MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேகேதாட்டு அணை: அரசியல், சட்ட ரீதியாக அழுத்தம் தேவை – தலைவர்கள் வலியுறுத்தல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேகேதாட்டு அணை: அரசியல், சட்ட ரீதியாக அழுத்தம் தேவை – தலைவர்கள் வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - மேகேதாட்டு அணை: அரசியல், சட்ட ரீதியாக அழுத்தம் தேவை – தலைவர்கள் வலியுறுத்தல்

அரசியல்

மேகேதாட்டு அணை: அரசியல், சட்ட ரீதியாக அழுத்தம் தேவை – தலைவர்கள் வலியுறுத்தல்

Admin
Last updated: மே 26, 2026 11:25 காலை
Admin
Share
SHARE

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க அரசியல் மற்றும் சட்ட ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான இந்த முக்கிய பிரச்சனையில், மாநில அரசின் உடனடி நடவடிக்கை அவசியம் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், 'காவிரி என்பது ஒரு மாநிலத்தின் சொத்து அல்ல, இரு மாநில மக்களின் வாழ்வாதார நதி. உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் நடைமுறைகளையும் மீறி, ஒருதலைபட்சமாக அணைகட்ட முயல்வது கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிரானது. தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, கர்நாடக அரசின் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழர்களின் நீர்வள உரிமைக்காக தமிழக காங்கிரஸ் கட்சி என்றும் உறுதியாக குரல் கொடுக்கும்' என தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், 'காவிரி நடுமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு, மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மேகேதாட்டு அணை பிரச்சினை தொடர்பாக, கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எனவே, தமிழகத்தின் தண்ணீர் உரிமை பறிபோகும் பேராபத்து ஏற்பட்டுள்ள நிலையில், மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்துவது தொடர்பாக, உடனடியாக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, அடுத்த கட்ட அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 'காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்திடம் நமது தரப்பு நியாயங்களை ஆதாரங்களோடு எடுத்துக்கூறி, கர்நாடக அரசு தயாரிக்கும் விரிவான திட்ட மதிப்பீட்டுக்கு ஒப்புதல் அளிக்காமல் தடுக்க வேண்டியதே நம் முன்னால் இருக்கும் முக்கியமான உடனடிக் கடமையாகும். காவிரி பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒன்றுபட்ட அரசியல் நிலைப்பாடு தேவை. அதை ஏற்படுத்த அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதே சாலச் சிறந்த வழியாகும். இதை முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், 'தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தயவால் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக அரசு, தன் ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்க காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை கர்நாடக அரசிடம் தாரை வார்க்குமேயானால், தமிழக மக்களுக்கு அதைவிட மிகப் பெரிய துரோகம் இருக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, மேகேதாட்டு அணை விவகாரத்தில் சட்டரீதியாக மட்டுமல்லாது, திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மேலிடம் மூலம் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Mekedatu Damஅரசியல்காவிரிசட்டம்தமிழகம்மேகேதாட்டு அணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சேலம்: ரயில்வே சுரங்கப்பாதையில் கார் மூழ்கி தம்பதி உயிரிழப்பு
Next Article த.வெ.க.வில் இணைய திட்டமா? சி.வி.சண்முகம் காட்டமான பதில்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

முதல்வர் சி. ஜோசப் விஜய் தவெக கட்சி விரிவாக்க திட்டங்கள் குறித்து உரையாற்றுகிறார்
அரசியல்

கேரளம், புதுச்சேரி, தெலுங்கானாவில் தவெக: வியூகம் வகுக்கும் முதல்வர் சி. ஜோசப் விஜய்

கேரளம், புதுச்சேரி, தெலுங்கானாவில் தவெக கட்சியை விரிவுபடுத்தும் திட்டத்தை முதல்வர் சி. ஜோசப் விஜய் வகுத்து வருகிறார். 2029 மத்திய அரசு அமைப்பில் முக்கிய பங்கு வகிக்க…

2 Min Read
அரசியல்

முதல்வர் விஜய்க்கு சாமானியர்களின் 7 கேள்விகள்!

முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி, மூன்றாவது வாரத்தில் அடியெடுத்துள்ள நிலையில், சாமானிய மக்கள் சட்டம் ஒழுங்கு, லஞ்சம், பெண்கள் நலன், விவசாயம் என பல்வேறு துறைகளில் 7…

3 Min Read
இந்தியா

2024 தேர்தல்: போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை என்ன?

2023-ல் நிறைவேற்றப்பட்ட 33% இட ஒதுக்கீடு சட்டத்திற்குப் பிறகு, 2024 தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இது பெண்களின் அரசியல் பங்களிப்பை…

1 Min Read
அரசியல்

தமிழக முதல்வர் விஜய்: கமல்ஹாசன் நேரில் வாழ்த்து! முக்கிய கோரிக்கைகள் சமர்ப்பிப்பு!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். தமிழ்த் திரைப்படத் துறைக்கான 6 முக்கிய கோரிக்கைகளையும் முதல்வரிடம் வழங்கினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?