MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுக அமைச்சர்களுக்கு மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை: ‘அடிச்சா திருப்பி அடிப்போம்!’
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுக அமைச்சர்களுக்கு மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை: ‘அடிச்சா திருப்பி அடிப்போம்!’
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திமுக அமைச்சர்களுக்கு மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை: ‘அடிச்சா திருப்பி அடிப்போம்!’

தமிழ்நாடு

திமுக அமைச்சர்களுக்கு மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை: ‘அடிச்சா திருப்பி அடிப்போம்!’

Admin
Last updated: ஜூன் 30, 2026 6:11 காலை
Admin
Share
SHARE

சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவராக மாணிக்கம் தாகூர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர், முன்னாள் மாநில தலைவர்கள் செல்வப் பெருந்தகை, தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசு, கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் அமைச்சர்கள் விஸ்வநாதன் மற்றும் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பதவியேற்பு விழாவுக்காக சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் காமராஜர், ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரின் புகைப்படங்களுடன் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பேசிய தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், 'கட்சியைப் பற்றி முழுமையாக தெரிந்த ஒரு நபரை தான் காங்கிரஸ் மேலிடம் தலைவராக நியமனம் செய்துள்ளது. முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பான முறையில் தன்னுடைய தலைவர் பதவியை நிறைவு செய்துள்ளார். கட்சித் தொண்டர்களின் கண்ணீருக்கு அடையாளமாக 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி தமிழக அமைச்சரவையில் பங்கேற்றுள்ளது' என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை, 'கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் எப்படி மகிழ்ச்சியாக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டேனோ, அதைவிட இருமடங்கு மகிழ்ச்சியாக மாணிக்கம் தாகூர் அந்த பொறுப்பை ஏற்கும்போது எனக்கு மனநிறைவாக உள்ளது. மாநிலத் தலைவராக பொறுப்பேற்று இரண்டு வருடங்களாக எனக்கு துணை நின்ற நிர்வாகிகளுக்கு அனைவருக்கும் நன்றி' என கூறினார். மாணிக்கம் தாகூர் பேசுகையில், '141 ஆண்டு கால வரலாறு கொண்ட கட்சி காங்கிரஸ் கட்சி. அத்தகைய வரலாற்றுப் பின்னணி கொண்ட கட்சியின் தலைவராக பொறுப்பேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரை தலைவர் பொறுப்பில் பணியாற்றி வந்த செல்வப்பெருந்தகை செய்த செயல்கள் அனைவருக்கும் தெரியும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துக்களை மீட்டெடுத்த பெருமை அவரையே சாரும்.'

மேலும் அவர் பேசுகையில், 'சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்டவை நமக்கு நல்லதொரு பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது. அனைத்து பாடங்களையும் ஏற்றுக்கொண்டு, அடுத்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். மாநிலத் தலைவர் பதவி என்பது ஒரு தொடர் ஓட்டப்பந்தயம். எந்த ஒரு தலைவர்களின் மதிப்பையும் நான் குறைத்து மதிப்பிட முடியாது. மத்தியில் ஆட்சியில் இல்லாத போதும், அவர்களின் கடின உழைப்பால்தான் தற்பொழுது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் அமைச்சர்களாக அரசில் இடம்பெற முடிந்துள்ளது. என்னிடம் பல குறைபாடுகள் இருக்கலாம், அனைத்தும் சரியாக இருக்கும் என்று நான் கூறவில்லை. என்னை பொருத்தவரை காங்கிரஸ் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறேன். காங்கிரஸ் கட்சியை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் அனைவரும் தங்களுடைய ஈகோவை விட்டுவிட்டு பணிகளை செய்ய வேண்டும். திமுகவிற்கும், எங்களுக்கும் வாய்க்கா வரப்பு சண்டையா? ஆர்.எஸ்.பாரதி, இளங்கோவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கும் எனக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. யாராக இருந்தாலும் காங்கிரஸ் கட்சியை அடித்தால், நான் திருப்பி அடிப்பேன். நாங்கள் யார் குடும்பத்தையும் கெடுக்க விரும்பவில்லை. எங்களுடைய வேலைகளை நான் பார்த்துக் கொண்டு செல்வோம். ராகுல் காந்தி ஒழிக என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த பிறகு தான், அவருக்கு எதிராக நான் கருத்து தெரிவித்தேன். அதற்கு முன்பாக எந்த ஒரு கருத்தையும் அவரைப் பற்றி நான் பேசவில்லை. காங்கிரசை தொட்டால் அது யாராக இருந்தாலும் திருப்பி அடிப்போம். ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதுதான் எங்களுடைய லட்சியம். அதைப் பற்றி யாரேனும் விமர்சித்தால் அவர்களை விடமாட்டோம். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் ஒரு நல்லாட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அவருடைய ஆட்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சராக இடம் பெற்றுள்ளோம். இரு அமைச்சர்களும் உழைப்பால் வந்தவர்கள். அவர்களுடைய பெற்றோர்கள் பெரிய அரசியல்வாதிகள் கிடையாது. காங்கிரஸ் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்கும்போதே அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தமிழக மக்கள் 60% மேல் ராகுல் காந்தி தான் பிரதமராக வரவேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் ஏன் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க மாறுக்கிறார்கள் என்பது தான் கேள்வியாக உள்ளது. இனிவரும் காலங்களில் தேர்தலுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற முடியாது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். 2026-இல் கூட்டணி ஆட்சி வரவேண்டும் என நினைத்தோம், தற்போது வந்துவிட்டது. நம்முடைய அடுத்த பணி 2029-இல் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும். ராகுல் காந்தி பிரதமரானால் தமிழகத்தின் முக்கிய ஐந்து பிரச்சனைகள் இருக்காது. நீட் தேர்வு இருக்காது, நீர் உரிமைகள் காக்கப்படும். மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தமிழ்நாட்டுக்கு வரப்படும் நிதிகள் அனைத்தும் சரியாக வழங்கப்படும். அதற்கு நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 இடங்கள் வெற்றி பெற வேண்டும். அதுதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி மரியாதையான கூட்டணி. அந்த மரியாதையை நாம் கெடுத்துக் கொள்ளக் கூடாது. மக்களுக்காக உழைக்க தயாராக உள்ளோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் வென்று ராகுலை பிரதமராக்க வேண்டும் என்பதே நம்முடைய லட்சியமாக இருக்க வேண்டும்' என்றார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CongressDMKManickam Tagoreகாங்கிரஸ்தமிழக அரசியல்திமுகமாணிக்கம் தாகூர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பன்னீர் சாப்பிட்டால் இந்த நோய்கள் குணமாகும்: முழு விவரம்!
Next Article கிரிக்கெட் வீரர் சஷாங் சிங், தந்தை மீது வழக்கு பதிவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா மருத்துவமனையில் அனுமதி

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனரி…

ஆகஸ்ட் 14, 2026

பிரதமர் மோடி வேண்டுகோள்: தேசிய உணர்வை வலுப்படுத்துவோம்

பிரிவினை துயரம் நினைவு நாளை முன்னிட்டு, நல்லெண்ணம்…

ஆகஸ்ட் 14, 2026

காவிரி நீர்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனு

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, கர்நாடக அரசுக்கு…

ஆகஸ்ட் 14, 2026

ராகுல் தன்னை ஆளப் பிறந்தவராக நினைக்கிறார்: மத்திய அமைச்சர் ஜோஷி விமர்சனம்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தன்னைத்தானே…

ஆகஸ்ட் 14, 2026

ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு கொள்கையை விமர்சித்த…

ஆகஸ்ட் 14, 2026

You Might Also Like

மக்களவையில் அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள்
இந்தியா

நீட் போராட்டம்: ராகுல் குற்றச்சாட்டால் மக்களவையில் அமளி

நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்த உத்தரவிட்டவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா என ராகுல் காந்தி கூறியதால் மக்களவையில் அமளி…

1 Min Read
தமிழ்நாடு

மின்சாரத் துறையில் முறைகேடு: ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் – அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

மின்சாரத்துறையில் முறைகேடு செய்யவே ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர் - அமைச்சர் நிர்மல்குமார். 25 ஆண்டுகளாக துறை நஷ்டத்தில் இயங்குவதாகவும், ரூ.2.47 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும் வெள்ளை…

1 Min Read
தமிழ்நாடு

இண்டிகோ: கைப்பைக்கு மட்டும் கட்டண சலுகை அறிவிப்பு!

இண்டிகோ விமான நிறுவனம், கைப்பை மட்டும் எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு அடிப்படை கட்டணத்தில் சலுகை அறிவித்துள்ளது. இது குறைந்த லக்கேஜுடன் பயணம் செய்ய விரும்புவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

1 Min Read
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) அறிவிப்பு
தமிழ்நாடு

58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: மாணவர்கள் அதிர்ச்சி!

2025-26 கல்வியாண்டில் நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என AICTE அறிவித்துள்ளது. குறைந்த மாணவர் சேர்க்கை மற்றும் தரக்குறைபாடு காரணங்கள். ஏற்கனவே பயிலும் மாணவர்களுக்கு…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?