ஜிங் செய்வதற்கான உட்கட்டமைப்புகள் ஏதும் அவசியமில்லை. ரேஞ்ச் தொடர்பான கூடுதல் ஆலோசனைகளையும் பயனர்கள் கொண்டிருக்க வேண்டியதில்லை.

தற்போதைய சூழலில் ஹைப்ரிட் பிரிவில் இன்னோவா ஹைக்ராஸ், அர்பன் க்ரூசர் ஹைரைடர் மற்றும் கேம்ரி  போன்ற மாடல்கள் மூலம் டொயோட்டா நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுபோக மாருதி சுசூகி மற்றும் ஹோண்டா போன்ற நிறுவனங்களும் பயணத்தை தொடங்கியுள்ளன. ஹுண்டாய், கியா, ரெனால்ட் மற்றும் மஹிந்த்ரா போன்ற கார் உற்பத்தி நிறுவனங்களும் ஹைப்ரிட் பிரிவில் தடம் பதிக்க பரிசீலித்து வருகின்றன. அந்த வரிசையில் உள்ளூர் கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்த்ராவும்,  XUV 7XO மற்றும் XUV 9e ஆகியவற்றில் ஹைப்ரிட் மற்றும் ரேஞ்ச் எக்ஸ்டெண்டர் மின்சார வாகனங்கள் இரண்டையும் சந்தைப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறதாம்.

மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடரைப் போலவே, விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ள மஹிந்திரா ஹைப்ரிட் எஸ்யூவியும், சக்கரங்களுக்கு ஆற்றலளிப்பதற்காக ஒரு பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஒரு எலெக்ட்ரிக் மோட்டாரைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த ஹைப்ரிட் அமைப்பைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாம். ஏற்கனவே சந்தையில் உள்ள தங்களது இன்ஜின் அடிப்படையிலான எஸ்யூவிகள் பலவற்றிலும் இதே சக்திவாய்ந்த ஹைப்ரிட் பவர்டிரெய்னைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. XUV 7XO அதைப் பெறும் முதல் மாடல்களில் ஒன்றாக இருக்கலாம். W613 என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்ட மஹிந்திரா XUX 7XO ஹைப்ரிட் எஸ்யூவி, சோதனையில் இருப்பதாகவும்,  2027ம் ஆண்டில் அறிமுகமாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்திரா தனது புதிய தலைமுறை INGLO பிளாட்ஃபார்ம் அடிப்படையிலான எலெக்ட்ரிக் எஸ்யூவிகளுக்காக ரேஞ்ச்-எக்ஸ்டெண்டர் தொழில்நுட்பத்தையும் பரிசீலித்து வருகிறது. இந்த அமைப்பைக் கொண்ட நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் மஹிந்திரா XEV 9e ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. W623 என்ற கோட் நேமை கொண்ட இந்த மாடல், 2028-ல் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. தனது நிரூபிக்கப்பட்ட 1.2-லிட்டர் மற்றும் 1.5-லிட்டர் இன்ஜின்களுக்கான ஹைப்ரிட் பயன்பாடுகள் பரிசீலனையில் உள்ளதாம்.

ஸ்கேட்போர்டு மின்சார வாகனங்களின் ஆர்கிடெக்ட்சர், இன்ஜின், கியர்பாக்ஸ் மற்றும் எக்சாஸ்டர் அமைப்பைப் பொருத்தும் வகையில் முதலில் வடிவமைக்கப்படாததால், மஹிந்திரா ஒரு விரிவான பொறியியல் பணியை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்தச் செயல்முறையில், ப்ளாட்ஃபார் லே-அவுட்டை மறுசீரமைத்தல், வெப்ப மேலாண்மை அமைப்பை மேம்படுத்துதல், நொறுங்கும் பிரிவுகளை திருத்தியமைத்தல் மற்றும் புதிய விபத்துப் பாதுகாப்புச் சரிபார்ப்புகளை நடத்துதல் ஆகியவை அடங்கும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people’s daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking “Allow All Cookies”, you agree to our use of cookies.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவிர்க்க முடியாத சூழலில்.. தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது குறித்து ஆதவ் அர்ஜுனா விளக்கம்
Next Article IPL 2026 : கடைசி பந்தில் வெற்றியை உறுதி செய்த ஆர்சிபி.. சூப்பர் த்ரில்லர் மேட்ச்சில் மும்பை அணி தோல்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு

டெல்லி: ₹22,000 கோடி அரிசி ஊழல் – ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

டெல்லியில் ₹22,000 கோடி மதிப்பிலான மானிய அரிசி ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி…

ஆகஸ்ட் 9, 2026

கர்நாடகா-தமிழக எல்லையில் நாளை போராட்டம்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து துன்புறுத்தலை…

ஆகஸ்ட் 9, 2026

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

மத நல்லிணக்கத்தின் அடையாளமாக மயிலாப்பூர் சாய்பாபா கோவில்

சென்னை மயிலாப்பூர் சீரடி சாய்பாபா கோவில், மத நல்லிணக்கத்தையும் ஆன்மிக அமைதியையும் போற்றும் தலமாக விளங்குகிறது. அன்னதானம் மற்றும் அனைத்து மதத்தினரையும் வரவேற்கும் சிறப்பு அம்சங்களுடன் திகழ்கிறது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இந்திய ராணுவ புதிய தளபதி: லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்

இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமிக்கப்பட்டுள்ளார். நான்கு தசாப்த கால அனுபவம் வாய்ந்த இவர், ராணுவத்தின் நீண்டகால உருமாற்றத்திற்கு வழிகாட்டுவார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஓமன் கடலில் தாக்குதல்: 3 இந்தியர்கள் பலி, அமெரிக்கா மீது ஈரான் குற்றச்சாட்டு

ஓமன் கடலில் இந்திய கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

1 Min Read
டீ கோப்பை மற்றும் மசாலாப் பொருட்கள்
லைஃப் ஸ்டைல்

டீயின் மணமும் சுவையும் அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்!

குளிர் மற்றும் மழைக்காலங்களில் டீ அருந்துவது பலருக்கும் பிடித்தமான ஒன்று. டீயில் இஞ்சி, ஏலக்காய், இலவங்கப்பட்டை போன்ற மசாலாப் பொருட்களைச் சேர்ப்பது அதன் மணத்தையும் சுவையையும் அதிகரிப்பதுடன்,…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?