MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சுயமரியாதைக்காக ராஜினாமா: 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > சுயமரியாதைக்காக ராஜினாமா: 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விளக்கம்
தமிழ்நாடு

சுயமரியாதைக்காக ராஜினாமா: 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விளக்கம்

Admin
Last updated: May 25, 2026 10:26 pm
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் முழு ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்து, விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்றுள்ளார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தபோது, எஸ்.பி. வேலுமணி தரப்பு அ.தி.மு.க.வினர் த.வெ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

இந்த சூழலில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ஆகிய 3 பேர் இன்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். வேலுமணி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்களான இவர்கள், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதங்களை அளித்தனர். சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், இந்த ராஜினாமா கடிதங்கள் சட்டசபை விதிகளின்படி முறையாக உள்ளதால் ஏற்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, மூவரும் இன்றிரவு பனையூரில் உள்ள த.வெ.க.வின் தலைமை அலுவலகத்திற்கு சென்று கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். பின்னர், கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்கள், தங்கள் ராஜினாமா குறித்து விளக்கமளித்தனர். மதுராந்தகம் மரகதம் குமரவேல் கூறுகையில், 'நாங்கள் பதவி விலகியது சுயநலத்திற்காக அல்ல, சுயமரியாதைக்காகவே இந்த முடிவை எடுத்தோம். தமிழகத்தில் தி.மு.க.வின் ஆதரவுடன் ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி முயன்றார். ஆனால், அந்த நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கவில்லை. தி.மு.க.வுடன் கூட்டணி சேர்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை' என தெரிவித்தார்.

மேலும், 'சி.வி. சண்முகம் தலைமையில் 30 எம்.எல்.ஏ.க்கள், த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்தோம். தொகுதி மக்களின் நிலைப்பாடு மற்றும் கோரிக்கையை முன்வைத்து இந்த நிலைப்பாட்டை எடுத்தோம். ஆனால், அ.தி.மு.க.வுக்கு பழனிசாமி துரோகம் செய்துவிட்டார். எங்களை பற்றி அவதூறு பரப்பினர். கடந்த 2021-ல் எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களுக்கு எங்களால் எந்த நல்ல காரியமும் செய்ய முடியாத நிலை இருந்தது. தற்போதும் அது நீடித்தது. தொகுதி மக்களின் விருப்பத்திற்காகவே த.வெ.க. அரசை ஆதரிக்க முடிவு எடுத்தோம். தொகுதி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ராஜினாமா செய்தோம். முழு மனதுடன் த.வெ.க.வில் எங்களை இணைத்துக்கொண்டோம். முதல்-அமைச்சர் விஜய் நல்ல ஆட்சியை வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது' என்றும் அவர் கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Nadu Politicsஅதிமுகஅரசியல்எம்.எல்.ஏ. ராஜினாமாத.வெ.க.விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்தது ஜனநாயகத்துக்கு எதிரானது – அன்புமணி
Next Article அதிமுகவில் இருந்து ஒன்றிய செயலாளர் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அதிரடி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கோவை சிறுமி கொலை: கைதி நாடகத்தால் பரபரப்பு

கோவை சிறுமி கொலை வழக்கில் கைதி ஒருவர், கொலையை நடித்துக் காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதிகள் இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

புதிய அரசு அமைக்க குதிரை பேரம் நடந்து விட்டது – வில்சன் எம்.பி.

தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் தி.மு.க. எம்.பி. வழக்கறிஞர் பி.வில்சன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழக அரசியலில் மாற்றத்தை…

0 Min Read

சீமான்-மாணிக்கம் தாகூர் வார்த்தை போர்: கடும் பதிலடி

சீமான் மீது காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம். வாக்கு வீழ்ச்சி, டெபாசிட் இழப்பு குறித்து சீமானுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி. திமுக கூட்டணி வெற்றி,…

1 Min Read
அரசியல்

பல்கலைக்கழக வேந்தர்: முதல்வர் பதவி கட்டாயமில்லை – அமைச்சர் விஸ்வநாதன்

தமிழக முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தராகும் திமுக அரசின் நடைமுறையை பின்பற்றும் கட்டாயம் இல்லை என அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் விஜய் உரிய…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?