MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்: செந்தில்பாலாஜி சகோதரர் உட்பட 4 பேர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்: செந்தில்பாலாஜி சகோதரர் உட்பட 4 பேர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்: செந்தில்பாலாஜி சகோதரர் உட்பட 4 பேர் கைது

தமிழ்நாடு

தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்: செந்தில்பாலாஜி சகோதரர் உட்பட 4 பேர் கைது

Admin
Last updated: ஜூலை 3, 2026 11:34 காலை
Admin
Share
SHARE

தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் நோக்கில், எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் சகோதரர் வி.அசோக்குமார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. டாக்டர் என்.இளையராஜாவிடம், சென்னையைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தான் ஒரு கருத்துக் கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், முக்கிய அரசியல் கட்சியினர் சார்பில் பேசுவதாகவும் கூறி நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். பின்னர், சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும், அதில் தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க வேண்டும் என்றும், அதற்கு ஈடாக ரூ.35 கோடி வரை பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை காட்டியுள்ளார். எம்.எல்.ஏ. இளையராஜா மறுப்பு தெரிவித்தபோது, இதுகுறித்து வெளியே கூறினால் உயிருக்கு ஆபத்து என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து எம்.எல்.ஏ. இளையராஜா கடந்த மாதம் 29-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். செல்போன் அழைப்பு விவரங்கள், தொழில்நுட்ப ஆதாரங்களை சேகரித்து, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இந்த சதியில் திமுக முன்னாள் அமைச்சரும், கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜியின் சகோதரர் வி.அசோக்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட 4 பேரும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேரை ஜூலை 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான நரேசை, செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் நேரடியாக சந்தித்து பேசியதாகவும், அவர்கள் அறிவுறுத்தலின் பேரிலேயே எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேசியதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள அசோக்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:TN Politicsஅசோக்குமார்ஆட்சியை கவிழ்க்ககைதுசெந்தில்பாலாஜிதவெகபேரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஹோண்டாவின் புதிய 7 சீட்டர் கார்: டாடா, மஹிந்த்ராவுக்கு சவால்!
Next Article சூப்பர் எல் நினோ: தமிழகத்திற்கு பேராபத்து? வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உத்தர பிரதேச விரைவு நீதிமன்ற நீதிபதி

உ.பி.யில் 4 மாதங்களில் 22 பேருக்கு மரண தண்டனை: நீதிபதி அதிரடி

உத்தர பிரதேச விரைவு நீதிமன்ற நீதிபதி ஒருவர், கடந்த நான்கு மாதங்களில் மட்டும்…

ஆகஸ்ட் 18, 2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: போலீஸ் விசாரணை

கர்நாடக வனவிலங்கு சரணாலயப் பகுதியில் மானை வேட்டையாடியதாகக்…

ஆகஸ்ட் 18, 2026

அசாம் அரசு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு: 2-வது திருமணம் செய்தால் சம்பளப் பிடித்தம்!

அசாமில் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது…

ஆகஸ்ட் 18, 2026

ஆம் ஆத்மி கட்சி கணக்குகள் முடக்கம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

குஜராத் தேர்தலுக்கு முன் முடக்கப்பட்ட ஆம் ஆத்மி…

ஆகஸ்ட் 18, 2026

பாஜகவில் புதிய பொறுப்புகள்: வசுந்தரா, ஸ்மிருதி இரானி நியமனம்

பாஜக தனது தேசிய துணைத் தலைவர்கள், பொதுச்…

ஆகஸ்ட் 18, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அரசு கலைக் கல்லூரிகளில் 43% இடங்கள் காலியாக உள்ளன – காரணம் என்ன?

தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவடைந்தும், 43 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதற்கான காரணங்கள் குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து…

1 Min Read
தமிழ்நாடு

விளையாட்டு வீரர்களுக்கு ₹5.80 லட்சம் நிதியுதவி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்

ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆர்வமுள்ள 2 விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5.80 லட்சம் நிதியுதவிக்கான காசோலைகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார். தடகள வீராங்கனை சமீஹா…

2 Min Read
தமிழ்நாடு

உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்கு துணையிருப்போம்: மு.க.ஸ்டாலின்

ஓராண்டில் 22 குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கியபோது நெஞ்சம் நெகிழ்ந்ததாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்கு நாம் துணையாக நிற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
கைது செய்யப்பட்ட நகைக்கடை உரிமையாளர்
தமிழ்நாடு

கோவையில் ரூ.3 கோடி தங்க மோசடி: மதுரை நகைக்கடை உரிமையாளர் கைது

கோவையில் ரூ.3 கோடி மதிப்பிலான தங்க மோசடி தொடர்பாக மதுரையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?