MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

இந்தியா

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

Admin
Last updated: மே 10, 2026 6:56 மணி
Admin
Share
SHARE

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி கூட்டணி ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 140 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் மட்டும் 63 தொகுதிகளில் தனிப்பெரும் வெற்றி பெற்றது.10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றினாலும், முதல்-மந்திரி யார்? என்பதை முடிவு செய்வதில் இழுபறி நிலவி வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், கேரள எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரிடையே முதல்-மந்திரி பதவியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

புதிய முதல்-மந்திரியாக யாரை நியமிப்பது? என்பது குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரசின் மூத்த தலைவர்களான முகுல் வாஸ்னிக், அஜய் மக்கான் ஆகியோர் மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் கேரளம் வந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம் கருத்துக்களை கேட்டனர். பின்னர் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் கேரளத்தில் நிலவும் போட்டித்தன்மை குறித்து விளக்கினர்.

இதற்கிடையில் கே.சி. வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா, சதீசன் ஆகியோரின் ஆதரவாளர்கள் கேரளத்தில் பதாகைகள் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.இது தொடர்பாக கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் முரளீதரன், “ஒரு தசாப்த காலத்திற்கு பிறகு கேரளத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த நிலையில் கட்சியின் ஒற்றுமை அவசியம்” என்றார். ஆனால் முதல்-மந்திரி பதவியை கைப்பற்றுவதில் அங்கு கடும் மோதல் நிலவி வருகிறது.இந்த நிலையில் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் உயர்மட்ட கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, வி.டி. சதீசன், கே.சி. வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா மற்றும் கேரள காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.அதேநேரம் கட்சி மேலிடம் எடுக்கும் எந்த முடிவையும் ஏற்போம் என முதல்-மந்திரி பதவி போட்டியில் இருக்கும் 3 தலைவர்களும் தெரிவித்தனர்.

மேலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பதாகைகள் வைப்பது உள்ளிட்ட எந்தவொரு போட்டி சார்ந்த நடவடிக்கைகளிலும் இருந்து தங்கள் ஆதரவாளர்கள் விலகி இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.இதனை தொடர்ந்து சோனியா காந்தியுடன் ஆலோசித்த பிறகு காங்கிரஸ் தலைமை, முதல்-அமைச்சர் யார்? என்பதை விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கேசி வேணுகோபால் கேரள மதல் மந்திரியாக தேர்வு செய்யவே அதிகம் வாய்ப்புள்ளதாகவும் ஒரு பேச்சு எழுந்துள்ளது. ராகுல் காந்தி அவரது பெயரையே பரிந்துரைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கேரள காங்கிரசில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article CSK vs LSG: 13 பந்துகளில் சிஎஸ்கே வீரர் உர்வில் பட்டேல் அரைசதம்.. 7 சிக்சர்கள் பறக்கவிட்ட அசத்தல்
Next Article திமுகவிடமிருந்து தவெகவிற்கு தாவிய காங்கிரஸ் – செல்வப்பெருந்தகை விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மக்களவையில் பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது

பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில், பொதுத்தேர்வுகள் (தடுப்பு மற்றும் முறைகேடு தடுப்பு) சட்ட திருத்த…

ஜூலை 27, 2026

மாணவர்களுக்கு எதிராக அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்…

ஜூலை 27, 2026

மாணவர்கள் மீது ஏகே 47 துப்பாக்கிச் சூடு – தேஜஸ்வி யாதவ் கண்டனம்

மாணவ போராட்டக்காரர்கள் மீது ஏகே 47 ரக…

ஜூலை 27, 2026

மாணவர்கள் மீது ஏகே-47: பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி

டெல்லியில் மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகள், பீகாரில்…

ஜூலை 27, 2026

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்களவையில் அறிமுகம்

வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதா இன்று…

ஜூலை 27, 2026

You Might Also Like

இந்தியா

ரோகித் சர்மா, மாதவன் உட்பட 65 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கல்

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ரோகித் சர்மா, மாதவன் மற்றும் தமிழகத்தின் மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம் உட்பட 65 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார்.

1 Min Read
இந்தியா

ரயிலில் தீ விபத்து வதந்தி: தண்டவாளத்தில் குதித்து 4 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியை நம்பி, தண்டவாளத்தில் குதித்த 4 பயணிகள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

1 Min Read
இந்தியா

ரூ.182 கோடி போதைப்பொருள்: ‘ஆபரேஷன் ரேஜ்பில்’ வெற்றி – அமித் ஷா பாராட்டு!

ரூ.182 கோடி மதிப்புள்ள 227.7 கிலோ கேப்டகான் போதைப்பொருளை 'ஆபரேஷன் ரேஜ்பில்' மூலம் கைப்பற்றிய NCB-க்கு மத்திய அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

2 Min Read
சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்
இந்தியா

சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்: டெல்லி ஐகோர்ட் அனுமதி

சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?