நார்வே செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா, முதல்வர் விஜயை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்த சந்திப்பின்போது, பிரக்ஞானந்தாவுடன் முதல்வர் விஜய் செஸ் விளையாடி மகிழ்ந்தார். தொடர்ந்து, பிரக்ஞானந்தாவின் சாதனைக்காக அவருக்கு ரூ.50 லட்சத்தை பரிசாக முதல்வர் விஜய் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, 'முதல்வருடன் செஸ் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரே செஸ் போர்டை எடுத்து வரச்சொல்லி விளையாடினார். அவர் நன்றாகவே விளையாடினார்' என்று கூறினார்.
சாதனை படைத்த இளம் வீரரை நேரில் அழைத்து பாராட்டி, பரிசும் வழங்கி ஊக்கப்படுத்திய முதல்வர் விஜய்யின் செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த சந்திப்பு தமிழக விளையாட்டுத் துறையில் ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.