குவைத் சர்வதேச விமான நிலையம் அருகே ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதல்களால் அப்பகுதியில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டன.
வான் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாக செயல்பட்டு, தாக்குதல்களை எதிர்கொண்டன. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், பதற்றமான சூழல் நிலவியதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவங்கள், பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் நிகழ்ந்துள்ளது. இதனால், குவைத் மற்றும் பஹ்ரைன் இடையே பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி இருக்கவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.