MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தங்க மோதிரம் வேண்டாம்; அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துங்கள்: திருமாவளவன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தங்க மோதிரம் வேண்டாம்; அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துங்கள்: திருமாவளவன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தங்க மோதிரம் வேண்டாம்; அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துங்கள்: திருமாவளவன்

தமிழ்நாடு

தங்க மோதிரம் வேண்டாம்; அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துங்கள்: திருமாவளவன்

Admin
Last updated: ஜூன் 24, 2026 7:40 மணி
Admin
Share
SHARE

மாநகராட்சிகளில் தூய்மைப் பணியை தனியார்மயமாக்குவதைக் கைவிட வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கும் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் ஓரிரு மண்டலங்களில் மட்டும் அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, அதனை எதிர்த்து விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராடின. பின்னர் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் இந்த நடவடிக்கையை விரிவுபடுத்துவது ஏற்புடையதல்ல. தமது உயிரைப் பணயம் வைத்து இந்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் நலன்களுக்கு எதிரான இந்த நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'ஒரு கிராம் தங்க மோதிரம்' வழங்கும் திட்டத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் 755 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தவெக-வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலான இந்தத் திட்டத்துக்குப் பதிலாக, இந்த நிதியைக் கொண்டு அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகளைப் போன்று உயரிய வசதிகளுடன் கூடிய 'பிரசவ வார்டுகளை' உருவாக்குவதோடு, தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமித்தால் அது அனைத்துத் தரப்பினருக்கும் பயன் அளிக்கும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பிறந்த குழந்தைக்குப் போடப்படும் தங்க மோதிரம் சில மாதங்களிலேயே பொருந்தாமல் போய்விடும் என்பதால், இத்திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை முன்னாள் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது 'முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்றும் திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சி மேடைகளில் கூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டப்பேரவையில் பேசியிருக்கக் கூடாது என்றும், இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும் முதலமைச்சர் பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டுமென முதலமைச்சரை விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:தங்க மோதிரம் திட்டம்திருமாவளவன்தூய்மைப் பணியாளர்கள்மருத்துவமனை மேம்பாடுவிசிக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சிறுமி பாலியல் வன்கொடுமை: திமுக மீது பழி சுமத்தும் தவெக அரசு – கனிமொழி
Next Article நெல்லையில் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கண்டக்டர் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பாரா முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்? இன்று அக்னி பரீட்சை!

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறார்.

2 Min Read
கரிசல்பட்டியில் நடைபெற்ற மத நல்லிணக்க கந்தூரி விழா
தமிழ்நாடு

மதநல்லிணக்க கந்தூரி விழா: அனைத்து குடும்பங்களுக்கும் நெய்ச்சோறு, கறிக்குழம்பு

கரிசல்பட்டியில் நடைபெற்ற மதநல்லிணக்க கந்தூரி விழாவில், அனைத்து குடும்பங்களுக்கும் வாளிகளில் நெய்ச்சோறு மற்றும் கறிக்குழம்பு வழங்கப்பட்டது. சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த விழா அனைவராலும் பாராட்டப்பட்டது.

1 Min Read
தமிழ்நாடு

தனிமையில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

முதல்வர் பேச்சு கண்ணியமாக இருக்க வேண்டும்: துரைமுருகன்

முதல்வரின் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும்; வெற்றி பெற்றவர்கள் வீரர்கள் அல்ல - கரூர் விவகாரத்தில் சிபிஐ முடிவு செய்யும்: துரைமுருகன்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?