திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவது குறித்து கட்சிக்குள் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு முதல்வர் விஜய், 'உங்க அப்பா எங்கப்பா காணோம்' என சட்டமன்றத்தில் கிண்டலடித்த நிலையில், இந்த தொகுதி ஸ்டாலினுக்கு ஒரு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்தத் தொகுதியில் திமுக போட்டியிட்டால், அது கட்சிக்கு சாதகமாக அமையும் என நம்பப்படுகிறது. இதனால், இந்தத் தொகுதியில் போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை மு.க.ஸ்டாலினுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இத்தொகுதியில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிகிறது.
மு.க.ஸ்டாலின் இத்தொகுதியில் போட்டியிட்டால், கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவரை தேர்தலில் போட்டியிடுமாறு வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால், மு.க.ஸ்டாலின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக வருவார் என்றும், முதல்வராக இருக்கும் விஜய்க்கு அவர் ஒரு வலுவான போட்டியாக இருப்பார் என்றும் திமுகவினர் பெருமிதத்துடன் கூறி வருகின்றனர்.