MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சென்னை, புறநகரில் விடிய விடிய பெய்த மழை: விமான சேவைகள் பாதிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > சென்னை, புறநகரில் விடிய விடிய பெய்த மழை: விமான சேவைகள் பாதிப்பு
லைஃப் ஸ்டைல்

சென்னை, புறநகரில் விடிய விடிய பெய்த மழை: விமான சேவைகள் பாதிப்பு

Admin
Last updated: May 10, 2026 10:26 am
Admin
Share
SHARE

சென்னை: கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சென்னை, புறநகரில் நேற்று விடிய விடிய மழை பெய்தது. இதனாலா, பூமி குளிர்ந்து ரம்மியமான சூழல் நிலவியது.

சென்னை, புறநகரில் கடந்த இரு வாரங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. கடந்த சில தினங் களாக சென்னையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வந்தது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமலும், இரவில் புழுக்கத்தால் தூங்க முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், 7-ம் தேதி நள்ளிரவு மற்றும் 8-ம் தேதி காலை ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக, சென்னை, புறநகரில் நேற்று அதிகாலை நேரத்தில் பரவலாக மழை பெய்தது. காலையிலிருந்து லேசான தூரல் மழை பெய்தது.

இதனால், காலை முதலே மாநகர், புறநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகலிலும் சென்னை, புறநகர் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து, சாலையில் மழைநீர் ஓடியது.

சாலையோரங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக, நுங்கம்பாக்கம், டிஜிபி அலுவலகம், எண்ணூர், சோழிங்க நல்லூரில் தலா 2 செ.மீ, தண்டையார்பேட்டை, எம்ஜிஆர் நகர், பெரம்பூர், சைதாப்பேட்டை, சென்னை ஆட்சியர் அலுவலகம், வில்லிவாக்கம், அண்ணா பல்கலைக் கழகம் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

விமான சேவைகள் பாதிப்பு: சென்னையில் மழை காரணமாக நேற்று மோசமான வானிலை நிலவியதால், சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடி யாமல், நடுவானில் வட்டமடித்து கொண்டிருந்தன. பெங்களூர், மும்பையில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் உட்பட 5 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாததால், அந்த விமானங்களை பெங்களூருக்கு திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சிறிது நேரத்தில் வானிலை சீரானதும், விமானங்கள் சென்னையில் தரையிறங்கின.

அதேநேரம், சென்னையில் இருந்து அகமதாபாத், டெல்லி, கண்ணூர், தூத்துக்குடி, கோவை, சேலம் உள்ளிட்ட 10 இடங்களுக்கு செல்ல இருந்த விமானங்கள் பலத்த மழையால் தாமதமாக புறப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் மொத்தமாக 15-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் பதவி ஏற்பு: வீட்டில் இருந்து புறப்பட்டார் திரிஷா
Next Article CSK: சிஎஸ்கே-வுக்கு வந்த உடன் கேப்டன் பதவி கேட்பதா? நெகிழ வைத்த சஞ்சு சாம்சன்.. என்ன சொன்னார்?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அமுல் பால் விலை உயர்வு: லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு!

இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான அமுல், நாடு முழுவதும் பால் விலையை…

May 13, 2026

காரிஃப் பயிர்கள்: மத்திய அரசு அறிவித்த புதிய குறைந்தபட்ச ஆதார விலைகள்!

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, 2026-2027 சந்தைப்படுத்தல்…

May 13, 2026

சேலை சரியில்லை: மணமகள் மறுப்பு – திருமணமே நின்றது! குடும்பத்தில் மோதல்

உத்தர பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் உள்ள…

May 13, 2026

பிரிக்ஸ் மாநாடு: டெல்லி வந்தடைந்தார் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்!

புதுடெல்லி: பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும்…

May 13, 2026

திருமணத்தில் ஸ்விக்கி டெலிவரி: பூசாரிக்கு விறகு கொடுத்த நபர் வைரல்!

தென்னிந்திய திருமணங்கள் எப்போதும் பரபரப்புக்கும், எதிர்பாராத நிகழ்வுகளுக்கும்…

May 13, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

வி.சி.க.வின் ஆதரவு யாருக்கு..? என்ன முடிவெடுக்க போகிறார் திருமாவளவன் – இன்று அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில், திண்டிவனம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி…

3 Min Read
லைஃப் ஸ்டைல்

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மீதான பாலியல் தொல்லை வழக்கு தள்​ளு​படி

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் மீது தொடரப்​பட்ட பாலியல் தொல்லை வழக்கை அமெரிக்க நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்துள்ளது. நடிகர் வில் ஸ்மித், ‘பேஸ்டு ஆன் த ட்ரூ…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

விஜய் ஆட்சி அமைக்க விசிக ஆதரவு: பெரும்பான்மையை எட்டியது தவெக!

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களைக் கைப்பற்றினாலும் கூட, பெரும்பான்மை இல்லாததால் இதுவரை ஆட்சியமைக்க இயலாமல் தவித்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

2 Min Read
ஆன்மிகம்லைஃப் ஸ்டைல்

“தவெக-வை புறக்கணித்து தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது”- நாஞ்சில் சம்பத்

தமிழக வெற்றி கழக பிரிவு செயலாளர் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது:- வஞ்சகம், வன்மம், வக்ரம், அநீதி, அநியாயம், அக்ரமம், சூது, வாது,…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?