MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: CSK: சிஎஸ்கே-வுக்கு வந்த உடன் கேப்டன் பதவி கேட்பதா? நெகிழ வைத்த சஞ்சு சாம்சன்.. என்ன சொன்னார்?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > CSK: சிஎஸ்கே-வுக்கு வந்த உடன் கேப்டன் பதவி கேட்பதா? நெகிழ வைத்த சஞ்சு சாம்சன்.. என்ன சொன்னார்?
விளையாட்டு

CSK: சிஎஸ்கே-வுக்கு வந்த உடன் கேப்டன் பதவி கேட்பதா? நெகிழ வைத்த சஞ்சு சாம்சன்.. என்ன சொன்னார்?

Admin
Last updated: May 10, 2026 10:56 am
Admin
Share
SHARE

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என சில ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். சஞ்சு சாம்சன் இதுகுறித்து முதன்முறையாக வாய் திறந்துள்ளார். அவர் சொன்ன ஒரு கருத்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 2026 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து 18 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணிக்கு மாறினார் சஞ்சு சாம்சன்.

அப்போது முதல், தோனி மற்றும் ருதுராஜுக்குப் பிறகு சிஎஸ்கே அணியை வழிநடத்தப்போகும் அடுத்த கேப்டன் சஞ்சு தான் என சமூக வலைதளங்களில் பலத்த பேச்சு எழுந்தது. இது குறித்து மூத்த வீரர் அஸ்வின் கூறுகையில், “நான் ஒன்றும் ஜோசியர் இல்லை, ஆனால் ஒரு கட்டத்தில் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியை வழிநடத்துவதை என்னால் பார்க்க முடிகிறது. அது எப்போது நடக்கும் எனத் தெரியவில்லை, ஆனால் நிச்சயம் நடக்கும்” என கூறியிருந்தது இந்த விவாதத்தை மேலும் சூடாக்கியது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ‘பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் அபினவ் முகுந்துடன் கலந்து கொண்ட சஞ்சு சாம்சன், கேப்டன் பதவி குறித்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அவர் கூறுகையில், “உண்மையைச் சொல்லப்போனால், நாம் ஒரு புதிய வீட்டிற்குள் நுழையும்போது, அங்கு பல நிபந்தனைகளையும் கோரிக்கைகளையும் முன்வைக்கக்கூடாது என்பதை நான் கற்றுக் கொண்டுள்ளேன்” என மிக எளிமையாக பதிலளித்தார். அதாவது, சிஎஸ்கே அணி என்ற புதிய குடும்பத்தில் ஒரு வீரராக இணைந்ததே மிகப்பெரிய விஷயம் என்றும், அங்கு சென்றவுடன் தனக்கு கேப்டன் பதவி வேண்டும் என கேட்பது முறையல்ல என்பதையும் அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதனும் இதே கருத்தைத் தான் வெளிப்படுத்தியிருந்தார். ருதுராஜ் கெய்க்வாட் அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் திறன் படைத்தவர் என்றும், அவரது தலைமையிலான அணி சிறப்பாக செயல்படும் என்றும் அவர் கூறியிருந்தார். ஸ்ரேயாஸ் ஐயரைப் போலவே சஞ்சு சாம்சனும் ஒரு சிறந்த கேப்டன் என்றாலும், தொடக்கத்திலேயே அவர் மீது கேப்டன் என்ற கூடுதல் அழுத்தத்தை சுமத்த சிஎஸ்கே அணி நிர்வாகம் விரும்பவில்லை. சஞ்சுவின் பேட்டிங் திறமை மீது தங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் காசி விஸ்வநாதன் குறிப்பிட்டிருந்தார்.

சிஎஸ்கே அணிக்காக நடப்பு சீசனில் சஞ்சு சாம்சன் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2 சதங்கள் மற்றும் ஒரு அரைசதத்துடன் 402 ரன்களைக் குவித்துள்ளார். கேப்டன் பதவி குறித்து கவலைப்படாமல் ரன்களைக் குவிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வரும் சஞ்சுவின் இந்த முதிர்ச்சியான அணுகுமுறை சென்னை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சீசனில் அவரது அதிரடி ஆட்டம் சிஎஸ்கே அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னை, புறநகரில் விடிய விடிய பெய்த மழை: விமான சேவைகள் பாதிப்பு
Next Article தமிழக முதல்-அமைச்சராக இன்று விஜய் பதவியேற்கிறார்: சென்னையில் 20 இடங்களில் விழா நேரலை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…

May 10, 2026

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…

May 10, 2026

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026

You Might Also Like

விளையாட்டு

IPL 2026: பவுன்சர் வீசுவது பின்னணியில் பல வருட உழைப்பு இருக்கிறது.. குர்னால் பாண்டியா கருத்து

அகமதாபாத்: பாண்டியா சகோதரர்களில் மூத்தவரான குருணால், இந்தியாவிற்காக இதுவரை 5 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் (ODI) மற்றும் 19 டி20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடந்த இரண்டு…

3 Min Read
விளையாட்டு

IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் முதல் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் பரிதாபம்.. ரன்களை வழங்கி மோசமான சாதனை

ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் தொடரில் ஒருபுறம் பேட்ஸ்மேன்கள் பவுண்டரி, சிக்சர்களாக விளாசி புதிய சாதனைகளை படைத்து வரும் நிலையில், மறுபுறம் பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கி பல…

2 Min Read
ஐபிஎல் 2026விளையாட்டு

IPL 2026 : கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பான ஆட்டம்.. லக்னோவுக்கு எதிரான மேட்ச்சில் சிஎஸ்கே த்ரில் வெற்றி

IPL 2026 : கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பான ஆட்டம்.. லக்னோவுக்கு எதிரான மேட்ச்சில் சிஎஸ்கே த்ரில் வெற்றிPublished by:Last Updated:May 10, 2026 7:59…

2 Min Read
விளையாட்டு

சவுதி புரோ லீக்: 100 கோல்கள் அடித்த ரொனால்டோ

18 அணிகள் இடையிலான சவுதி புரோ லீக் கால்பந்து போட்டி சவுதி அரேபியாவில் நடந்து வருகிறது. இதில் தைப் நகரில் நடந்த லீக் ஆட்டத்தில் அல் நாசர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?