MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆட்சியை கலைத்த ஆளுநர்கள்…NTR, MGRக்கு நடந்தது என்ன? இந்தியாவே அதிர்ந்த தருணம்..!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆட்சியை கலைத்த ஆளுநர்கள்…NTR, MGRக்கு நடந்தது என்ன? இந்தியாவே அதிர்ந்த தருணம்..!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஆட்சியை கலைத்த ஆளுநர்கள்…NTR, MGRக்கு நடந்தது என்ன? இந்தியாவே அதிர்ந்த தருணம்..!

தமிழ்நாடு

ஆட்சியை கலைத்த ஆளுநர்கள்…NTR, MGRக்கு நடந்தது என்ன? இந்தியாவே அதிர்ந்த தருணம்..!

Admin
Last updated: மே 8, 2026 12:37 மணி
Admin
Share
SHARE

கலைக்கப்பட்ட என்.டி.ராமாராவ் ஆட்சி..! 

தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் என்.டி.ராமாராவ், 1982 ஆம் ஆண்டு  தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார். அப்போது, ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் அதிகம் இருந்தபோதிலும், 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரா சட்ட மன்ற தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி 46.3% வாக்குகளைப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதுவே ஒரு அறிமுகக் கட்சியின் அதிகபட்ச வாக்கு சதவீதமாக பார்க்கப்படுகிறது. 

1984-ஆம் ஆண்டு என்.டி.ஆர் இதய அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த நேரத்தில், நிதி அமைச்சராக இருந்த நதேந்த்லா பாஸ்கரராவ், "தனக்குதான் கட்சி எம்.எல்.ஏக்களின் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்றும், தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்" என, அதிருப்தி எம்.எல்.ஏக்களின் பட்டியலை ஆளுநரிடம் சமர்பித்தார். இதனை தொடர்ந்து, அப்போது ஆளுநராக இருந்த தாக்கூர் ராம் லால், என்.டி.ஆர் ஆட்சியை கலைத்ததோடு, பாஸ்கரராவிற்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த என்.டி.ஆர், அமெரிக்காவில் இருந்து உடனடியாக நாடு திரும்பினார். பின்னர், தனக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களை அழைத்து கொண்டு டெல்லி சென்ற என்.டி.ஆர், குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். 

குடியரசுத் தலைவரை சந்தித்த என்.டி.ஆர், "பெரும்பான்மை இல்லையென்ற நிலை வந்தால், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடவேண்டுமே தவிர, ஆட்சியை கலைக்கக் கூடாது" என வலியுறுத்தினார். என்டிஆரின் நீக்கத்திற்கு எதிராக ஆந்திரப் பிரதேசம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. இது நாட்டையே உலுக்கியது. 

இதனையெல்லாம் கருத்தில் கொண்ட அப்போதைய குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங், மீண்டும் என்டிஆர் ஆந்திராவில் ஆட்சி செய்யும் படி செய்ததோடு, ஆளுநர் ராம் லாலை மாற்றி, சங்கர் தயாள் சர்மாவை புதிய ஆளுநராக நியமித்தார். இப்படி ஆளுநரையே மாற்றிய பரபரப்பு சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. 

“நான் என்ன குற்றம் செய்தேன்” – எம்.ஜி.ஆர் 

எம்.ஜி.ஆர். 1977 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக தனிப்பெரும் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால், 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் 37 இடங்களை திமுக – காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. இதனால், எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடுமையான நெருக்கடியை கொடுத்தது. 

"மக்களவை தேர்தலில் தோற்றுப்போன கட்சிக்கு மாநிலத்தை ஆளும் தகுதி இல்லை" எனக் கூறி, பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் மத்திய அரசு, ஆளுநர் மூலம், அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவுவை பயன்படுத்தி எம்ஜிஆர் அரசை கலைத்தது. தமிழ்நாட்டுடன் சேர்த்து 9 மாநிலங்களின் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால்   “நான் என்ன குற்றம் செய்தேன்..” என்ற ஒற்றை கேள்வியுடன் தேர்தலை எதிர் கொண்டு மறுமுறை எம்ஜிஆர் ஆட்சியை கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

என்.டி.ஆர், எம்.ஜி.ஆர், விஜய் என சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்து முதலமைச்சர் ஆன மூன்று, மூன்றெழுத்து நடிகர்களுக்கும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நெட்டின்சன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BIG STORIES
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆளுநரை மாலை 4.30 மணிக்கு சந்திக்கிறார் விஜய்..!
Next Article தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்க முடியாது என ஐ.யூ.எம்.எல். கட்சி அறிவிப்பு…
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர வனப்பகுதிகளில் 905 கி.மீ. சாலை: துணை முதல்வர் தகவல்

ஆந்திர வனப்பகுதிகளில் பழங்குடியினரின் வசதிக்காக 905 கி.மீ. தொலைவுக்கு தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக…

ஆகஸ்ட் 9, 2026

பாகிஸ்தானுக்கு ரகசியம் கசியவிட்ட விமானப்படை அதிகாரி கைது

பாகிஸ்தான் உளவுத்துறையின் 'ஹனி டிராப்' வலையில் சிக்கி,…

ஆகஸ்ட் 9, 2026

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சிரோமணி அகாலி தளம் ஆதரவு

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சிரோமணி…

ஆகஸ்ட் 9, 2026

ஹைதராபாத்தில் 1000 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: 7 பேர் கைது

ஹைதராபாத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட சிறப்புப்…

ஆகஸ்ட் 9, 2026

புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ண விருது: அமித் ஷா வழங்குகிறார்

புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ண விருதை மத்திய…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மாதவன், விஜய் அமிர்தராஜ் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கல்

2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் நடிகர் மாதவன், விஜய் அமிர்தராஜ் உள்ளிட்ட பலருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

1 Min Read
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பெ. சண்முகம் பொதுக்கூட்டத்தில் பேசுதல்
தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு சிபிஎம் கேள்வி: பெங்களூரு பயணம் தேவையா?

முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வது குறித்து சிபிஎம் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடகாவின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி, இந்த பயணம் தேவையா என பெ.…

2 Min Read
தமிழ்நாடு

மேகமலை அருவியில் சிங்கவால் குரங்கு: சுற்றுலாப் பயணிகள் பரவசம்!

மேற்குத் தொடர்ச்சி மலையின் மேகமலை அருவியில், வறட்சி காரணமாக தண்ணீர் தேடி வந்த அபூர்வ சிங்கவால் குரங்குகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

1 Min Read
தமிழ்நாடு

தவெக அமைச்சர் பதவி விலகக் கோரி திமுக மாணவரணி போராட்டம்

தவெக அமைச்சர் டி. சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வீடியோ விவகாரத்தை அடுத்து, அவரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக மாணவரணி ஜூன் 29 அன்று…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?