MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பிளஸ்-2 தேர்வில் தோல்வி, குறைவான மதிப்பெண்: 5 மாணவர்கள் எடுத்த தவறான முடிவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > பிளஸ்-2 தேர்வில் தோல்வி, குறைவான மதிப்பெண்: 5 மாணவர்கள் எடுத்த தவறான முடிவு
லைஃப் ஸ்டைல்

பிளஸ்-2 தேர்வில் தோல்வி, குறைவான மதிப்பெண்: 5 மாணவர்கள் எடுத்த தவறான முடிவு

Admin
Last updated: May 9, 2026 6:56 am
Admin
Share
SHARE

* கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய 17 வயது மகன் பாவக்கல் அரசு மேல் நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து தேர்வு எழுதினார். தேர்வு முடிவில் ஒரு பாடத்தில் மாணவர் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த மாணவர் அங்குள்ள மாந்தோப்பில் இருந்த மாமரத்தில் புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். தொழிலாளி. இவருடைய 16 வயது மகள் பிளஸ்-2 தேர்வில் வரலாறு பாடத்தில் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த மாணவி அங்குள்ள ஒரு புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட சளிவயல் பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரது 16 வயது மகன் தமிழ். ஆங்கிலம், வணிகவியல் பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* வேலூர் காட்பாடி தாலுகா பொன்னையை அடுத்த தெங்கால் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரது இளைய மகன் பிளஸ்-2 தேர்வு முடிவில் 600-க்கு 372 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார். ஆனால் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததாக மனவேதனையோடு பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் திடீரென வீட்டில் உள்ள ஊஞ்சல் கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

* திருப்பூர் மாவட்டம் சாணார்பாளையம் முத்துச்சாமி தோட்டத்தை சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரது 17 வயது மகள், 600-க்கு 397 மதிப்பெண்கள் கிடைத்து இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தான் அதிக மதிப்பெண்கள் எதிர்பார்த்ததாகவும், ஆனால் குறைவான மதிப்பெண்களே கிடைத்து இருப்பதாகவும், இந்த மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என்று தனது குடும்பத்தினரிடம் மனவேதனையுடன் தெரிவித்தார்.

இந்தநிலையில் மாணவிக்கு ஆறுதல் கூறிய பெற்றோர், தோட்டத்துக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டில் தனியாக இருந்த மாணவி, பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த காலத்து குழந்தைகளுக்கு, பள்ளியிலும் வீட்டிலும், படிப்பு சார்ந்த அழுத்தம் அதிகம் இருக்கிறது. அதனால்தான், அவர்களுக்குள் தேர்வு குறித்த பயமும் அதனால் எழும் மன அழுத்தமும் அதிகமாகிறது. குழந்தைகள் மனதில் மதிப்பெண் குறித்த பாரத்தை ஏற்றிவைப்பது பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு.

நமக்கு கல்வி அவசியம் தேவைதான். அதற்காக மதிப்பெண்கள் மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையைத் தீர்மானிப்பது இல்லை. அதனால், தேர்வு நேரத்தில் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் பயத்தைப் போக்கி, நம்பிக்கை அளிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. தேர்வில் ஒருவேளை தோல்வி அடைந்தாலும், அவர்களுக்கு மன ஆறுதலை கொடுங்கள்.

‘எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் பெற்றோர் இருக்கிறோம்’ என்பதை குழந்தைகளுக்கு தெளிவுபடுத்துங்கள். இதுக்கு மேலயும் வாழ்க்கை இருக்கு என்று நம்பிக்கை வார்த்தைகள் தந்து ஆசுவாசப்படுத்துங்கள்.

பிள்ளைளுக்கான பிரச்சனைகளை அவர்களுடன் மனம்விட்டு பேசுங்கள். அவர்கள் தெரிவிக்காத போது, அவர்கள் நண்பர்களிடம் பேசி தெரிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் அவர்களின் தற்கொலை எண்ணத்தை மாற்றி விடலாம். அவர்களுக்கு தற்கொலை எண்ணமும் தோன்றாது என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: க்ருனால் பாண்டியா காலரைப் பிடித்த பூரன்.. ஓடி வந்த லக்னோ கோச்.. என்ன நடந்தது?
Next Article IPL 2026: ஸ்ரேயாஸ் ஐயர் கிடையாது..இந்தியாவின் புதிய டி20 கேப்டன் இந்த அதிரடி வீரர் நியமிக்க வாய்ப்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன்…

June 25, 2026

25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…

June 25, 2026

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…

June 25, 2026

ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கு: மோடிக்கு அழைப்பா?

ஈரான் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி…

June 25, 2026

இமாச்சலில் கனமழை: 5 பேர் மாயம், 17 பேர் காயம்

இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 5…

June 24, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

போக்குவரத்து ஊழியர் DA நிலுவை: உடனடியாக வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

போக்குவரத்து ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர்: கோலிக்கு பதில் ஜெய்ஸ்வால்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலிக்கு பதிலாக ஜெய்ஸ்வால் விளையாடுவார். கோலி காயமடைந்ததன் காரணமாக விலகியுள்ளார்.

0 Min Read
லைஃப் ஸ்டைல்

காங்கிரஸ் தலைவர் மாற்றம்: யார் அந்த மூத்த தலைவர்?

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஏழு மாநில சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்ள புதிய தலைவர்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

அ.தி.மு.க.வின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?- எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. வுக்கு ஆதரவு…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?