தற்போது ஆண்மைக்குறைபாடு அதிகரித்து வருவதால், செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பெருகி வருகின்றன. ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. விந்தணுக்களை அதிகரிக்க உதவும் உணவு முறைகள் குறித்து விரிவாகக் காண்போம்.
மேற்கத்திய நாடுகளின் உணவுப் பழக்கவழக்கங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள், ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், கார்பனேட்டட் பானங்களை அதிகமாக அருந்துவது விந்தணுக்களின் செயல் திறனைப் பாதிக்கிறது.
சிலர் பாலாடைக்கட்டி மற்றும் அதிக கொழுப்புள்ள பால் பொருட்களை அதிகமாக உட்கொள்கின்றனர். இவை விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்தப் பால் பொருட்களில் கால்சியம், விட்டமின் டி போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன.
பாஸ்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, சோயா பொருட்களை அதிகமாக உட்கொள்வதால் 99% ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது. எனவே, சோயா நுகர்வில் கவனம் தேவை.