MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுக எங்கள் உயிர் மூச்சு: எஸ்.பி.வேலுமணி பரபரப்பு பேட்டி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > அதிமுக எங்கள் உயிர் மூச்சு: எஸ்.பி.வேலுமணி பரபரப்பு பேட்டி
லைஃப் ஸ்டைல்

அதிமுக எங்கள் உயிர் மூச்சு: எஸ்.பி.வேலுமணி பரபரப்பு பேட்டி

Admin
Last updated: May 29, 2026 7:18 am
Admin
Share
SHARE

அதிமுக எங்கள் உயிர் மூச்சு என்றும், பதவிக்காக நாங்கள் செயல்படவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பு பேட்டி அளித்தார்.

'எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். நானும், சி.வி.சண்முகமும் சில கோரிக்கைகளை முன்வைத்தோம். அவற்றை ஏற்று ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றுவதாக இ.பி.எஸ். கூறியுள்ளார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். சில ஊடகங்கள் நாங்கள் பதவிக்காக தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்தோம் என தவறாக செய்தி வெளியிடுகின்றன. அது உண்மையல்ல. மக்கள் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரித்தார்கள் என்ற அடிப்படையில், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அக்கட்சிக்கு ஆதரவு கொடுத்தோம். திமுக எதிர்ப்பு என்ற நோக்கிலேயே இந்த ஆதரவு வழங்கப்பட்டது,' என்று அவர் விளக்கினார்.

மேலும் பேசிய எஸ்.பி.வேலுமணி, 'சி.வி.சண்முகம் உட்பட அனைவரும் அதிமுகவில் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களை வளர்த்த கோடிக்கணக்கான தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதையே நாங்கள் செய்வோம். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பொதுச் செயலாளரை சந்தித்து, அந்தக் கருத்து வேறுபாட்டை சரிசெய்துவிட்டோம். சி.வி.சண்முகம் தரப்பினரும், நாங்களும் ஒற்றுமையாக முடிவெடுத்துள்ளோம்,' என்று தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவு நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, 'தேவையான கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறுகிறேன்' என்று அவர் பதிலளித்தார். புதிய அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவோம் என்றும், கோயம்புத்தூர் உட்பட தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை அமல்படுத்தாவிட்டால் சட்டமன்றத்தில் வலிமையாக குரல் எழுப்புவோம் என்றும் கூறினார். தமிழ்நாட்டில் குற்றங்கள் மற்றும் போதை கலாச்சாரம் அதிகரித்து வருவதாகவும், இதனை அரசு தடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:AIADMKSP VelumaniTamil Nadu Politicsஅதிமுகஎஸ்.பி.வேலுமணிதமிழக அரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முகச் சுருக்கங்களுக்கு இயற்கையான தீர்வு: இஞ்சியை இப்படி பயன்படுத்துங்கள்!
Next Article தவெக பெயரில் மோசடி: தேனியில் சர்ச்சை, கட்சி எச்சரிக்கை!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

அரசியல்

நீட் தேர்வை ரத்து செய்: இளைஞர் காங்கிரஸ் ரயில் மறியல் போராட்டம்!

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து சென்னையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

2 Min Read
அரசியல்

திமுக குழப்பம்: தவெக அரசு மீது தாக்குதல் – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், திமுகவின் தூண்டுதலால் தவெக அரசுக்கு எதிராக குழப்பம் விளைவிக்க முயற்சி நடப்பதாக குற்றம்…

1 Min Read
தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எனது பயணம்: சி. விஜயபாஸ்கர்

அ.தி.மு.க.வில் இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்த எம்.எல்.ஏ.க்கள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இணைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.பாஸ்கர், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எனது பயணம் தொடரும்'…

2 Min Read
தமிழ்நாடு

கூட்டணி கட்சிகளை விமர்சிப்பது நாகரிகமல்ல: சசிகாந்த் செந்தில்

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்த நிலையில், இரு கட்சிகளிடையே வார்த்தை மோதல் வலுத்துள்ளது. கூட்டணி கட்சிகளை அராஜகமான வார்த்தைகளால் தாக்குவது நாகரிகமல்ல என…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?