MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தமிழ்நாட்டின் கடன் நிர்ணயிக்கப்பட்ட அளவில்தான் உள்ளது – விஜய்க்கு திருமாவளவன் பதில்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > தமிழ்நாட்டின் கடன் நிர்ணயிக்கப்பட்ட அளவில்தான் உள்ளது – விஜய்க்கு திருமாவளவன் பதில்
தமிழ்நாடு

தமிழ்நாட்டின் கடன் நிர்ணயிக்கப்பட்ட அளவில்தான் உள்ளது – விஜய்க்கு திருமாவளவன் பதில்

Admin
Last updated: May 10, 2026 10:47 pm
Admin
Share
SHARE

பதவியேற்பு நிகழ்ச்சியில் முந்தைய அரசை சாடிய முதல்வர் விஜய், ‘ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு’ என்று பேசினார்.

இதற்கு பதிலடி கொடுத்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான் நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!” என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.

இதற்கிடையே விஜய் பதவியேற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டு, இரண்டாவதாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு, மூன்றாவும் கடைசியுமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இதுவரை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பின்பு தேசிய கீதம் இசைப்பது மரபாக இருந்தது. ஆனால் தற்போது அது மாற்றப்பட்டதும் வந்தே மாதரம் புகுத்தப்பட்டதும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில் விஜய் பேச்சு மற்றும் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “

தமிழ்நாட்டில் நீண்ட காலமாக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் முதலில் இசைக்கப்படும். அரசு விழாக்களில் வந்தே மாதரம் முதலில் பாட மத்திய அரசு தெரிவித்து இருந்தாலும் தமிழக அரசு மறுத்துள்ளது.

வந்தே மாதரம் பாடல் மதம் சார்ந்த கருத்தை கொண்டிருப்பதாக ஒரு சர்ச்சை இருக்கிறது. பாடல் விவகாரத்தில் அதிகாரிகளின் கவனக்குறைவா, ஆளுநரின் விருப்பமா எனத்தெரியவில்லை.

முதல்வர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி இதற்குரிய விளக்கத்தை விஜய் அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

அதுபோல தமிழ்நாட்டின் கடன் வரம்புக்குள்தான் உள்ளது. தமிழ்நாட்டின் கடன் அளவு ரூ.10 லட்சம் கோடி என்று வெறுமனே குறிப்பிடுவது தவறான புரிதலை ஏற்படுத்தும். அதனை மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியோடு (GSDP)ஒப்பிட்டுப் பார்ப்பதே சரியாக இருக்கும். 15வது நிதிக் குழு நிர்ணயித்த வரம்புகளுக்கு உள்ளேயே தமிழ்நாட்டின் கடன் அளவு உள்ளது. முழு அளவுகளை மட்டும் சுட்டிக்காட்டி அச்சமூட்டுவது, அரசியல் நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படும். விஜய்க்கு நெருக்கடி தர விரும்பவில்லை. பெரும்பான்மை கோரும் போது தவெகவை ஆதரிப்போம்” என்றார்

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 1500-க்கும் மேல் படங்கள் – அண்ணா முதல் விஜய் வரை… 7 முதல்-அமைச்சர்களுடன் நடித்த ஒரே நடிகை
Next Article தவிர்க்க முடியாத சூழலில்.. தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது குறித்து ஆதவ் அர்ஜுனா விளக்கம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இமாச்சலில் கனமழை: 5 பேர் மாயம், 17 பேர் காயம்

இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 5 பேர் மாயமாகியுள்ளனர். 17 பேர்…

June 24, 2026

அரசு மருத்துவர்கள் தனி தொழில் செய்ய தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அரசு மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் தொழில் செய்யக்கூடாது…

June 24, 2026

முட்டை நீக்கம்: மேற்கு வங்க மதிய உணவு திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

மேற்கு வங்கத்தில் அரசு பள்ளிகளின் மதிய உணவு…

June 24, 2026

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: கர்நாடகாவில் வாலிபர் கைது

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக…

June 24, 2026

போதைப்பொருள் ஒழிப்பு: தமிழக அரசுக்கு கேரள முதல்வர் கடிதம்

தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை பாராட்டி, கேரள…

June 24, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தவெக அரசுக்கு எதிராக வாக்களிப்போம் – எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பேட்டி

எடப்பாடி பழனிசாமியே அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவர் என்றும், தவெக அரசுக்கு எதிராக வாக்களிப்போம் என்றும் ஓ.எஸ். மணியன் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்…

1 Min Read
தமிழ்நாடு

காவிரி நதி இரு மாநில மக்களின் வாழ்வாதாரம்: செல்வப்பெருந்தகை

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு புதிய அணைகளைக் கட்டுவதை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டித்துள்ளார். இது இரு மாநில மக்களின் வாழ்வாதார நதி என்றும்,…

1 Min Read
தமிழ்நாடு

பள்ளியில் ரீல்ஸ் எடுத்த தவெக நிர்வாகி பதவி பறிப்பு

காஞ்சிபுரம் அருகே அரசு பள்ளி வகுப்பறையில் முதலமைச்சர் விஜய் படத்தை வைத்து ரீல்ஸ் எடுத்த தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். வெளிநாடுவாழ் தமிழர்கள்…

1 Min Read
தமிழ்நாடு

பெரியார் திடலில் முதலமைச்சர் விஜய் – கி.வீரமணியுடன் சந்திப்பு

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்துள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி பூங்கொடுத்து கொடுத்தார். பதிலுக்கு…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?