MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பழைய ஓய்வூதியத் திட்டம்: முதல்வரிடம் ஜாக்டோ ஜியோ கோரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > பழைய ஓய்வூதியத் திட்டம்: முதல்வரிடம் ஜாக்டோ ஜியோ கோரிக்கை
அரசியல்

பழைய ஓய்வூதியத் திட்டம்: முதல்வரிடம் ஜாக்டோ ஜியோ கோரிக்கை

Admin
Last updated: May 27, 2026 9:34 am
Admin
Share
SHARE

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தமிழக முதல்வர் விஜய்யிடம் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பில், 10 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர்கள் முதல்வரிடம் சமர்ப்பித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவார்கள் என நம்புவதாகவும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தங்கள் தலைமையிலான அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், 2010 ஆகஸ்ட் 23-க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளித்தல், இடைநிலை, முதுகலை, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், ஊதிய முரண்பாடுகளைக் களைதல், கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையில் உள்ள பணிமேம்பாடு மற்றும் ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்குதல் போன்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சிச் செயலாளர், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் எம்ஆர்பி செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க முன்வர வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்க மறுக்கப்பட்ட 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், 2002 முதல் 2010 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பணிக்காலத்தை பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்கவும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாக்டோ ஜியோ கோரிக்கை விடுத்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Nadu Governmentஅரசு ஊழியர்கள்ஆசிரியர்கள்பழைய ஓய்வூதியத் திட்டம்முதல்வர் விஜய்ஜாக்டோ ஜியோ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதி
Next Article சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு: 11 நாட்களில் 4-வது முறை அதிகரிப்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

அரசியல்

முதல்வர் விஜய்-ராகுல் காந்தி சந்திப்பு ரத்து: காரணம் சொன்ன காங்கிரஸ் எம்.பி.

முதல்வர் விஜய் மற்றும் ராகுல் காந்தி இடையேயான சந்திப்பு ரத்து செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் திலக் விளக்கம் அளித்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க…

1 Min Read
இந்தியா

டெல்லி சென்ற முதல்வர் விஜய்: இன்று மாலை பிரதமர் மோடியுடன் சந்திப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சரான விஜய், முதன்முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை…

1 Min Read

திருமாவளவன் தடம்மாறுகிறார்: விசிகவில் இருந்து விலகும் பனையூர் பாபு குற்றச்சாட்டு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தனது பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். திருமாவளவன்…

2 Min Read
அரசியல்

திமுகவின் உண்மையான முகம் விரைவில் தெரியும்: உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளும் அரசின் செயல்பாடுகளை விமர்சித்ததுடன், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?