மலைத் தேன் ஒரு சிறந்த மூலிகையாகும். இதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. மருந்துப் பொருட்களுடன் தேனைச் சேர்த்து உட்கொள்ளும்போது, அது மருந்தை எளிதில் உறிஞ்சி, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், இரத்த ஓட்டத்தில் மருந்து வேகமாக கலந்து நோயைக் குணப்படுத்த உதவுகிறது. தேனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
தினமும் தேன் உட்கொள்வது செரிமானத்தை அதிகரித்து, மலச்சிக்கலைப் போக்கும். குழந்தைகளுக்குத் தினமும் தேன் கொடுப்பதால், கால்சியம் மற்றும் மெக்னீசியம் அளவு அதிகரித்து, உடல் வலிமை பெறும். கண் மற்றும் தோல் நோய்களுக்கும் தேன் சிறந்த மருந்தாகும். வெங்காயச் சாற்றுடன் தேனைக் கலந்து சாப்பிட்டால் கண் பார்வை பிரகாசமடையும்.
இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து அருந்தினால், வாந்தி, குமட்டல், சளி, தலைவலி போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். தேனில் உள்ள குளுக்கோஸ், இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன.
மேலும், தேனுடன் முட்டை, பால் சேர்த்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். தினமும் ஒரு ஸ்பூன் தேன் உட்கொள்வது மூட்டு வலியைத் தடுக்கும். தேனில் இஞ்சி, பேரீச்சம்பழத்தை ஊறவைத்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தூக்கமின்மைக்கும் தேன் ஒரு சிறந்த மருந்தாகும். தேனையும் மாதுளை ரசத்தையும் சமமாகச் சேர்த்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும். தேனும், சூடான வெந்நீரும் கலந்து பருகுவதால் உடல் எடை குறையும்.