MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அனிதா ராதாகிருஷ்ணன் திடீர் கைது: பின்னணி என்ன?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > அனிதா ராதாகிருஷ்ணன் திடீர் கைது: பின்னணி என்ன?
தமிழ்நாடு

அனிதா ராதாகிருஷ்ணன் திடீர் கைது: பின்னணி என்ன?

Admin
Last updated: July 3, 2026 1:04 pm
Admin
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.கே இளந்திரையன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கடந்த ஜூன் 20, 2026 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழக முதல்வரும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவருமான சி. ஜோசப் விஜய் குறித்து ஒருமையிலும், கடுமையான ஆட்சேபனைக்குரிய வகையிலும் அவர் விமர்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வரின் முகபாவனை 'ஐயோ நாம் ஏதோ ஒரு பொறியில் மாட்டிக்கொண்டோம்' என நினைப்பதாக இருந்தது என்றும், தவறான இரட்டை அர்த்தம் உள்ள பழமொழிகளை கூறியும் அவர் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின்பேரில், ஆத்தூர் காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமைதியைக் குலைத்தல், மோதலைத் தூண்டுதல் (BNS பிரிவுகள் 352, 353(2)) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், தன்னை எந்த நேரத்திலும் கைது செய்ய நேரிடும் என்பதால், தனக்கு முன் பிணை வழங்கக்கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ஆளுங்கட்சியின் நடவடிக்கைகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி மற்றும் எதிர்ப்பு குறித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்ற முறையில் தான் பேசியதாகவும், அரசியல் கருத்துக்களை நேர்மையாக எடுத்துக்கொள்ளாமல், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர், 'காவல்துறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வழக்குப்பதிவு செய்துள்ளது. அரசின் நிர்வாக குறைபாடு குறித்து மட்டுமே பேசியுள்ளார். தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. அவதூறு வழக்கு தொடர்வதற்கான முகாந்திரம் இல்லை என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என்று வாதிட்டார். காவல்துறை தரப்பில், '7 தடவை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பதவி வகித்தவருக்கு பொதுவெளியில் எப்படி பேச வேண்டும் என்பது தெரியவில்லை. நலத்திட்ட விழாவில் இதுகுறித்து பேசவேண்டிய அவசியம் இல்லை. அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க போதுமான முகாந்திரம் உள்ளது' என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 'ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் என்ன பேசுகிறோம் என்பதை தெரிந்து பேச வேண்டும். அதற்காக முதலமைச்சரை அவதூறாக பேசலாமா? எந்த முதலமைச்சர் குறித்தும் அவதூறாக பேசக்கூடாது. அனிதா ராதாகிருஷ்ணன் ஒன்றும் சாதாரண மனிதர் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். அதற்கான தகுதியுடன் பொதுவெளியில் பேச வேண்டும்' என தெரிவித்து, அவருடைய முன் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், தூத்துக்குடி ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு ஆய்வுக்கு சென்ற அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் அதிரடியாக கைதுசெய்துள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Anitha Radhakrishnanஅனிதா ராதாகிருஷ்ணன்கைதுதவெகமுன்ஜாமீன்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article புஷ்பா ஸ்டைலில் வெஸ்பா ஸ்கூட்டரில் வலம் வரலாம்!
Next Article கோயில் வேலைக்கு லஞ்சம்: அமைச்சர் ரமேஷ் தனி இ-மெயில் அறிவிப்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு உத்தரவு: 7 மொபைல் செயலிகளுக்கு தடை

7 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை: முக்கிய அறிவிப்பு

இந்தியாவில் செயல்பட்டு வந்த 7 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை…

July 3, 2026

தமிழகத்தில் நேர்மையான ஆட்சி: முதல்-அமைச்சர் விஜயை புகழும் வைகோ

முதல்-அமைச்சர் விஜய் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை வழங்கி…

July 3, 2026

மேகதாது விவகாரம்: டி.கே. சிவக்குமார் அமைதிக்கு அசோகா கேள்வி

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்…

July 3, 2026

சகோதரரை தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சனுக்கு நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி நீதிமன்றம், அமைச்சர் மரிய வில்சன் தனது…

July 3, 2026

வாட்ஸ்அப் புதிய யூசர்நேம் அம்சம்: பாதுகாப்பு அம்சங்கள் என்ன?

வாட்ஸ்அப் தனது புதிய 'யூசர்நேம்' அம்சம் குறித்து…

July 3, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதலுதவி செய்ததை இழிவுபடுத்தும் திமுக: அமைச்சர் விஸ்வநாதன் கண்டனம்

மாரத்தான் ஓடிய சிறுமிகளுக்கு முதலுதவி செய்ததை இழிவுபடுத்தும் வகையில் திமுக ஐடி விங் பதிவு செய்திருப்பதாக அமைச்சர் விஸ்வநாதன் வேதனை தெரிவித்துள்ளார். இது தரம் தாழ்ந்த அரசியல்…

1 Min Read
தமிழ்நாடு

பாலியல் குற்றவாளிகளுக்கு ‘கலர் கோடு’: தவெக அரசு புதிய திட்டம்

பாலியல் குற்றவாளிகளைக் கண்காணிக்க 'SPECTRUM' என்ற புதிய 'கலர் கோடு' திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 15,000 குற்றவாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, வண்ணக் குறியீடுகள் மூலம் கண்காணிக்கப்படும்.

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு சிவசங்கர் சவால்: ‘தைரியம் இருந்தால் வழக்கு போடுங்கள்!’

திமுகவை விமர்சித்த முதல்வர் விஜய்க்கு, திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் 'தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போடுங்கள்' என சவால் விடுத்துள்ளார். மிசா காலத்தையும் பார்த்தவர்கள்…

1 Min Read
தமிழ்நாடு

CSK vs SRH: சென்னை மெட்ரோ சிறப்பு அறிவிப்பு!

ஐபிஎல் 2026 போட்டியை காண வரும் ரசிகர்களுக்காக, சென்னை மெட்ரோ நிர்வாகம் சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுடன் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?