MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சி மீது சேவாக் கடும் விமர்சனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சி மீது சேவாக் கடும் விமர்சனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சி மீது சேவாக் கடும் விமர்சனம்

விளையாட்டு

ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சி மீது சேவாக் கடும் விமர்சனம்

Admin
Last updated: ஜூன் 27, 2026 9:34 காலை
Admin
Share
SHARE

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் முடிவுகள் மீது முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இந்திய அணியின் முன்வரிசை பேட்ஸ்மேன்களான சஞ்சு சாம்சன் (5), இஷான் கிஷன் (1) மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (3) ஆகியோர் முதல் 5 ஓவர்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

அறிமுக வீரராக களமிறங்கிய ஜெய் முன்ட்ரா, சஞ்சு சாம்சனின் விக்கெட்டை வீழ்த்தினார். அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். சிவம் துபே மற்றும் அக்சர் படேல் ஓரளவு போராடிய போதிலும் இந்திய அணியால் வெற்றியை எட்ட முடியவில்லை. இந்த மோசமான தோல்வி குறித்து விரேந்தர் சேவாக் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, அதுவரை ஒரு ஓவர் கூட வீசாத வாஷிங்டன் சுந்தருக்கு 16வது ஓவரில் பந்து வீச வாய்ப்பு கொடுத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் முடிவை சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார். 'ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி எனக்கு சிறிதும் திருப்தி அளிக்கவில்லை. அயர்லாந்து அணியின் இரு பேட்ஸ்மேன்களும் களத்தில் நிலைத்து நின்று விளையாடிக் கொண்டிருந்த போது, 15வது ஓவரில் வாஷிங்டன் சுந்தரை பந்துவீச அழைத்தது முற்றிலும் தவறான முடிவு. எதிர்பார்த்தபடியே அந்த ஓவரில் எதிரணி அதிக ரன்களைக் குவித்தது' என்று சேவாக் கூறினார்.

மேலும், இந்திய பேட்டிங் வரிசை குறித்தும் கவலை அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அணியில் பொறுப்புடன் விளையாடி போட்டியை முடித்துக் கொடுக்கும் பினிஷர்கள் யாரும் இல்லை என்றும், கிரிக்கெட் என்பது சிக்ஸர்கள் அடிப்பது மட்டுமல்ல, சூழலுக்கு ஏற்ப விளையாடுவதே முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார். மறுபுறம், இந்த தோல்வியால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு எதிராக தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:IND vs IREஇந்திய கிரிக்கெட்கிரிக்கெட்சேவாக்ஸ்ரேயாஸ் ஐயர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article புதிய மாருதி ப்ரேஸ்ஸா: டர்போ இன்ஜின், சிஎன்ஜி, கூடுதல் அம்சங்களுடன் விரைவில் அறிமுகம்!
Next Article கிரிப்டோ மோசடி: தனியார் ஊழியரிடம் ரூ.17 லட்சம் பறிப்பு – 12 பேர் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தெலங்கானாவில் மழை வேண்டி முதலைக்கு பூஜை செய்யும் பூசாரி

மழைக்காக முதலைக்கு பூஜை: தெலங்கானாவில் பூசாரி நடத்திய விசித்திர அர்ச்சனை வீடியோ வைரல்

தெலங்கானாவில் மழை வேண்டி முதலைக்கு பூஜை செய்த பூசாரி, வனத்துறையால் முதலை பாதுகாப்பாக…

ஆகஸ்ட் 11, 2026

மழைக்காக முதலைக்கு பூஜை செய்த அர்ச்சகர்: வைரலாகும் வீடியோ

தெலங்கானாவில், பீச்சுப்பள்ளி ஆற்றில் படித்துறைக்கு வந்த முதலைக்கு,…

ஆகஸ்ட் 11, 2026

பள்ளி வகுப்பறையில் பாம்பு: அலறிய மாணவர்கள் – வனத்துறையினர் பிடித்தனர்

சென்னையில் பள்ளி வகுப்பறையில் பாம்பு கண்டதால் மாணவர்கள்…

ஆகஸ்ட் 11, 2026

கிராமப்புற அரசுப் பள்ளிகள் மேம்பட சிஜேபி நாடு தழுவிய பிரச்சாரம்

கிராமப்புற அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட்…

ஆகஸ்ட் 11, 2026

தண்ணீருக்குள் வாழும் 16 வயது சிறுவன்: அரிய நோயால் அவதி

மேற்கு வங்கத்தில் 16 வயது சிறுவன் இக்பால்…

ஆகஸ்ட் 11, 2026

You Might Also Like

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பென் ஸ்டோக்ஸ்
விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பயிற்சியாளராகும் ஆர்வம் – பென் ஸ்டோக்ஸ் விருப்பம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், எதிர்காலத்தில் தேசிய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக வர விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். லெவல் 3 பயிற்சித் தகுதியை…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

டி20 கிரிக்கெட்டில் தீப்தி சர்மாவின் புதிய உலக சாதனை!

சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 5…

1 Min Read
பர்மிங்காமில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் போட்டி
விளையாட்டு

IND vs ENG: ஒருநாள் தொடரில் 3 ஆல் ரவுண்டர்களுடன் இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 ஆல் ரவுண்டர்களுடன் களமிறங்குகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு பும்ரா ஒருநாள் கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளார்.

2 Min Read
விளையாட்டு

விராட் கோலியுடன் சந்திப்பு: சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மத்ரே நெகிழ்ச்சி

பெங்களூருவில் பிசிசிஐ சிறப்பு மையத்திற்குச் சென்ற இந்திய வீரர் விராட் கோலியை, சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மத்ரே சந்தித்துப் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த சந்திப்பு சமூக வலைதளங்களில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?