MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: காத்திருப்பு பட்டியல் டிக்கெட் உறுதி: இனி 94% துல்லியம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - காத்திருப்பு பட்டியல் டிக்கெட் உறுதி: இனி 94% துல்லியம்!

லைஃப் ஸ்டைல்

காத்திருப்பு பட்டியல் டிக்கெட் உறுதி: இனி 94% துல்லியம்!

Admin
Last updated: ஜூன் 13, 2026 6:23 காலை
Admin
Share
SHARE

இந்திய ரயில்வேயில் பயணிகளின் வசதிக்காக புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ரயில் டிக்கெட் முன்பதிவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன் மூலம், 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஏஐ உதவியுடன் ரயில் டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகமாக உள்ளது.

இதுவரை ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சில நிமிடங்கள் தேவைப்பட்டது. குறிப்பாக பண்டிகை காலங்கள் மற்றும் அதிக நெரிசல் நேரங்களில் பலர் ஒரே நேரத்தில் டிக்கெட் பதிவு செய்ய முயற்சிப்பதால், சர்வர் பிரச்சனைகள் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்பட்டு வந்தன. ஆனால் இனி அந்த பிரச்சனை இருக்காது. பயணிகள் டிக்கெட்டுகளை எளிதாகவும் விரைவாகவும் முன்பதிவு செய்யும் வகையில், இந்தியன் ரயில்வே ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வருவதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதற்கான சோதனை பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அவை வெற்றிகரமாக முடிந்தால், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஏஐ உதவியுடன் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகமாகும்.

ஏஐ டிக்கெட் முன்பதிவின் முக்கிய பயன்களில் ஒன்று, காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிகளின் டிக்கெட் உறுதியாகுமா என்பதை சுமார் 94% துல்லியத்துடன் முன்கூட்டியே கணிக்க Rail One செயலி உதவும். மேலும், தட்கல் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கவும், உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யவும் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் உதவியால் குறைந்த நேரத்தில் அதிகமான டிக்கெட் முன்பதிவுகளை செயல்படுத்த முடியும். இதனால் சர்வர் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு குறைந்து, சேவை மேலும் சீராக இருக்கும்.

மேலும், IRCTC தளத்தில் பயன்படுத்தப்படும் ஏஐ தொழில்நுட்பம், சந்தேகத்திற்கிடமான பயனர் கணக்குகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உதவுகிறது. ரயில்வே சமையலறைகளில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதையும் இது கண்காணிக்கிறது. ரயிலின் தற்போதைய இருப்பிடம், காலியாக உள்ள இருக்கைகளின் எண்ணிக்கை மற்றும் எந்த பிளாட்பார்மில் ரயில் வரும் போன்ற தகவல்களையும் பயணிகள் விரைவாகவும் துல்லியமாகவும் அறிந்து கொள்ள முடியும். ரயில் டிக்கெட் பதிவு செய்வது, ரத்து செய்வது மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவது போன்ற செயல்கள் இனி மேலும் எளிதாகவும் விரைவாகவும் செய்ய முடியும்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIAI TechnologyIndian Railwaysஇந்திய ரயில்வேடிக்கெட் முன்பதிவுரயில்வே
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆட்டி விமர்சனம்: மலை கிராமத்தில் பெண்கள் நீதி வேட்டை!
Next Article 4 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு தாவிய விவகாரம்: சபாநாயகர் நோட்டீஸ்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

திமுக கூட்டணியில் இல்லை – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்

தமிழ்நாட்டில் தற்போது திமுக கூட்டணி என்ற ஒன்று இல்லை என்றும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும் இல்லை என்றும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

அண்ணா பிறந்தநாளில் அண்ணாமலை புதிய கட்சி?

செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்தநாளில் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல். 'we the leaders' இயக்கத்தில் 18 லட்சம் பேர் இணைந்துள்ளனர். தமிழக அரசியலில்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தூத்துக்குடியில் ரூ.7,000 கோடி VinFast விரிவாக்கம்: இ-ஸ்கூட்டர், இ-பஸ் உற்பத்தி!

தூத்துக்குடியில் ரூ.7,000 கோடி முதலீட்டில் VinFast நிறுவனம் மின்சார ஸ்கூட்டர்கள், இ-பஸ் தயாரிக்க உள்ளது. இது தமிழ்நாட்டை மின்சார வாகன உற்பத்தி மையமாக மாற்றும்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மதுரை மாநகராட்சியில் ரூ.2,000 கோடி ஊழல்: அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

மதுரை மாநகராட்சியில் ரூ.2,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக த.வெ.க. அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சொத்து வரி முறைகேடுகளுக்குப் பிறகு புதிய குற்றச்சாட்டுகள் அரசியல் பரபரப்பை அதிகரித்துள்ளன.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?