MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்குமா? – மாலை 4 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்குமா? – மாலை 4 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்குமா? – மாலை 4 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு

லைஃப் ஸ்டைல்

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்குமா? – மாலை 4 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு

Admin
Last updated: மே 9, 2026 4:28 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.

இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது.

தவெகவின் அழைப்பை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக அறிவித்தன. அதே சமயம், திமுக கூட்டணியிலேயே தொடர்வதாகவும் தவெகவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றும் ஐ.யூ.எம்.எல். அறிவித்தது.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை அடுத்து தவெகவுக்கு தற்போது வரை 116 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. 2 இடங்களை வைத்துள்ள விசிக, தனது நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்தது. முதலில், இன்று காலை 10 மணிக்கு திருமாவளவன் செய்தியாளர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பு மேலும் தாமதமாகிறது.

அதாவது, மாலை 4 மணிக்கு திருமாவளவன் தனது முடிவினை அறிவிப்பார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்கும் என்று திருமாவளவன் கூறும் பட்சத்தில், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை தவெக பெறும். அதன் அடிப்படையில் விஜய் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார். இதற்காக தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே, ஆட்சி, அதிகாரத்தில் விசிக பங்கு கேட்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. விசிகவுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படுமா? அல்லது வேறு ஏதாவது பதவி கொடுக்கப்படுமா என்பது இன்று மாலை தெரிந்துவிடும். இவ்வாறு தமிழகத்தில் தற்போது பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது.

அதே நேரம், விசிக அலுவலகத்திற்கு விஜய் நேரில் வருகை தர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் விசிக அலுவலகம் முன்பு தவெக தொண்டர்கள் மற்றும் விசிக தொண்டர்கள் பலர் திரண்டுள்ளனர். இதனால் அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கேரள கிராமத்தில் 2,000 குடும்பங்களில் 550 இரட்டையர்கள்
Next Article இன்றிரவிற்குள் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானிடமிருந்து பதில் வரும்- டிரம்ப் நம்பிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியின் காட்சி

அசாம் வெள்ளம்: 100 பேர் உயிரிழப்பு, 1.37 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர்.…

ஆகஸ்ட் 10, 2026

நாடாளுமன்ற முடக்கத்திற்கு மோடி, அமித்ஷாதான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து நான்காவது வாரமாக…

ஆகஸ்ட் 10, 2026

எந்த மதத்தையும் குறிவைக்கவில்லை: தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், வெளிநாட்டுப் பங்களிப்பு…

ஆகஸ்ட் 10, 2026

மத்திய பிரதேசம்: சாக்கடையில் வேன் கவிழ்ந்து 9 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் சாக்கடையில் வேன் கவிழ்ந்து 9…

ஆகஸ்ட் 10, 2026

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை அருகே மாணவர்கள் மீது தடியடி: கண்ணீர்ப் புகை வீச்சு

ஜார்க்கண்ட் அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகளைக் கண்டித்து…

ஆகஸ்ட் 10, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

காங்கிரஸ் அலுவலகத்தில் குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

ஸ்ரீரங்கம் காங்கிரஸ் அலுவலகத்தில் 2.80 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் கிளை செயலாளர் நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

வளர்ந்த இந்தியா இலக்கு: முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 11வது நிதி ஆயோக் கூட்டத்தில், 2047-ல் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நோக்கி மாநில முதல்வர்கள் இணைந்து செயல்பட உறுதிமொழி ஏற்றனர்.

1 Min Read
வாஷிங் மெஷின் டிரம்மில் சோப்பு படிவம் படிந்திருக்கும் காட்சி
லைஃப் ஸ்டைல்

டாப் லோட் வாஷிங் மெஷினில் தவறு: துர்நாற்றம், பூஞ்சை உருவாகலாம்!

டாப் லோட் வாஷிங் மெஷினில் ஃபிரன்ட் லோட் திரவ டிடர்ஜென்டைப் பயன்படுத்தினால், சோப்புப் படிவம், பூஞ்சை, பாக்டீரியா வளர்ந்து துர்நாற்றம் வீசும். துணிகளும் புத்துணர்ச்சியற்று இருக்கும்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

48 சப்-கலெக்டர்கள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகத்தில் 48 சப்-கலெக்டர்கள் மற்றும் டாஸ்மாக் மேலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?