MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை: முதல்வர் விஜய்க்கு பெற்றோர் நன்றி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை: முதல்வர் விஜய்க்கு பெற்றோர் நன்றி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை: முதல்வர் விஜய்க்கு பெற்றோர் நன்றி!

தமிழ்நாடு

மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை: முதல்வர் விஜய்க்கு பெற்றோர் நன்றி!

Admin
Last updated: ஜூன் 25, 2026 6:28 காலை
Admin
Share
SHARE

பயங்கரவாத தாக்குதலில் வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தை போற்றும் வகையில், வேளச்சேரி – தாம்பரம் பிரதான சாலைக்கு 'மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை' என பெயர் சூட்டி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் நெகிழ்ந்துபோன மேஜர் முகுந்த் வரதராஜனின் பெற்றோர், முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர். தாய் நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த மேஜர் முகுந்த வரதராஜனுக்கு இந்திய அரசின் உயரிய விருதான அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய ராணுவத்தில் திறம்படப் பணியாற்றி, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தைப் போற்றும் வகையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு “மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை” எனப் பெயர் சூட்ட வேண்டும் என இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளுக்கான தளபதி லெப்டினண்ட் ஜெனரல் வி.ஶ்ரீஹரி, முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதல்வர் விஜய், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு, வீரரின் தியாகத்தைப் போற்றும் வகையில், தமிழில் “மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை” எனவும், ஆங்கிலத்தில் “MAJOR MUKUND VARADARAJAN SALAI” எனவும் பெயர் சூட்டுவதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

தாம்பரம் மண்ணின் மைந்தரான மேஜர் முகுந்த் வரதராஜன், கிழக்கு தாம்பரத்தில் வசிக்கும் அவரது பெற்றோர் இந்த அறிவிப்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நடவடிக்கை ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அமைந்துள்ளது என்றும், முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி என்றும் அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். 'அவர் ஆட்சி நல்லா இருக்கனும்' என்றும் அவர்கள் வாழ்த்தினர். மேஜர் முகுந்த் வரதராஜனின் பெற்றோர் பேசிய உருக்கமான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsசாலை பெயர் மாற்றம்தாம்பரம்முதல்வர் விஜய்மேஜர் முகுந்த் வரதராஜன்ராணுவ தியாகம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அவித்த முட்டையின் நன்மைகள்: பச்சை முட்டை ஆபத்தானதா?
Next Article 6 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் தீவிரம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு

டெல்லி: ₹22,000 கோடி அரிசி ஊழல் – ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

டெல்லியில் ₹22,000 கோடி மதிப்பிலான மானிய அரிசி ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி…

ஆகஸ்ட் 9, 2026

கர்நாடகா-தமிழக எல்லையில் நாளை போராட்டம்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து துன்புறுத்தலை…

ஆகஸ்ட் 9, 2026

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிடுகிறார்
தமிழ்நாடு

2026ல் காவலர் தேர்வு இல்லை: தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

2026ல் காவலர் தேர்வு இல்லை என்ற அறிவிப்புக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

4 Min Read
தமிழ்நாடு

விஜய் குட்டிக்கதை தவறு இல்லை: நிர்மலா சீதாராமன்

தமிழகத்திற்கு நிதி நிலுவை எதுவும் இல்லை என்றும், முதல்வர் விஜய் குட்டி கதை சொன்னதில் தவறில்லை என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம்…

1 Min Read
பேரிடர் மேலாண்மை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சிவஞானம் ஐ.ஏ.எஸ்
தமிழ்நாடு

பேரிடர் மேலாண்மை ஆணையராக சிவஞானம் ஐ.ஏ.எஸ் நியமனம்

கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ள சிவஞானம் ஐ.ஏ.எஸ், இனி பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

1 Min Read
தஞ்சாவூர் அரசு நெல் சேமிப்புக் கிடங்கு
தமிழ்நாடு

தஞ்சாவூர் நெல் கிடங்கு விபத்து: பெண் தொழிலாளி பலி, பாதுகாப்பு கேள்விக்குறி

தஞ்சாவூரில் அரசு நெல் சேமிப்புக் கிடங்கில் மூட்டைகள் சரிந்து பெண் தொழிலாளி சின்னபொண்ணு உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?