MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுகவில் பிளவா? கொடி, பேனர் இன்றி எஸ்.பி.வேலுமணி ரகசிய ஆலோசனை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுகவில் பிளவா? கொடி, பேனர் இன்றி எஸ்.பி.வேலுமணி ரகசிய ஆலோசனை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அதிமுகவில் பிளவா? கொடி, பேனர் இன்றி எஸ்.பி.வேலுமணி ரகசிய ஆலோசனை!

தமிழ்நாடு

அதிமுகவில் பிளவா? கொடி, பேனர் இன்றி எஸ்.பி.வேலுமணி ரகசிய ஆலோசனை!

Admin
Last updated: ஜூன் 29, 2026 6:10 காலை
Admin
Share
SHARE

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளார். வழக்கமான அரசியல் கூட்டங்களைப் போலன்றி, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் கட்சி கொடியோ அல்லது பேனர்களோ பயன்படுத்தப்படவில்லை. மேடையில் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தன. இக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட முக்கிய ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு சென்னையில் கடந்த 25 நாட்களாகத் தலைமைப் பொறுப்பில் நடந்த நகர்வுகள் குறித்து விரிவாக விளக்கினார். 'உங்களுக்கு எந்தப் பிரச்சினை என்றாலும் எப்போதும் நான்தான் முன்னால் வந்து நிற்பேன். இந்தச் சட்டப்பேரவை தேர்தலின் போது ஓ.பன்னீர்செல்வம் நம்முடன் இருந்திருந்தால் கட்சி இன்னும் பலமாக இருந்திருக்கும்' என்றும் அவர் குறிப்பிட்டார். திமுக விவகாரத்தில் கட்சியின் தலைமை எடுத்த சில முடிவுகள் குறித்தும் தனது கடுமையான அதிருப்தியை வேலுமணி வெளிப்படுத்தினார்.

'திமுகவுடன் கூட்டணி என்று சொன்னதால்தான் கட்சியில் பிரச்சினை உருவானது. எம்.ஜி.ஆர். அதிமுகவை ஆரம்பித்ததே திமுகவை எதிர்ப்பதற்குத்தான். அப்படி இருக்கும்போது, திமுகவுடன் அதிமுகவை சேர்ப்பது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? திமுகவுடன் யார் கைகோர்த்தாலும் அதை நாங்கள் ஏற்க மாட்டோம். கட்சியைச் சேர்ந்த 30 மாவட்ட செயலாளர்கள் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. அதிமுகவை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் உங்களின் கருத்து என்னவோ, அதுதான் என் கருத்தும்' என வேலுமணி ஆவேசமாகப் பேசினார்.

மேலும் தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய அவர், 'தற்போது வாட்ஸ்அப்பில் குழுக்களை உருவாக்கி பலர் என்னை அவதூறாகப் பேசி வருகின்றனர். அதிமுகவிலிருந்து செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம், ஜே.சி.டி.பிரபாகர் என ஒவ்வொருவராக வெளியேறியது போல, நானும் கட்சியை விட்டு வெளியேறிவிடுவேன் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்' என்றார். ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியே வந்த எஸ்.பி.வேலுமணியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், 'நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். இது மீட்டிங்கே கிடையாது. தேர்தலில் பணியாற்றியவர்களுக்கு நன்றி சொன்னோம். அவ்வளவுதான்' என்றார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKPoliticsஅதிமுகஅரசியல்எஸ்.பி.வேலுமணிகோவை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 29-06-2026 இன்றைய ராசி பலன்: நன்மைகள் உண்டு, கவனம் தேவை!
Next Article தவெக அமைச்சர் பதவி விலகக் கோரி திமுக மாணவரணி போராட்டம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆந்திராவின் வளர்ச்சியைப் பாராட்டிப் பேசுகிறார்

ஆந்திராவின் வளர்ச்சிக்கு குடியரசுத் தலைவர் பாராட்டு

ஆந்திர மாநிலத்தின் உண்மையான வளர்ச்சிக்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி ஒரு சிறந்த…

ஆகஸ்ட் 13, 2026

திருப்பதி: இலவச தரிசனத்திற்கு 20 மணி நேர காத்திருப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள்…

ஆகஸ்ட் 13, 2026

5 மாநில தேர்தல்: காங்கிரஸுக்கு ₹207 கோடி நன்கொடை

அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி…

ஆகஸ்ட் 13, 2026

தனியார் மருத்துவமனை அறை வாடகை: 3 நட்சத்திர ஹோட்டல் கட்டணத்தை மிஞ்சக் கூடாது – குழு பரிந்துரை

தனியார் மருத்துவமனைகளில் அறை வாடகை, 3 நட்சத்திர…

ஆகஸ்ட் 13, 2026

கர்நாடகாவில் புகையிலை பொருட்களுக்கு ஓராண்டு தடை

கர்நாடகாவில் புகையிலை பொருட்களுக்கு ஓராண்டு தடை விதிப்பது…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை: பிரேமலதா விஜயகாந்த்

மருத்துவக் கல்லூரிகள் 5 அல்லது 5.5 ஆண்டுகளுக்கும் அதிகமாகக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

1 Min Read
அரசியல்

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்கக்கூடாது: பழனிசாமி ஆதரவாளர்கள் மனு

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகரிடம் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அக்ரி…

2 Min Read
தமிழ்நாடு

கல்வி வழங்கி குழந்தைகளின் வாழ்வை ஒளிரச் செய்வோம்: முதல்வர் விஜய்

குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம் என முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார். குழந்தைகளின் வாழ்வை கல்வி மூலம் ஒளிரச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் எனத்…

1 Min Read
தமிழகத்தில் கருப்பட்டி விலை உயர்வு குறித்த செய்தியை விளக்கும் படம்
தமிழ்நாடு

எல்நினோ தாக்கம்: தமிழகத்தில் கருப்பட்டி விலை வரலாறு காணாத உயர்வு

எல்நினோ'வின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் கருப்பட்டி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உற்பத்தி குறைவால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?