MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மகளிர் டி20 உலககோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் – ஷஃபாலி வர்மா நம்பிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மகளிர் டி20 உலககோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் – ஷஃபாலி வர்மா நம்பிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - மகளிர் டி20 உலககோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் – ஷஃபாலி வர்மா நம்பிக்கை

விளையாட்டு

மகளிர் டி20 உலககோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் – ஷஃபாலி வர்மா நம்பிக்கை

Admin
Last updated: ஜூன் 27, 2026 4:04 மணி
Admin
Share
SHARE

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேற, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த வாழ்வா? சாவா? ஆட்டத்தில், வலிமை வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த புதிய திட்டங்கள் வகுக்காமல், தங்களின் இயல்பான ஆட்ட முறையையே பின்பற்றுவோம் என இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஷஃபாலி வர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குழு ஏ பிரிவில், அரையிறுதிக்குச் செல்லும் அணிகளைத் தீர்மானிக்கும் கடைசி இரண்டு லீக் போட்டிகள் இன்று நடைபெறுகின்றன. ஆறு புள்ளிகளுடன் உள்ள தென்னாப்பிரிக்கா, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. மற்றொரு முக்கியப் போட்டியில், ஆறு புள்ளிகளுடன் உள்ள இந்திய அணி, எட்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.

தென்னாப்பிரிக்கா வங்கதேசத்தை வீழ்த்தினால், இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற ஆஸ்திரேலியாவை கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். அதே நேரத்தில், ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் தோல்வியடைந்தாலும், சிறந்த ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

இது குறித்து பேசிய ஷஃபாலி வர்மா, 'ஆஸ்திரேலியா ஒரு உலகத்தரம் வாய்ந்த அணி என்பது தெரியும். ஆனால் அவர்களை நாம் இதற்கு முன்பு தோற்கடித்ததே இல்லை என்று கூற முடியாது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 தொடரில் நாம் அவர்களை வீழ்த்தினோம், அது நமக்கு பெரும் நம்பிக்கையைத் தருகிறது' என்று கூறினார். உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றிருந்தது. எதிரணியினரைப் பற்றிய புரிதல் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என ஷஃபாலி நம்புகிறார்.

'நாங்கள் பல ஆண்டுகளாக அவர்களுக்கு எதிராக விளையாடி வருகிறோம். அவர்களின் பந்துவீச்சாளர்கள், பலங்கள் மற்றும் திட்டங்களை நாங்கள் நன்கு அறிவோம். எனவே, நாம் ஆட்டத்தை எளிமையாக வைத்துக்கொண்டு, நமது சொந்த பலத்தை நம்பி விளையாடுவது முக்கியம்' என்று அவர் மேலும் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு தனது அணுகுமுறையை மாற்றியமைத்த 22 வயதான ஷஃபாலி, மீண்டும் தனது சிறப்பான ஃபார்முக்கு திரும்பியுள்ளார். கடைசியாக விளையாடிய மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு அரைசதங்களை விளாசியுள்ளார்.

'என்னுடைய பேட்டிங்கில் பல விஷயங்கள் மேம்பட்டுள்ளன. பாகிஸ்தான் போட்டிக்கு முன்பு வரை நான் அதிகமாக யோசித்துக்கொண்டிருந்தேன். முதல் பந்தை எப்படி விளையாடுவது, இரண்டாவது பந்தில் எந்த ஷாட் அடிப்பது என்று ஓவராக திட்டமிட்டேன். ஆனால், இப்போது எனது இயல்பான ஆட்டத்தை நம்பி விளையாடத் தொடங்கியுள்ளேன்' என்று ஷஃபாலி வர்மா கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ஆஸ்திரேலியாஇந்திய அணிகிரிக்கெட்மகளிர் டி20 உலககோப்பைஷஃபாலி வர்மா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கே. பாக்யராஜ் மறைவிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல்
Next Article இயக்குனர் பாக்யராஜ் திடீர் மரணம்: திரையுலகம் அதிர்ச்சி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த செய்தியாளர் சந்திப்பு

பஞ்சாபில் பாஜக-அகாலி தளம் கூட்டணி: தேர்தல் பலன் கிடைக்குமா?

பஞ்சாபில் பாஜகவும் சிரோமணி அகாலி தளமும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி…

நவம்பர் 24, 2026

யானைகளை இடமாற்றம் செய்யக் கோரி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா

கர்நாடகாவில் காட்டு யானைகள் தாக்கி 2 பேர்…

நவம்பர் 24, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.3.81 கோடி காணிக்கை: பக்தர்கள் பரவசம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் உண்டியல்…

நவம்பர் 23, 2026

சிந்து நதி நீர் ஒப்பந்தம்: பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் அமைச்சர்

புதுடெல்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில்…

நவம்பர் 23, 2026

இந்தியாவிற்கு வெளிநாட்டு முதலீடு தேவை: காங்கிரஸ்

இந்தியாவின் மூலதனச் சந்தைகளில் வெளிப்படைத்தன்மைக்கு பதிலாக வெளிநாட்டு…

நவம்பர் 22, 2026

You Might Also Like

விளையாட்டு

மகளிர் டி20: அதிவேக அரைசதம் அடித்து உலக சாதனை படைத்த பாத்திமா சனா!

பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

1 Min Read
விளையாட்டு

ஓவல் டெஸ்டில் இங்கிலாந்து ஆல் அவுட்: நியூசிலாந்துக்கு 100 ரன் முன்னிலை

ஓவல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மேத்யூ பிஷரின் அரைசதத்தால் 291 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து 100 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

1 Min Read
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் களத்தில்
விளையாட்டு

இந்திய டி20 வரலாற்றில் பெரும் அவமானம்: இங்கிலாந்திடம் படுதோல்வி

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் சர்வதேச டி20 வரலாற்றில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில்…

2 Min Read
விளையாட்டு

IPL 2026: 15 வயதில் சிக்ஸர் மன்னனாக மாறிய வைபவ் சூர்யவன்ஷி.. 100 சிக்ஸ் அடித்து உலக சாதனை படைத்தார்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடியான பேட்டிங்கால் பல உலக சாதனைகளை சுக்குநூறாக உடைத்து புதிய வரலாறு படைத்துள்ளார்.…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?