சோம்பலாக உணரும்போதும், போதிய தூக்கமின்மையாலும் அடிக்கடி கொட்டாவி வருவது இயல்பு. இது நம்மை மேலும் சுறுசுறுப்பின்றி உணர வைக்கும். இந்த கொட்டாவியைத் தடுக்க சில எளிய குறிப்புகளைப் பார்ப்போம்.
உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது கொட்டாவி அடிக்கடி வர வாய்ப்புள்ளது. எனவே, சோம்பலாக உணரும் நேரங்களில் மூன்று முறை ஆழ்ந்து மூச்சை இழுத்து விடுங்கள். இது உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை அளித்து, கொட்டாவியைத் தடுக்க உதவும்.
சிரிப்பிற்கும் கொட்டாவியைத் தடுக்கும் ஆற்றல் உண்டு என கூறப்படுகிறது. எனவே, நகைச்சுவை வீடியோக்கள் அல்லது ஜோக்குகளைப் பார்ப்பதன் மூலம் கொட்டாவியைத் தவிர்க்கலாம். மேலும், குறிப்பிட்ட இடைவெளிகளில் சில நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது, சோம்பலைப் போக்கி உற்சாகமாக இருக்க உதவும். இது கொட்டாவி வருவதையும் தடுக்கும்.
கழுத்தில் உள்ள 'ஆடம் ஆப்பிள்' எனப்படும் பகுதியை மெதுவாக அழுத்துவதன் மூலமும் கொட்டாவியைத் தடுக்கலாம். நாற்காலியில் சாய்ந்து உட்காராமல், நேராக நிமிர்ந்து உட்காருவது கொட்டாவி வருவதைக் குறைக்கும். ஆழ்ந்த உறக்கம் நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்க உதவும், இதனால் கொட்டாவி விடுவதும் தடுக்கப்பட்டு சுறுசுறுப்பாக இருக்கலாம்.