MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மக்களை நாய்கள் என பேசிய லாரன்ஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் – தாடி பாலாஜி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மக்களை நாய்கள் என பேசிய லாரன்ஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் – தாடி பாலாஜி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - மக்களை நாய்கள் என பேசிய லாரன்ஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் – தாடி பாலாஜி

லைஃப் ஸ்டைல்

மக்களை நாய்கள் என பேசிய லாரன்ஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் – தாடி பாலாஜி

Admin
Last updated: ஜூன் 16, 2026 7:02 காலை
Admin
Share
SHARE

நடிகர் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, புதிய கட்சிக்கு மக்கள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதை விளக்க, “புது இடத்திற்குப் போகும்போது அங்கிருக்கும் தெரு நாய்கள் கத்தும், அதற்குப் பிடித்த மாதிரி பிஸ்கட் அல்லது பிரியாணி போட வேண்டும்” என்று ஒரு உதாரணத்தைக் கூறிப் பேசினார். லாரன்ஸின் இந்த “நாய்” உதாரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு தவெக ஆதரவாளரும் சின்னத்திரை பிரபலமுமான தாடி பாலாஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமக்களை லாரன்ஸ் எப்படி ‘நாய்கள்’ என்று ஒப்பிடலாம் என பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'என்னுடைய சப்போர்ட் லாரன்ஸ் மாஸ்டருக்கு தான் என்று சொன்ன அத்தனை பேரையும் மனசு வருத்தப்படும் படி இரண்டு, மூன்று வார்த்தைகளை பிரயோகித்து பேசி இருக்கீங்க. நாய்ங்கன்னு சொல்றீங்க. பிஸ்கட்டு போட்ட சில நாய்ங்க சும்மா இருக்கும். பிரியாணி போட்ட சில நாய்ங்க சும்மா இருக்கும்னு சொல்றீங்க. இது ஒரு வார்த்தையா?' என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசியலுக்கு வர வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டீர்கள் என்றால், வார்த்தைகளை எவ்வளவு கவனமாக பயன்படுத்த வேண்டும். ஒரு ஆன்மீகவாதியாக இருக்கும் நீங்கள் பொதுவெளியில் இப்படியெல்லாம் பேசலாமா? இது மிகப்பெரிய தவறு. எப்படி நீங்கள் மக்களை நாய்கள் என்று சொல்வீர்கள்? இன்னும் தேர்தல் வரவில்லை. உங்களை வேட்பாளராகவும் அறிவிக்கவில்லை. நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளால், உங்களை நம்பி வேட்பாளராக நிற்க வைப்பவர்களுக்கும் பெரிய பிரச்சனையை கொடுக்கும்.

எனவே நமக்கும், நம்மைச் சேர்ந்தவர்களுக்கும், நம்மை நம்பி ஒரு விஷயத்தை கொடுக்கிறவர்களுக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது. இனிமேலாவது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள் என அறிவுரை கூறியுள்ளார் தாடி பாலாஜி. மேலும் மக்களுடன் மக்களாக ஒன்று கேட்கிறேன். நீங்கள் பேசிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்பீர்கள் என்று நம்புகிறேன் எனவும் அந்த வீடியோவில் பேசியுள்ளார் தாடி பாலாஜி.

முன்னதாக விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் தாடி பாலாஜி பயணித்து வந்தார். விஜய்யின் புகைப்படத்தை நெஞ்சில் பச்சை குத்தி மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். இதனையடுத்து திடீரென தவெகவில் இருந்து விலகினார். தொடர்ந்து லீமா ரோஸின் மகன் ஜோஸ் சார்லின் மார்டின் கட்சியான லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார் தாடி பாலாஜி. இதனிடையில் சமீபத்தில் அந்த கட்சியில் இருந்தும் அவர் விலகியது பரபரப்பினை கிளப்பியது. மீண்டும் அவர் தவெகவில் இணைய போகிறாரா என்ற கேள்விகளை எழுப்பியது. மற்றொரு பக்கம் தவெகவில் இருந்திருந்தால் தாடி பாலாஜியும் தற்போது ஒரு அமைச்சர் ஆகி இருக்கலாம் என சோஷியல் மீடியாவில் பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅரசியல்தவெகதாடி பாலாஜிராகவா லாரன்ஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உடனடி ஆற்றல் தரும் உணவுகள்: ஆரோக்கியம் காக்கும் வழிகள்
Next Article சிறுநீரக கற்களை கரைக்க எளிய இயற்கை வழிகள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் மத்திய அரசு

பிரதமர் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.6,000 மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் பிரதமரின் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு…

ஜூலை 31, 2026

விவாகரத்து கோரி உமர் அப்துல்லா, பாயல் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா…

ஜூலை 31, 2026

பத்ரிநாத் கோயில் காணிக்கை திருட்டு: பணம், நகை மீட்பு

பத்ரிநாத் பத்ரி நாராயணன் கோயிலில் காணிக்கை திருட்டில்…

ஜூலை 31, 2026

சீமா வெண்கலப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை சீமாவிற்கு…

ஜூலை 31, 2026

காவிரி நீர் பங்கீட்டு சந்திப்பு ரத்து: ஜோசப் விஜய் பெங்களூரு பயணம் ஒத்திவைப்பு

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா-தமிழகம் இடையே…

ஜூலை 31, 2026

You Might Also Like

கண்களை பாதிப்பில் இருந்து பாதுகாப்பது எப்படி? இதோ சில வழிகள்!

கண்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அவசியம். பார்வை இழப்பு, குளூக்கோமா, கண்புரை போன்ற பாதிப்புகளைத் தடுக்க உதவும் உணவுப் பொருட்கள் மற்றும் அவற்றின் நன்மைகள்…

1 Min Read
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
தமிழ்நாடு

அமைச்சர் ராஜ்மோகனை விமர்சித்த சீமான்: அரசுப் பள்ளிகள் குறித்து கேள்வி

தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? அரசுப் பள்ளிகளுக்கும் அமைச்சரா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் ராஜ்மோகன் அரசுப் பள்ளிகள் மீது அக்கறை காட்ட வேண்டும் என…

3 Min Read
லைஃப் ஸ்டைல்

திருச்செந்தூர் கோயிலில் செல்போன்களுக்கு தடை: பறிமுதல் செய்யப்படும்!

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போன் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வரும் 1-ஆம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மன்னார்குடி அருகே கார் மோதி 4 பள்ளி மாணவர்கள் பலி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மீது கார் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?