MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திமுக கூட்டணியில் இருந்து ஐ.யூ.எம்.எல். விலகல்: முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > திமுக கூட்டணியில் இருந்து ஐ.யூ.எம்.எல். விலகல்: முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்
அரசியல்

திமுக கூட்டணியில் இருந்து ஐ.யூ.எம்.எல். விலகல்: முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்

Admin
Last updated: June 20, 2026 3:33 pm
Admin
Share
SHARE

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த முக்கிய முடிவு அக்கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற அவசர பொதுக்குழு கூட்டத்தில், தேசியத் தலைவர் முனீருல் மில்லத் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் 480 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தற்போதைய அரசியல் சூழலில் திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிக்க இயலாது என்றும், இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கு துணை நின்ற கூட்டணி கட்சியினருக்கும், வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றபோதும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காத சூழலில், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்ற அச்சம் நிலவியது. அப்போது, பாஜகவின் மறைமுக ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. ஜோசப் விஜய், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு ஆதரவு கோரி கடிதம் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து, 09.05.2026 அன்று நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஆதரவு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டு, ஆளுநரிடம் ஆதரவு கடிதம் வழங்கப்பட்டது. இதன் விளைவாக, 10.05.2026 அன்று திரு. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தின் வேண்டுகோளின் பேரில், 21.05.2026 அன்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், ஓர் அமைச்சர் பதவிக்கு பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். ஷாஜஹான் அவர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதோடு, தமிழக அரசில் ஐ.யூ.எம்.எல். அங்கம் வகிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்த ஐ.யூ.எம்.எல். தலைமைக்கு சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில், ஐ.யூ.எம்.எல். சார்பில் போட்டியிட்ட 28 வேட்பாளர்களில் 22 பேர் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்ததற்கும், மாண்புமிகு வி.டி. சதீசன் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசில் பி.கே. குஞ்ஞாலிக் குட்டி, கே.எம். ஷாஜி, என். சம்சுதீன், பி.கே. பஷீர், வி.இ. அப்துல் கபூர் ஆகிய 5 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டதற்கும் இக்கூட்டத்தில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்ஐயூஎம்எல்கூட்டணிதமிழ்நாடு அரசியல்திமுக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பட்ஜெட்டை விட 400 மடங்கு லாபம்: ‘ஆப்செஷன்’ படத்தின் அதிரடி வசூல்!
Next Article பேராசிரியை தற்கொலை: ஆண் நண்பர் கைது
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காவிரி நீர் பிரச்சினை: பேச்சுவார்த்தைக்கு கர்நாடகா தயார்

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண கர்நாடகா தயாராக…

June 20, 2026

தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி…

June 20, 2026

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் 68வது பிறந்தநாளை…

June 20, 2026

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு ஆளுநர் அர்லேகர் பிறந்தநாள் வாழ்த்து

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, இந்தியக் குடியரசுத்…

June 20, 2026

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணமா? அபராதம் உயர்வு!

ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்வோருக்கு விதிக்கப்படும்…

June 20, 2026

You Might Also Like

அரசியல்

த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை 2 கோடியை தாண்டியது!

நடிகர் விஜய் தொடங்கிய த.வெ.க. கட்சியின் உறுப்பினர் சேர்க்கை 2 கோடியை தாண்டியுள்ளது. தென்னிந்தியாவில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட முதல் கட்சியாக த.வெ.க. உருவெடுத்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

மக்கள் தீர்ப்பை ஏற்க தி.மு.க.வுக்கு காங்கிரஸ் அறிவுரை

மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று, தி.மு.க. ஒரு சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என காங்கிரஸ் அமைச்சர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். முதலமைச்சர் ஜோசப் விஜய் கூட்டாட்சி தத்துவத்தை…

1 Min Read
தமிழ்நாடு

அமமுகவில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த நிர்வாகிகள்: திருத்தணியில் பரபரப்பு!

திருவள்ளூர் மத்திய மாவட்ட அமமுக நிர்வாகிகள், எஸ்.வேதாச்சலம் தலைமையில் ராஜினாமா செய்து, தளபதி விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
அரசியல்

10 நாட்களில் மாற்றங்கள் சாத்தியமா? – முதல்வர் விஜய்க்கு நேரம் கொடுங்கள்: குஷ்பு

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் குஷ்பு, முதல்வர் விஜய்யை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சிக்கு வந்து 10 நாட்களிலேயே மாற்றங்களை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?