MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: “நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: “நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - “நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி

இந்தியா

“நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி

Admin
Last updated: மே 10, 2026 12:59 மணி
Admin
Share
SHARE

பெங்களூரு: துரோகம் இழைக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும் என்றும், தனது நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோம் இழைத்த கட்சி அது என்றும் பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.

வாழும் கலை அமைப்பின் 45வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு கூடி இருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், “போலி வாக்குறுதிகள் காரணமாக காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. தற்போது அது, பிராந்திய கட்சிகளின் துணையுடன் பிழைத்து வாழும் ஒரு ஒட்டுண்ணி அரசியல் சக்தியாக உள்ளது.

எந்த ஒரு மாநிலத்திலும் காங்கிரஸ் அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததில்லை. ஆட்சி அமைத்த சில மாதங்களிலேயே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மக்கள் மத்தியில் அதிருப்தி எழத் தொடங்கிவிடுகிறது. இதற்குக் காரணம், துரோகம் இழைக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும். அவர்கள் பொய்யர்கள்; அவர்களின் வாக்குறுதிகளும் போலியானவை. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப் புத்தகத்தில் நிர்வாகம் என்ற அத்தியாயம் அறவே இல்லை.

தமிழ்நாட்டில் கடந்த 25-30 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே மிக நெருக்கமான உறவு இருந்து வருகிறது. திமுகவுடனான இந்த கூட்டணிதான் நெருக்கடியான தருணங்கள் பலவற்றில் இருந்த காங்கிரஸ் கட்சியை மீண்டும் மீண்டும் மீட்டெடுத்திருக்கிறது. 2014-ம் ஆண்டுக்கு முன் அவர்கள் 10 ஆண்டுகள் நடத்திய ஆட்சி, திமுகவின் துணையால் மட்டுமே நிலைத்திருந்தது.

25-30 ஆண்டுகளாக தங்களோடு மிக நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருந்த திமுகவை; காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக ஒவ்வொரு கணமும் உழைத்த அந்த திமுகவை; அதிகார ஆட்டம் வேறு திசைக்கு திரும்பிய உடனேயே அதிகார வெறிபிடித்த காங்கிரஸ் கட்சி தனது பதவி ஆசை காரணமாக கிடைத்த முதல் வாய்ப்பிலேயே திமுகவின் முதுகில் குத்திவிட்டது. நீண்டகாலக் கூட்டணி கட்சியான திமுகவுக்கு துரோகம் இழைத்துள்ளது. அரசியல் சூழல்கள் மாறும்போதெல்லாம் அக்கட்சி தனது சொந்த கூட்டணி கட்சிகளுக்கே எதிராக திரும்பிவிடுகிறது. ஒட்டுண்ணி போன்ற காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள, தான் சவாரி செய்ய மற்றொரு கட்சியின் துணை தேவைப்படுகிறது.

ஒரு காலத்தில் 400க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி இப்போது, கூட்டணிகளை அமைத்த பிறகும் கூட 100 தொகுதிகள் என்ற இலக்கை கடக்க முடியாமல் திணறுகிறது. அதேநேரத்தில் பாஜக தனது செல்வாக்கை நாடு முழுவதும் விரிவுபடுத்தி வருகிறது. சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்னால், மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்தார்கள். இன்று 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.

கேரளாவிலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையில் இருந்து தற்போது மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற நிலையை எட்டி இருக்கிறோம். கேரளாவில் பெரும்பான்மையைக் கடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. பாஜக தனது இருப்பை படிப்படியாக வலுப்படுத்தி வருகிறது” என தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 200 யூனிட் இலவச மின்சாரம்: முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்து
Next Article மகரம்: இன்றைய ராசிபலன் – 10 மே 2026
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற கட்டிடம்

ஜார்க்கண்ட் அரசுப் பணி தேர்வுக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜார்க்கண்ட் அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் நடத்திய சிவில் சர்​வீஸ் முதல்​நிலைத் தேர்வின் முடிவுகளுக்கு…

ஆகஸ்ட் 21, 2026

காந்தியின் கடிதம், பொருட்கள் ரூ.16.2 கோடிக்கு ஏலம்!

மகாத்மா காந்தியின் அரிய கடிதம் மற்றும் அவர்…

ஆகஸ்ட் 21, 2026

விலை உயர்வை கட்டுப்படுத்த சர்க்கரை இறக்குமதி? மத்திய அரசு பரிசீலனை

கடந்த மார்ச் மாதம் முதல் சர்க்கரை விலை…

ஆகஸ்ட் 21, 2026

3 முக்கிய ஊழல்களை அம்பலப்படுத்துவேன்: கேஜ்ரிவாலுக்கு சுகேஷ் சந்திரசேகர் மிரட்டல்

பணமோசடி வழக்கில் திகார் சிறையில் உள்ள சுகேஷ்…

ஆகஸ்ட் 21, 2026

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் காலமானார்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கண்டன அறிக்கை
இந்தியா

வெளிநாட்டு பங்களிப்பு மசோதா: அமெரிக்க எம்பிக்கு மத்திய அரசு கண்டனம்

வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

1 Min Read
தமிழக முதல்வர் விஜய்
இந்தியா

மேகதாது அணை: மாநிலங்களவையில் காங்கிரஸ் நோட்டீஸ்

தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்க மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் நோட்டீஸ்…

1 Min Read
நோக்கியா நிறுவனத்தின் மீது மோசடி வழக்குப்பதிவு
இந்தியா

நோக்கியா அதிகாரிகள் மீது ரூ.19.33 கோடி மோசடி வழக்கு

போலி பிஎப் கணக்குகள் மூலம் ரூ.19.33 கோடி மோசடி செய்ததாக நோக்கியா அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த மோசடி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
கருங்கடல் பகுதியில் கப்பல் பணியில் ஈடுபடும் இந்திய கப்பல் பணியாளர்கள்
இந்தியா

கருங்கடலில் இந்திய கப்பல் பணியாளர்களுக்கு அரசு எச்சரிக்கை

கருங்கடல் பகுதியில் கப்பல் பணியில் ஈடுபடும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்புச் சூழலை முழுமையாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?