MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 மாதங்களில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 மாதங்களில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 மாதங்களில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 மாதங்களில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு

Admin
Last updated: மே 28, 2026 8:09 காலை
Admin
Share
SHARE

ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த 26 வயது இளம்பெண்ணை, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள் சுந்தர் மற்றும் சுரேஷ் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கக் கோரி, பாதிக்கப்பட்ட இளம்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், பாலியல் வன்கொடுமை வழக்குகளை சட்டப்படி 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க மாநிலம் முழுவதும் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றங்களுக்கும், செஷன்ஸ் நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள பாலியல் வன்கொடுமை வழக்குகள் குறித்த விவரங்களை போலீஸ் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றும், தனது வழக்கையும் திருவண்ணாமலை நீதிமன்றம் விரைவாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு துரித நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பாலியல் வழக்குகளில் விரைந்து நீதி வழங்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், மரபணு சோதனை மற்றும் தடயவியல் ஆய்வகங்களை அதிகளவில் அமைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றும் கோரினார்.

போலீஸ் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், சம்பந்தப்பட்ட காவலர்கள் இருவரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை வரும் ஜூன் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், திருவண்ணாமலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு மாதங்கள் ஆகியும் விசாரணை துரிதப்படுத்தப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். மேலும், இந்த பாலியல் வழக்கை திருவண்ணாமலை நீதிமன்றம் தினசரி அடிப்படையில் விசாரித்து, வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduகாவலர்கள்சென்னை ஐகோர்ட்திருவண்ணாமலைபாலியல் வன்கொடுமைவழக்கு விசாரணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முன்னாள் தலைவர் ரந்தீர் சிங் மறைவு
Next Article ஐபிஎல் 2026: தோல்விக்கு பின் கம்மின்ஸ் பேச்சு – வைபவ் சூர்யவன்ஷியைப் பாராட்டிய ஹைதராபாத் கேப்டன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு குறித்த செய்தி அறிக்கை

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் 2 பேர் உயிரிழந்த…

ஜூலை 13, 2026

அசாம் முதல்வர்: ரூ.472 கோடி போதைப்பொருட்கள் அழிப்பு

அசாம் மாநிலத்தில் ரூ.472 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை…

ஜூலை 13, 2026

சோனம் வாங்சுக் உடல்நிலை கவலைக்கிடம்: உண்ணாவிரத போராட்டம் தீவிரம்

லடாக்கை 6வது அட்டவணையின் கீழ் கொண்டுவர வலியுறுத்தி…

ஜூலை 13, 2026

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர்,…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

You Might Also Like

கூடங்குளம் அணுமின் நிலையம்
தமிழ்நாடு

கூடங்குளம் அணு உலை பழுது: 562 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலையில் ஏற்பட்ட பழுது காரணமாக, 562 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு அணு உலைகளும் தலா 1,000 மெகாவாட் உற்பத்தி…

1 Min Read
தமிழ்நாடு

மாணவிகள் காவல் உதவி செயலியை பயன்படுத்த ஐ.ஜி. பவானீஸ்வரி அறிவுறுத்தல்

சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டதில் இருந்து 75-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாணவிகள் காவல் உதவி செயலியை பயன்படுத்த வேண்டும் என ஐ.ஜி. பவானீஸ்வரி அறிவுறுத்தியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

தவெக தலைவர் விஜய் உடன் சேர்ந்து 9 அமைச்சர்கள் நாளை பதவியேற்கின்றனர்

தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து, காங்கிரஸ் முதல் ஆளாக திமுக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு,…

1 Min Read
தமிழ்நாடு

இன்றைய ராசி பலன்: தந்தையின் மகிழ்ச்சிக்கு காரணமாவீர்கள்!

2026 ஜூன் 26ஆம் தேதிக்கான ராசி பலன்கள்: இன்று உங்கள் வளர்ச்சியினால் தந்தைக்கு மகிழ்ச்சி. மேஷம் முதல் மீனம் வரை ஒவ்வொரு ராசிக்கான பலன்கள், அதிர்ஷ்ட நிறம்,…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?