MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சேப்பாக்கத்தில் 39 ஆண்டுகால சாதனையை முறியடித்த பிரசித் கிருஷ்ணா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சேப்பாக்கத்தில் 39 ஆண்டுகால சாதனையை முறியடித்த பிரசித் கிருஷ்ணா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - சேப்பாக்கத்தில் 39 ஆண்டுகால சாதனையை முறியடித்த பிரசித் கிருஷ்ணா

விளையாட்டு

சேப்பாக்கத்தில் 39 ஆண்டுகால சாதனையை முறியடித்த பிரசித் கிருஷ்ணா

Admin
Last updated: ஜூன் 21, 2026 10:14 காலை
Admin
Share
SHARE

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 8.2 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன் மூலம், சேப்பாக்கம் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த 30 வயதான பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங்கிற்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார். அவர் தனது முதல் பந்திலேயே ரஹ்மானுல்லா குர்பாஸை ஆட்டமிழக்கச் செய்து விக்கெட் வேட்டையைத் தொடங்கினார். தொடர்ந்து ரஹ்மத் ஷா (5), இப்ராஹிம் சத்ரான் (11), தர்விஷ் ரசூலி (1) மற்றும் சதம் அடித்த கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (102) ஆகியோரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்த அபார பந்துவீச்சிற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் முதல் 5 பேட்டர்களையும் வீழ்த்தியதன் மூலம், ஒருநாள் போட்டி வரலாற்றில் இந்த அரிய சாதனையைச் செய்யும் 3-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பிரசித் கிருஷ்ணா பெற்றுள்ளார். இவருக்கு முன்பு மனோஜ் பிரபாகர் மற்றும் முகமது ஷமி ஆகியோர் மட்டுமே இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர். 1994ல் மனோஜ் பிரபாகர் இலங்கைக்கு எதிராகவும், 2023ல் முகமது ஷமி நியூசிலாந்துக்கு எதிராகவும் இந்த சாதனையை படைத்திருந்தனர். தற்போது பிரசித் கிருஷ்ணா இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 1987 முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வந்தாலும், எந்த இந்திய பந்துவீச்சாளரும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. 39 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, பிரசித் கிருஷ்ணா 8.2 ஓவர்களில் 23 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பு அஜித் அகர்கரின் 4 விக்கெட்டுகள் சாதனையே சிறந்ததாக இருந்தது. மேலும், சேப்பாக்கம் மைதான வரலாற்றில் ஒட்டுமொட்டமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் பிரசித் ஆவார். இதற்கு முன்பு பாகிஸ்தானின் ஆகிப் ஜாவேத் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் ரவி ராம்பால் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பிரசித் கிருஷ்ணா பெற்றுள்ளார். இப்பட்டியலில் ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் குர்னூர் பிரார் ஆகியோரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசியுள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ChepaukCricketIND vs AFGPrasidh Krishnaகிரிக்கெட்சேப்பாக்கம்பிரசித் கிருஷ்ணா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரூ. 440 கோடி வங்கி கணக்குகள் முடக்கம்: திரிணாமுல் அதிரடி
Next Article தூத்துக்குடியில் 600 கிராம் கஞ்சா பறிமுதல்; 3 வாலிபர்கள் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் காரின் கண்ணாடியை உடைத்து நகைகளை திருடும் சம்பவம்

டெல்லியில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 கோடி நகை திருட்டு

டெல்லியில் நகை வியாபாரியின் காரை உடைத்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள…

ஆகஸ்ட் 22, 2026

ஜெய்ப்பூரில் சிஜேபி நிர்வாகிகள் மீது தாக்குதல்

ஜெய்ப்பூரில் மாட்டுத் தொழுவத்தில் இயங்கும் அரசுப் பள்ளியைப்…

ஆகஸ்ட் 22, 2026

ஒரு நபருக்கு 9 சிம்கார்டு மட்டுமே: மத்திய அரசு அதிரடி உத்தரவு

ஆகஸ்ட் 24 முதல் அமலுக்கு வரும் புதிய…

ஆகஸ்ட் 22, 2026

வீட்டுப்பாடம் செய்யாத சிறுவன்: ஆசிரியையால் அடித்ததில் பரிதாப மரணம்

விசாகப்பட்டினத்தில் வீட்டுப்பாடம் செய்யாத 6 வயது சிறுவன்,…

ஆகஸ்ட் 22, 2026

டெல்லியில் சாதி இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, சாதி…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

ஐபிஎல் 2026விளையாட்டு

IPL 2026 |  ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம் ஏன்..? – அருண் துமால் விளக்கம்!

IPL 2026 |  ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம் ஏன்..? - அருண் துமால் விளக்கம்!Published by:Last Updated:May 08, 2026 9:51 PM ISTகர்நாடக அரசின்…

2 Min Read
விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷி: 3 வரலாற்று சாதனைகளை தகர்த்த 15 வயது வீரர்!

15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் 2026 தொடரில் 600 ரன்களைக் கடந்து, ரிஷப் பண்ட் மற்றும் தேவ்தத் படிக்கல்லின் சாதனைகளை முறியடித்தார். மேலும், கிறிஸ் கெயிலின்…

1 Min Read
விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிராக தடுமாறும் இங்கிலாந்து: 222 ரன்களுக்கு 6 விக்கெட் இழப்பு

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. மேட் ஹென்றியின்…

2 Min Read
விளையாட்டு

போதும் சாமி.. கிளம்புங்க! இங்கிலாந்து கோச் மீது வாகன் கடும் விமர்சனம்

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து, தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கிரிக்கெட் வாரிய இயக்குநர் ராப் கீ ஆகியோர் பதவியை ராஜினாமா…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?