நம் முன்னோர்களின் காலத்தில் இருந்து தொன்று தொட்டு வரும் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு போடும் பழக்கம், பல நோய்களில் இருந்து பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ உதவியது. ஆனால், இன்றைய தலைமுறையில் இந்தப் பழக்கம் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.
வெற்றிலை போடுவதால் பல நன்மைகள் உள்ளன. இது மூளைக்கு ஆரோக்கியம் தருவதோடு, இதயத்தையும் வலுப்படுத்துகிறது. சித்த மருத்துவர்கள் கொடுக்கும் பல மருந்துகளை வெற்றிலையுடன் சேர்த்து சாப்பிடும் பழக்கமும் உண்டு.
மேலும், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து போடுவது நீரிழிவு நோய் முதல் மன அழுத்தம் வரை குறைக்கும் ஆற்றல் கொண்டது. வெற்றிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது வயிறு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
வயிற்றுப் பிரச்சனைகள் வராமல் தடுக்க, வெற்றிலையை அரைத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் அந்தத் தண்ணீரை வடிகட்டி குடிக்கலாம். இதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணலாம்.