சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்து இந்திய வீராங்கனை தீப்தி சர்மா அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். தாய்லாந்தின் திபாட்சா புத்தாவோங் (165 விக்கெட்டுகள்), ருவாண்டாவின் ஹென்ரியெட் இஷிம்வே (160 விக்கெட்டுகள்) ஆகியோரின் சாதனைகளை முறியடித்து, அவர் இந்த வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் முக்கியப் பங்குதாரராக தீப்தி சர்மா திகழ்ந்தார்.
இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியை தனது துல்லியமான ஆப்-ஸ்பின் பந்துவீச்சால் தீப்தி சர்மா நிலைகுலைய செய்தார். தனது 4 ஓவர்களில் வெறும் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு தாய்லாந்தின் திபாச்சா புத்தவாங் வசம் இருந்த அதிக விக்கெட்டுகள் சாதனையை முறியடித்த தீப்தி, தற்போது சர்வதேச மகளிர் டி20 போட்டிகளில் 166 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது இந்த சாதனை கிரிக்கெட் உலகில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.