MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் விஜய்: முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு அளிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் விஜய்: முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு அளிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் விஜய்: முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு அளிப்பு

அரசியல்

பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் விஜய்: முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு அளிப்பு

Admin
Last updated: மே 27, 2026 7:05 மணி
Admin
Share
SHARE

புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் விஜய் இன்று சந்தித்து பேசினார். தமிழக அரசின் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை முதல்வர் விஜய் பிரதமரிடம் நேரில் வழங்கினார். தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து டெல்லிக்கு இன்று காலை புறப்பட்டார்.

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் விஜய்க்கு, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தமிழக தலைமைச் செயலர் சாய் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு அளிக்கப்பட்டது. பிரதமர் உடனான சந்திப்பின்போது வலியுறுத்த வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து முதல்வர் விஜய், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

புதிதாக கட்டப்பட்டுள்ள சேவா தீர்த் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, முதல்வர் விஜய் பிரதமருக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழகம் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த சந்திப்பின் போது, மேகேதாட்டு அணை, இருமொழி கொள்கை, அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான பிஎம்ஸ்ரீ திட்ட நிதி, தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள மத்திய நிதி, தமிழகத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி மேம்பாடு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் விஜய் பிரதமரிடம் வழங்கினார்.

பிரதமர் உடனான சந்திப்பு நிறைவடைந்த பிறகு, முதல்வர் விஜய் மீண்டும் தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்பினார். இதைத் தொடர்ந்து, அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்திக்க உள்ளார். மேலும், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பேபி ஆகியோருடனும் முதல்வர் விஜய் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்டெல்லி சந்திப்புதமிழக கோரிக்கைகள்பிரதமர் மோடிமுதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அசாமில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்: முக்கிய அம்சங்கள் என்ன?
Next Article மெரினா நீலக்கொடி கடற்கரை: ஆணையாளர் ஆய்வு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

ஸ்டார்லிங்க் அனுமதி: நாட்டுக்கு அச்சுறுத்தல் – பாஜக எம்பி எச்சரிக்கை

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பாஜக…

அக்டோபர் 12, 2026

ரியாத் விமான நிலைய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ரியாத் விமான நிலையத்தை…

அக்டோபர் 12, 2026

டெல்லி மெட்ரோ நிலையங்கள் மூடல்: உச்ச நீதிமன்றம் கடும் கேள்வி

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்ட விவகாரத்தில்,…

அக்டோபர் 12, 2026

அதானி ஆலையில் 70 அடி உயர துர்கா தேவி சிலை!

அதானி சிமெண்ட் நிறுவனம், நவராத்திரி மற்றும் துர்கா…

அக்டோபர் 12, 2026

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர்…

அக்டோபர் 11, 2026

You Might Also Like

தமிழக முதல்வர் விஜய்
இந்தியா

மேகதாது அணை: மாநிலங்களவையில் காங்கிரஸ் நோட்டீஸ்

தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்க மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் நோட்டீஸ்…

1 Min Read
மேற்கு வங்காளத்தின் முன்னாள் துணை சபாநாயகர்
இந்தியா

மேற்கு வங்காள முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை: அரசியலே தவறு என கடிதத்தில் அதிர்ச்சி

மேற்கு வங்காள முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது கடிதத்தில், அரசியலில் நுழைந்ததே தவறு என குறிப்பிட்டுள்ளது பரபரப்பை…

2 Min Read
பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்
இந்தியா

புதிய சவால்களுக்கு தீர்வு காணுங்கள்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதிய சவால்களுக்கு புதுமையான தீர்வுகளைக் காணும் துணிச்சல் கொண்டவர்களே வெற்றி பெறுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இளைஞர்கள் அத்தகைய மன உறுதியுடன் செயல்பட வேண்டும்…

1 Min Read
தமிழ்நாடு

மருத்துவர்கள் தினம்: முதல்வர் விஜய் வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் விஜய் மருத்துவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர்களின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம் என்றும் போற்றத்தக்கது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?