MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருச்சி வயலூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருச்சி வயலூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - திருச்சி வயலூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

லைஃப் ஸ்டைல்

திருச்சி வயலூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

Admin
Last updated: நவம்பர் 11, 2026 1:32 மணி
Admin
Share
திருச்சி வயலூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா
திருச்சி வயலூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
SHARE

பிரசித்தி பெற்ற திருச்சி வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா இன்று (நவம்பர் 10) காப்புகட்டுதலுடன் வெகுவிமர்சையாகத் தொடங்கியது. அறுபடை வீடுகளுக்கு அடுத்தபடியாக மிக விமர்சையாகக் கொண்டாடப்படும் இந்த விழாவில், நவம்பர் 16-ஆம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா மற்றும் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்ட நிலையில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். காப்புகட்டுதல், கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை என கோலாகலமாக விழா துவங்கியுள்ளது. கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டு விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக, சிங்காரவேலர் நவம்பர் 11-ம் தேதி முதல் 14-ம்தேதி வரை காலை 8 மணிக்கு கேடயத்தில் எழுந்தருளி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். நாள்தோறும் காலை சண்முகார்ச்சனை, இரவு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி பச்சை மயில், சேஷ, ரிஷப, வெள்ளி அன்னம், மயில், ஆட்டுக்கடா வாகனங்களில் திருவீதி உலா காணப்படுகிறது.

நவம்பர் 13-ம் தேதி இரவு 7 மணிக்கு வேலவர் சிங்கார அன்ன வாகனத்தில் எழுந்தருளி யானை முக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும், நவம்பர் 14-ம் தேதி இரவு 7 மணிக்கு சிங்கார வேலவர் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

கந்த சஷ்டி தினமான நவம்பர் 15-ம் தேதி, காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சுப்பிரமணியசுவாமி சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு சிங்காரவேலர் ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளி சூரபதுமனுக்கு பெருவாழ்வு அளிக்கும் (சூரசம்ஹாரம்) நிகழ்ச்சியும், முத்துக்குமார சுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

நவம்பர் 16-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் தேவசேனா சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும். திருச்செந்தூர் உட்பட எந்த ஒரு முருகன் கோயிலிலும் இல்லாத வகையில், வயலூர் முருகன் கோயிலில் தொடர்ந்து 3 நாட்கள் சூரபத்மனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதேபோல், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவிலிலும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததோடு, கோவில் வளாகத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு வயலூர் முருகன் கோயில் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Kanda Sashti FestivalMuruganTrichyVayalur Murugan Templeகந்த சஷ்டி விழாசூரசம்ஹாரம்திருச்சி வயலூர் முருகன் கோயில்முருகன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ராகி தானியங்கள் மற்றும் ராகி மாவு நீரிழிவு நோயாளிகளுக்கு ராகி: அற்புத நன்மைகள்!
Next Article மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காவிரி துலா உற்சவம்: மயிலாடுதுறைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

இந்தியா, உலகத்துடன் நவீன ஆராய்ச்சிகளைப் பகிர வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் நவீன ஆராய்ச்சிகளின் பலன்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள…

நவம்பர் 13, 2026

மோடியுடன் விவாதிக்க தயார் – ராகுல் காந்தி சவால்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர்…

நவம்பர் 13, 2026

வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டவர்கள் வெளிநாடுகளில் விவாகரத்து பெற…

நவம்பர் 13, 2026

பிரதமர் மோடியை பாராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா

இந்திய வெளிநாடு வாழ் காங்கிரஸ் தலைவர் சாம்…

நவம்பர் 13, 2026

சிக்கிமில் 4.9 ரிக்டர் நிலநடுக்கம்: மக்கள் பீதி

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு…

நவம்பர் 12, 2026

You Might Also Like

ஆரோக்கிய நன்மைகளை விளக்கும் கேரட் படம்
லைஃப் ஸ்டைல்

கேரட்: வைட்டமின் ஏ குறைபாடு, கொலஸ்ட்ரால் பிரச்சனைகளுக்கு தீர்வு

வைட்டமின் ஏ குறைபாடு, கொலஸ்ட்ரால் பிரச்சனைகளுக்கு கேரட் சிறந்த தீர்வாக அமையும். பச்சையாக சாப்பிடுவதால் அதிக சத்துக்கள் கிடைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1 Min Read
நடிகை சோனாலி பிந்த்ரே
லைஃப் ஸ்டைல்

புற்றுநோயிலிருந்து மீண்ட சோனாலி பிந்த்ரே: 20 மணி நேர விரதம், ஒருவேளை உணவு

புற்றுநோயிலிருந்து மீண்ட நடிகை சோனாலி பிந்த்ரே, ஒரு நாளைக்கு 20 மணி நேரம் விரதம் இருந்து, ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்ளும் முறையைப் பின்பற்றி வருவதாகத்…

2 Min Read
மல்லிகைப்பூ சூடிய பெண் ஒருவர் புன்னகைக்கிறார்
லைஃப் ஸ்டைல்

மல்லிகைப்பூ நறுமணம்: மனநிலையை மேம்படுத்துமா? ஆய்வு என்ன சொல்கிறது?

மல்லிகைப்பூவின் நறுமணம் மனநிலையை மேம்படுத்தும் சக்தி கொண்டது. தனிப்பட்ட அனுபவங்களுக்கு அப்பால், அறிவியல் ஆய்வுகளும் இதற்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டுகின்றன. மன அழுத்தத்தைக் குறைத்து, மன அமைதியை அதிகரிக்க…

2 Min Read
ரூ.2000-க்குள் சிறந்த வாட்டர் கெட்டில்கள்
லைஃப் ஸ்டைல்

ரூ.2000-க்குள் சிறந்த 7 வாட்டர் கெட்டில்கள்: வாங்குமுன் இதைப் பாருங்கள்!

ரூ.2000-க்குள் சிறந்த 7 வாட்டர் கெட்டில்கள்: உங்கள் பயன்பாடு, குடும்பத்தின் அளவு மற்றும் பட்ஜெட்டைப் பொறுத்து சரியான மாடலைத் தேர்வு செய்தால், பல ஆண்டுகள் சிரமமின்றி பயன்படுத்த…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?