தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அவரை தியாகதுருகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு அழைத்துச் சென்ற போலீசார், சுமார் 5 மணி நேரம் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் பெறப்பட்டது. பின்னர், கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உள்ள குடியிருப்பில் நீதிபதி பானுமதி முன்னிலையில் அருள் விக்னேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தவெக வழக்கறிஞர்கள் மூன்று பேர் நீதிமன்ற வாயில் முன்பாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களை நீதிமன்றத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்குப் பிறகு, நீதிபதி பானுமதி, எம்.எல்.ஏ அருள் விக்னேஷை வரும் டிசம்பர் 11ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து, காவல்துறையினர் அருள் விக்னேஷை கடலூர் மத்திய சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்காக, அவரை கள்ளக்குறிச்சியிலிருந்து சாலை மார்க்கமாக கடலூர் சிறைக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை