நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்தத் திரைப்படம் தீபாவளிக்கு முன்பாகவே, அதாவது அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தில், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அனுமாராக சன்னி தியோலும், லட்சுமணனாக ரவி துபேயும் நடித்துள்ளனர்.
'ராமாயணம்' திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படம் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட உள்ளது. முதல் பாகம் தீபாவளியை ஒட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் நமீத் மல்ஹோத்ரா அக்டோபர் 30 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.