MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: டிரம்பின் பேச்சு: உலக சந்தைகளில் நடுக்கம், கச்சா எண்ணெய் விலை 6.5% உயர்வு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: டிரம்பின் பேச்சு: உலக சந்தைகளில் நடுக்கம், கச்சா எண்ணெய் விலை 6.5% உயர்வு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - டிரம்பின் பேச்சு: உலக சந்தைகளில் நடுக்கம், கச்சா எண்ணெய் விலை 6.5% உயர்வு!

தமிழ்நாடு

டிரம்பின் பேச்சு: உலக சந்தைகளில் நடுக்கம், கச்சா எண்ணெய் விலை 6.5% உயர்வு!

Fernandez
Last updated: ஜூலை 9, 2026 7:33 காலை
Fernandez
Share
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசும் காட்சி
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
SHARE

ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்துக்கள் உலக சந்தைகளில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலை திடீரென 6.5% உயர்ந்து பேரல் 78 டாலராக அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் – அமெரிக்கா இடையே ஏற்பட்ட போர், பல வாரங்களுக்கு நீடித்தது. கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், உலகளவில் கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டு விலை கடுமையாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் அமைதிப் பேச்சுக்கு வந்து 60 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டன. இந்த போர் காலக்கட்டத்தில், கச்சா எண்ணெய் விலை பேரல் 130 டாலர் வரை உயர்ந்தது. போர் நிறுத்தம் ஏற்பட்டதும், விலை படிப்படியாக குறைந்து பேரல் 70 டாலர் வரை சரிந்தது.

சமீபத்தில், அமெரிக்க ட்ரோன் விமானமான யுஎஸ்-எம்கியூ9 ஆளில்லா விமானம் தங்கள் வான் எல்லைக்குள் வந்ததாகக் கூறி, ஈரானின் புரட்சிகர காவல் படை (ஐஆர்ஜிசி) தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, அமெரிக்கா தங்கள் கண்காணிப்பு மீது ஈரான் அத்துமீறியதாக தெரிவித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் உருவாகும் பதற்றம் நிலவியது.

இந்தச் சூழலை மேலும் கொதிப்படையச் செய்யும் விதமாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானுடன் ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக தெரிவித்த கருத்து, முதலீட்டாளர்களை பெரும் கலக்கமடையச் செய்தது. ஈரான் – அமெரிக்கா இடையே புதிதாக மோதல் ஏற்படலாம் என்ற அச்சத்தால் உலக அரசியலில் பதற்றம் தொற்றிக்கொண்டது.

இதனால் கச்சா எண்ணெய் சப்ளையில் மீண்டும் சிக்கல் வரலாம் என்ற அச்சத்தில், அதன் விலை திடீரென 6.5% அதிகரித்து பேரல் 78 டாலராக அதிகரித்தது. இந்தக் காரணமும் முதலீட்டாளர்களுக்கு பதற்றத்தைக் கொடுத்தது.

ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் உருவாகும் சூழல் இருப்பதை அறிந்து, உலக நாடுகளின் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் ஆர்வத்தைக் குறைத்ததால், மந்தமான நிலை காணப்பட்டது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசிய வார்த்தைகளால் ஐரோப்பிய பங்குச் சந்தைகளான பிரிட்டனின் எப்டிஎஸ்இ, பிரான்சின் சிஏசி, ஜெர்மனியின் டேக்ஸ் மற்றும் ஆசியச் சந்தைகளான ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி ஆகியவை சரிவுடன் வர்த்தகத்தை முடித்தன.

அமெரிக்கப் பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக உற்சாகமாக சென்ற நிலையில், அதிபர் டிரம்பின் பேச்சால், டோ ஜோன்ஸ் வர்த்தகம் தொடக்கமே ஒரு சதவீதம் வீழ்ச்சியுடன் தொடங்கியது. உலகச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவும், பரபரப்புடனும், பதற்றத்துடனும் காணப்பட்டது. இதன் எதிரொலி இந்தியச் சந்தைகளிலும் காணப்பட்டது. முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பாதுகாப்பாக வைத்திருக்க பங்குகளை வேகமாக விற்பனை செய்ததால், சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது.

அமெரிக்க ஃபெடரல் வங்கி வரும் மாதங்களில் வட்டியை அதிகரிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும், பங்குப் பத்திரங்கள் மீது கிடைக்கும் ஈவுத்தொகை அதிகரித்திருப்பதும், முதலீட்டாளர்களுக்கு டாலர் மற்றும் பங்குப் பத்திரங்கள் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. பங்குப் பத்திரங்கள் மீது முதலீடு செய்தால் கிடைக்கும் வட்டி அதிகம், பலன் அதிகம், பாதுகாப்பு அதிகம் என்பதால், இந்தியச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுவது அதிகரித்து, அழுத்தத்தை ஏற்படுத்தியது.

சர்வதேச சூழல் பதற்றமடைந்துவிட்டதால், மீண்டும் ஈரான் – அமெரிக்க இடையே போர் மேகம் சூழலாம் என்ற கணிப்பு, டாலர் மீதான தேவையை அதிகப்படுத்தியது. இதனால், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 0.5% சரிந்து, ரூ.95.50 என நிலை பெற்றது.

அடுத்த இரு நாட்களும் சர்வதேசச் சூழலில் நிலவும் நிலைத்தன்மையைப் பொறுத்து இந்தியச் சந்தைகளில் வர்த்தகம் நடக்கும். அதிபர் ட்ரம்ப் பேச்சு, முதலீட்டாளர்களின் அச்சத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. வரும் நாட்களில் ஈரான் – அமெரிக்கா இடையே அமைதியான சூழல் நிலவுமா அல்லது ஏதேனும் புதிய மோதல் தொடங்குமா என்பதைப் பொறுத்து சந்தையில் வர்த்தகத்தின் போக்கு அமையும். குறிப்பாக, ட்ரம்ப் பேச்சால், கச்சா எண்ணெய் விலை திடீரென 6 சதவீதம் அதிகரித்துள்ளது, இதுவும் முதலீட்டாளர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை வரும் நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் இல்லாவிட்டால், கச்சா எண்ணெய் விலை ஏறிய வேகத்தில் இறங்கவும் வாய்ப்புள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Crude OilIranTrumpUSAஅமெரிக்காஈரான்உலக சந்தைகச்சா எண்ணெய்ட்ரம்ப்போர் பதற்றம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article செவ்வாய் கிரகத்தை நோக்கிய புதிய விண்கலத்தின் பயணத்தைக் குறிக்கும் படம் 56 நாட்களில் செவ்வாய்: 2031-ல் புதிய விண்கலம் பாய்கிறது!
Next Article புதிதாக அமைக்கப்படவுள்ள போக்சோ நீதிமன்றங்கள் குறித்த அறிக்கை தமிழகத்தில் புதிதாக 6 போக்சோ நீதிமன்றங்கள்: உயர் நீதிமன்றம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி

காவிரி நீர் வழங்க முடியாது: கர்நாடக அமைச்சர் திட்டவட்டம்

கர்நாடகாவில் போதிய மழை இல்லாததாலும், அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாலும் தமிழகத்திற்கு…

ஜூலை 9, 2026

வட மாநிலங்களில் கனமழை: போக்குவரத்து ஸ்தம்பித்தது

டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில்…

ஜூலை 9, 2026

வெளிநாட்டு எம்பிபிஎஸ்: 12% பேர் மட்டுமே தகுதித் தேர்வில் தேர்ச்சி

வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படித்த இந்திய மாணவர்களுக்கான கட்டாய…

ஜூலை 9, 2026

பிற மாநில வாகனங்கள் 3 ஆண்டுகள் பயன்பாடு: மத்திய அரசு திட்டம்

பணி நிமித்தமாக பிற மாநிலங்களுக்குச் செல்லும் வாகன…

ஜூலை 9, 2026

அயோத்தி ராமர் கோயிலில் போலி ரசீது: பண மோசடி அம்பலம்

அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்களிடம் போலி ரசீதுகள்…

ஜூலை 9, 2026

You Might Also Like

தமிழ்நாடு

51,000 இளைஞர்களுக்கு அரசு பணி: மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல்.முருகன், நாடு முழுவதும் 51,000 இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி நியமனக் கடிதங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

1 Min Read
சென்னையில் மெட்ரோ ரயில் நிலையப் பெயர்கள் மாற்றும் பணி
தமிழ்நாடு

மெட்ரோ ரயில் நிலையப் பெயர்கள் மாற்றத்தில் தமிழக அரசு அதிரடி

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர்களை மாற்றும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. மாதவரம் பால் பண்ணை - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் பெயர் மாற்றம் வர…

2 Min Read
தமிழ்நாடு

சி.வி.சண்முகம் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் – முதன்மைச் செயலாளர் தகவல்

தமிழக சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மயிலம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம் பதவியேற்கவில்லை. சி.வி. சண்முக

1 Min Read
தமிழ்நாடு

மேகதாது அணை: தனித்தீர்மானத்திற்கு வேல்முருகன் நன்றி

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?