MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய்யை கடுமையாக விமர்சித்த சிவசங்கர்: ‘ரொம்ப டீ ஆத்துறீங்க CM சார்’
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய்யை கடுமையாக விமர்சித்த சிவசங்கர்: ‘ரொம்ப டீ ஆத்துறீங்க CM சார்’
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய்யை கடுமையாக விமர்சித்த சிவசங்கர்: ‘ரொம்ப டீ ஆத்துறீங்க CM சார்’

தமிழ்நாடு

விஜய்யை கடுமையாக விமர்சித்த சிவசங்கர்: ‘ரொம்ப டீ ஆத்துறீங்க CM சார்’

Fernandez
Last updated: ஜூலை 10, 2026 9:10 மணி
Fernandez
Share
முன்னாள் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
முன்னாள் அமைச்சர் சிவசங்கர்
SHARE

நடிகர் விஜய்யை முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். 'ரொம்ப டீ ஆத்துறீங்க CM சார்' என்று குறிப்பிட்டு, கரூர் துயர சம்பவத்திற்கு விஜய்யின் அலட்சியமே காரணம் என அவர் குற்றம் சாட்டினார். விஜய்யின் பயந்த முதுகுதான் கரூரின் நினைவுச்சின்னமாக இருக்கும் என்றும் சிவசங்கர் சாடினார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சிவசங்கர், "இன்று கரூருக்கு சொன்ன நேரத்தில் சென்ற நீங்கள், அன்றே அதே நேரத்திற்கு சென்றிருந்தால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்திருக்காது. கடந்த ஆட்சியின் மீது நீங்கள் சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உங்களுக்கே பொருந்தும். நீங்கள் படித்த ஸ்கிரிப்டை நன்றாக படித்திருந்தால் இது உங்களுக்கு புரிந்திருக்கும்" என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "யோகி பாபுவை பார்க்க கூட்டம் கூடி, அங்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால், அதற்கும் அரசு சார்பாக ஏதாவது செய்வாரா? இதற்கும் பணி ஆணை கொடுப்பாரா? எந்த ஒரு அரசியல் கட்சியும், தன்னுடைய அரசியல் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் உயிரிழப்பதை விரும்பமாட்டார்கள். அன்று எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் மிகவும் பெருந்தன்மையாக சொன்னார்கள். காரணம், அவர் உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர். அவரையும், உங்களையும் எந்த ஒரு விதத்திலும் ஒப்பிட முடியாது.

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விமான நிலையத்தில் ஒரு வேக நடை போட்டாரே… அந்த முதுகுதான் கரூர் மக்களுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் நினைவுச் சின்னமாக இருக்கும். கரூர் உள்ளே செல்லும்போது உங்களை காவல்துறை எச்சரித்தது. இதனை விசாரணையில் சிபிஐயிடமும் காவல்துறை சொல்லியிருக்கிறது. ஆனால் எங்கள் திரைப்பட Unit-கள், கேமராக்களுடன் அங்கே காத்திருக்கிறது என்று நீங்கள் தான் உள்ளே சென்றீர்கள். அதனால் தான் 41 பேர் பலியான துயரம் நிகழ்ந்தது என்பது பட்டவர்த்தமான உண்மை. ஆனால் அதனை மறைக்க இன்று காவல்துறை மீது பழியை போடுகிறீர்கள்" என்று குற்றம் சாட்டினார்.

"உங்கள் ஆட்சி அமைந்து 2 மாதங்கள் ஆகியும் கரூருக்கு ஏன் முன்பே செல்லவில்லை? 2026 பிப் 9 அன்று, YS சுனில் ரெட்டியின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டீர்கள். 2026 மார்ச் 5 அன்று, திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி குடும்ப திருமண நிகழ்வில் கலந்துகொண்டீர்கள். 2025 டிச 27 அன்று, மலேசியாவில் நடைபெற்ற உங்களின் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டதோடு, மிகுந்த உற்சாகத்துடன் நடனமும் ஆடினீர்கள். உங்கள் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினீர்கள். இதையெல்லாம் செய்துவிட்டு உங்களுக்கு மனதில் இருந்த காயத்தையும் வலியையும் கரூர் வந்துதான் ஆத்துகிறேன் என்று ரொம்ப டீ ஆத்துகிறீர்கள்" என்று சிவசங்கர் தனது விமர்சனத்தை முடித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அமைச்சர்கரூர்சிவசங்கர்தமிழக அரசியல்திமுகமுன்னாள் அமைச்சர்விமர்சனம்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகிறார் பேசுவதை குறைத்து, அதிகம் செயல்படுகிறார் முதல்வர் – திருமாவளவன்
Next Article பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிக்கை வெளியிடுகிறார் அரசுப் பள்ளியில் விஜய் வீடியோ: தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால்

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம் என டெல்லி…

ஜூலை 12, 2026

ரூ.1.80 கோடி மோசடி: நடிகர் ஆர்யா மீது வழக்குப்பதிவு

நடிகர் ஆர்யா மீது 1.80 கோடி ரூபாய்…

ஜூலை 12, 2026

தெலங்கானாவில் 6 பேர் படுகொலை: போக்சோ வழக்கில் அலட்சியம் காட்டிய எஸ்ஐ சஸ்பெண்ட்

தெலங்கானாவில் போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளிவந்த நபர்…

ஜூலை 12, 2026

மகாராஷ்டிராவில் கிறிஸ்தவ தேவாலயங்கள், மிஷனரி நிலங்கள் தணிக்கை

மகாராஷ்டிராவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மிஷனரி அமைப்புகளுக்குச்…

ஜூலை 12, 2026

பாஜக எங்கள் ஆட்சியை கவிழ்க்க முயற்சி: ஜம்மு காஷ்மீர் முதல்வர் குற்றச்சாட்டு

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, தனது…

ஜூலை 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழகம் இருளில் மூழ்குகிறதா? அரசு வேடிக்கை பார்க்கிறது – எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு தடையில்லா மின்சாரம் வழங்கத் தவறிவிட்டதாகவும், இதனால் தமிழகம் இருளை நோக்கிச் செல்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

1 Min Read
ஆஸ்திரேலியாவிலிருந்து தமிழகம் திரும்பிய 3 பழமையான சிலைகள்
தமிழ்நாடு

ஆஸ்திரேலியாவிலிருந்து தமிழகம் திரும்பிய 3 பழமையான சிலைகள்

ஆஸ்திரேலியாவிலிருந்து கடத்தப்பட்ட 3 பழமையான சிலைகள் தமிழகம் திரும்பியுள்ளன. மத்திய அரசின் உதவியுடன் இவை டெல்லிக்கு கொண்டு செல்லப்படும்.

1 Min Read
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமைச்சர் கீர்த்தனா அரசுப் பள்ளி மாணவர்களிடம் நடத்திய ஆய்வு குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை விதைப்பதாகவும், தகுந்த…

2 Min Read
ஜோதிட நிபுணர் ராசி பலன்களை விளக்குகிறார்
தமிழ்நாடு

05-07-2026 இன்றைய ராசி பலன்: குடும்பத்தில் அன்பு நீடிக்கும்

05-07-2026 அன்று மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கான தினசரி ராசி பலன்கள். குடும்ப உறவுகள், தொழில், பொருளாதாரம் குறித்த கணிப்புகள்.

4 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?